26.1.2020 அன்று மதுரை வடக்கு
மாசி வீதி மணியம்மை பள்ளியில்
மாமதுரைக் கவிஞர் பேரவையின்
சார்பில், அதன் தலைவர்
கவிமாமணி சி .வீர பாண்டியத்
தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி
தலைப்பு: அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
அறிவியலை
கணிதத்தை அனைவ ருக்கும்
அருந்தமிழில்
ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும்
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
உலகம்
சிறந்திட அறிவியலறிவு வேண்டும்
அறிவியலே
வாழ்வினை மலர்ந்திடச் செய்யும்
கட்டமைப்பு
ஓங்கிட கணிதமறிவு வேண்டும்
கணிதமே
பொருளாதாரத்தை உயர்த்திடச் செய்யும்
அறிவியலும் கணிதமும் மனிதனின் இருகண்கள்
அஃதால்
பெற்றிடும் அறிவோ இருமடங்குகள்
ஆங்கிலமும்
தமிழும் தமிழனின் இருவிளக்குகள்
இரண்டிலும்
கற்றால் பெறுவோமே இருசெல்வங்கள்
இருகுழல்
துப்பாக்கி எதிரிகளை அழிக்கும்
இருமுனை
கத்தி எத்திசையும் தாக்கும்
இருபாட
அறிவு எதையும் சாதிக்கும்
இருமொழிக்
கல்வி விண்ணையும் தொடும்
தமிழைப்
படித்தால் தமிழர் மானம் நிற்கும்
தமிழைத்
தவிர்த்தால் தமிழர் அடையாளம் போகும்
ஆங்கிலத்தைப்
படித்தால் வாழ்வின் நிலை உயரும்
ஆங்கிலத்தைத்
தவிர்த்தால் தமிழனின் நிலை வீழும்.
காந்தமின்
இருதுருவங்கள் இரும்பைக் கவர்ந்திடும்
கணிதமும்
அறிவியலும் காந்தமாய் மாறிடும்
ஆங்கிலமும்
தமிழும் இருதுருவமாய் விளங்கிடும்
அனைவரையும்
கவர்ந்து அகிலமே போற்றிடும் .
**************************
******************