மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த
கவியரங்கம்.
தலைப்பு : அருந்தமிழே நம் அடையாளம்
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல்
தலைமையில், கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், ச.லிங்கம்மாள்,
அஞ்சூரியா.க.செயராமன், பெரி.கரு.சம .சமயக்கண்ணு,
ம.ஜெய்சங்கர்,
கோ.சங்கரநாராயணன், மு.இதயத்துல்லா,
அ.அழகையா, புலவர்.முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, இராமபாண்டியன், பொன்.பாண்டி, பால கிருட்டிணன் ஆகியோர் அருந்தமிழே நம் அடையாளம் என்ற
தலைப்பில் கவிதை வாசித்தனர். முனைவர் வரதராசன் எழுதிய "தன்மானத் தமிழ் போற்றி "
நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த கவிஞர்களுக்கு நூல் ஆசிரியர் நூல் வழங்கினார்.
அருந்தமிழே நம் அடையாளம்!
கவிஞர் இரா. இரவி
உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை
உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழே!
உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன் தமிழன்
உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை
இணையத்தில் கொடிகட்டி பறக்கும் தமிழ்
ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழே இணையத்தில் உச்சம்
அறம்வழி நல்வழி கற்பிக்கும் தமிழ்
அன்பை அகிலத்திற்கு பறைசாற்றிடும் தமிழ்
அகமும் புறமும் இலக்கியத்தில் பாடிய தமிழ்
அகத்திணை புறத்திணை அற்புதமாக உணர்த்திடும் தமிழ்
ஈடில்லா திருக்குறளை ஈந்திட்ட நம் தமிழ்
எங்கும் அறிந்திட்ட திருக்குறள் தந்த தமிழ்
உலக மனிதநேயத்தை உணர்த்திட்ட தமிழ்
உலகிற்கு பண்பாட்டை பயிற்றுவித்திட்ட தமிழ்
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகச் சொல்லிய தமிழ்
ஒப்பற்ற வீரத்தை உலகிற்கு ஓதிய தமிழ்
போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ்
போரில் அநீதியை என்றும் விரும்பிடாத தமிழ்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமுள்ள தமிழ்
பண்டைக்காலம் தொட்டே சிறந்து வரும் தமிழ்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாடு
சமஉரிமையை மானிடற்கு கற்பித்த தமிழ்
அகிலம் அறிந்திட்ட அற்புத மொழி தமிழ்
அருந்தமிழே நம் அடையாளம் உணர்ந்திடுக!
அருந்தமிழே நம் அடையாளம்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
தலையே மனிதனின் அடையாளம்
தமிழே தமிழர்களின் அடையாளம்
தலையில்லா மனிதனுக்கு மதிப்பேது?
தமிழில்லாத் தமிழனுக்கு பெருமையேது?
அந்நிய மொழிகளைப் பேசினால் மகிழ்கிறாயே
ஆடிப்பாடி கைத்தட்டி புகழ்ந்து ஆராதிக்கிறாயே
பகட்டுக்கு உதவலாம் அந்நிய மொழிகள்
பழந்தமிழை மறக்கலாமோ பச்சைத் தமிழா!
குயில் கூவுவதை மறக்கின்றதா?
காக்கை கரைவதை வெறுக்கின்றதா?
குயில் கரைவதை ரசிப்பாயா?
காக்கை கூவுவதை விரும்புவாயா?
ரோசாவுக்குக் காப்பு முள்ளிருக்கு
ராசாவுக்குக் காப்பு படையிருக்கு
தேளுக்குக் காப்பு விசமிருக்கு
தமிழுக்குக் காப்பு தமிழனே
செம்மொழி கௌரவம் தமிழுக்கு உண்டு
செவ்வனே தொண்டாற்று தமிழுக்கு நன்று
தமிழே மூச்சென பாசாங்கை விட்டுவிடு
தெய்வத்திற்கு இணையாய் தமிழை மதித்துவிடு
*********************************************