Pages

Sunday, 26 February 2017

தமிழராய் பார்த்துத் திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது


தமிழராய் பார்த்துத் திருந்தா விட்டால்
தமிழை வளர்க்க முடியாது
மதுரை கங்காதரன்
நீ விரும்பினால் துரும்பைக் கூட இரும்பாக்கலாம்
நீ விரும்பினால் இரும்பைக் கூடத் துரும்பாக்கலாம்
நீ நினைத்தால் உமிழைக் கூடத் தமிழாக்கலாம்
நீ நினைத்தால் தமிழைக் கூட உமிழாக்கலாம்

தமிழா! தமிழ் பேச வாய்க் கசக்கின்றதா?
தமிழ் படிக்க மனம் கூசுகின்றதா?  
தமிழ் எழுதக் கைகள் மறுக்கின்றதா?
'தமிழர்' அடையாளம் மட்டும் இனிக்கின்றதோ!

சொற்களின் சுரங்கமானத் தமிழை
சொர்க்கத்தின் அரங்கமானத் தமிழை
தமிழர்களின் களங்கமாக நினைக்கலாமா?
தமிழர்களின் மங்கலத்தை அழிக்கலாமா?

செம்மறி ஆடுகளாய் எப்போது தமிழர்கள் மாறினர்?
செம்மொழித் தமிழென எப்போது தமிழர்கள் உணருவர்?
உணர்வாலும் உள்ளத்தாலும் வளர வேண்டியத் தமிழ்
அலட்சியத்தாலும் ஆணையாலும் வளர்க்க முடியுமா?

குதிரையினைச் சாட்டையாலும் சவுக்காலும் அடக்கலாம்
கத்தியினைக் காட்டினால் மொட்டுகள் மலர்ந்திடுமா?
ஓதுவதாலும் கத்துவதாலும் தமிழ் வளர்ந்துவிடுமா?
அக்கறையாலும் ஆர்வத்தாலும் மட்டுமே தமிழ் வளரும்.

************************



















































நன்றி