மாமதுரை கவிஞர் பேரவையில் நேற்று 26.3.2017 நடந்த கவியரங்கம் நிகழ்ச்சியின் சில மின்படங்கள்
தமிழ்எழுத்தைப்
பயன்படுத்துன் தமிழ்ஏட்டில்
தலைநிமிரும் உன்மானம் வரலாற்றில்
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
ஒருமுறை
பிழை செய்தால் மன்னிக்கலாம்
ஓயாமல்
பிழை செய்தால் என்ன செய்வது?
கேலிக்காக
பேசுகின்ற தமிழ்ச் சொற்களால்
கேட்பார்
அற்று நிற்கின்றது தமிழ்மொழி.
சுதந்திரமாய் விரிந்து பறக்கும்
தமிழ்மொழியில்
சுமையாய் அந்நிய எழுத்துகளை
ஏற்றலாகுமா?
நடிப்புக்காக பிச்சைக்காரன் வேடம்
போடலாம்
நிரந்தரமாகப் போட்டுக் கொண்டால்
மதிப்பார்களா?
சுரணை இருந்தால் தொட்டாலே விழிக்கும்
சுரணை கெட்டாலோ சுட்டாலும் தாங்கும்
தமிழின் மானம் வரலாற்றில் நிலைக்க
தமிழ் ஏடுகளில் தனித்தமிழைப்
பயன்படுத்து.
மொழிகளில் கோனாக விளங்கியத் தமிழை
மொத்தமாய் கோமாளியாக மாற்றி விடாதே
தனித்தமிழால் தமிழின் தரத்தை உயர்த்து
தன்மானம் காக்க அயலெழுத்துகளை அகற்று.
பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும்
பழைமையான தமிழ்மொழிக்குப் பொருந்துமா?
தனித்தமிழின் சிறப்பைக் காக்கத்
தவறினால்
தமிழ்மொழியின் வரலாறு ஏட்டினில்
இருக்காது.
நெல்மணிகளில் பதர்களைச் சேர்க்கலாமா?
தமிழ் எழுத்துகளில் அயலெழுத்து கலக்கலாமா?
பல ஆங்கிலச் சொற்களைத் தமிழென்று நினைக்கும்
பச்சைத் தமிழர்களால் தமிழைக் காப்பது
கடினமே?
***********************************************************
***************************