Pages

Monday, 3 September 2012

யாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN (வெற்றியில் நீங்கள் எந்த ரகம் )


அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்

யாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN 
(வெற்றியில் நீங்கள் எந்த ரகம் )


வெற்றியை 

எண்ணாதிருப்போர் மிக மிக பலர் 

எண்ணுபவர்கள் மிக பலர் 

சொல்மிக்கோர் சிலர் 

எழுதுபவர்களோ மிகச்சிலர்.

ஆனால் 

செயல்படுத்துபவர் ஓரிருவர் 



அவர்களே வெற்றியாளர்கள்.


வெற்றி அல்லது சாதனை என்பதை பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம் பேர். அவர்களுக்கு வேண்டியது .....


திட்டம் + தன்னம்பிக்கை + விடாமுயற்சி + உழைப்பு + நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றியை பற்றிய அறிவு , அதை அடைய வேண்டுமென்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை .... 

 விடாமுயற்சி + உழைப்பு + நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றியை பற்றிய அறிவோடு அதை பெசிகொண்டிருப்பவர்கள் சிலரே. அவர்களுக்கு தேவையானது..

உழைப்பு + நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றியடைந்தவர்களின் சரித்திரத்தை படித்து அதிலிருந்து பலவற்றை எழுதிக்கொண்டிருப்பவர்கள் மிகச்சிலர். அவர்களுக்கு வேண்டியது ...

 நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றி திட்டத்தை தன்னுடைய செயல்மூலம் நடைமுறை படுத்தி சாதனையாளர்களாக மாறியவர்களை கையைவிட்டு எண்ணுமளவிற்கு தான் இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதும் தேவை...
  
உந்துசக்தி 


இதில் நீங்கள் எந்த ரகத்தில் இருக்கிறீர்கள் ?



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

தவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - NO MISTAKES MEANS NO TRY


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 

தவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - 

NO MISTAKES MEANS NO TRY


சிலர் எப்பவுமே ஜம்பமாய் இப்படி பேசுவார்கள்.முக்கியமாக அலுவலகத்தில்!    'என்னுடைய அனுபவத்தில் இதுநாள் வரை எந்த ஒரு தவறும் செய்ததில்லை' என்று. அதேபோல் வீடுகளில் 'என்னோட குடும்ப வாழ்கையில் ஒரு சின்ன காரியமும் தோற்றதா சரித்திரமில்லை' என்று பீற்றிக்கொள்வார்கள். ஆனால் அதில் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.

யார் ஒருவர் தவறே செய்யாதவர்கள் செய்யும் வேலையில் புதுமையோ, புது முயற்சியோ துளிகூட இருக்காது. வாழ்க்கை முழுவதும் எப்போதும் ஒரே மாதிரியான, ஒரே வகையான வேலையைத் தான் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களால் ஒரு பிரயோசனமுமில்லை. அவர்களிடமிருந்து அனுபவத்தையோ புதுமையையோ கற்றுக் கொள்ளமுடியாது.

அதேபோல் ஒருவர்  தவறு செய்கிறானென்றால் அதன் அர்த்தம், அவர்  யாருமே முயற்சி செய்யாத வழியில் அந்த வேலையை செய்ய முயலுபராக இருப்பார். தோல்வி பற்றி கவலை கொள்ளமாட்டார். சிலநேரங்களில் அவரது முயற்சி வெற்றியடைந்து அந்த வேலையை மிக எளிதாக செய்யும் வழியாகவுமிருக்கும். அவருக்கு எந்த வேலை எப்படி செய்யவேண்டும், எப்படி செய்யக்கூடாது என்கிற பல விஷயங்கள் தெரிந்திருக்கும். அவர்கள் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசானாகவும் இருப்பார்.

உதாரணமாக..


சமையலறையில் நடக்கும் தவறுகள் பலவித சுவைகளை உருவாக்குகிறது.


ஆய்வகத்தில் நடக்கும் தவறுகள் புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக அமைகிறது.


அரசியலில் ஒரு தலைவர் செய்த தவறினால் புது தலைவரை உருவாக்குகிறது.


செய்யும் வேலைகளில் புதுப்புது முறையினை தருகிறது.


ஆகவே தவறுகள் - புது பலன்கள் தரலாம்.
  

  
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 









  

வெற்றியாளர் என்பவர் யார் - WHO IS A SUCCESSFUL PERSON

அனுபவ பொன் வரிகள்



மதுரை கங்காதரன் 

வெற்றியாளர் என்பவர் யார்
WHO IS A SUCCESSFUL PERSON


வெற்றி என்பது எந்த ஒரு செயலிலும் முதலில் வருவது என்பது அர்த்தம் கிடையாது. வெற்றி என்பது ஒவ்வொரு செயலிலும் முன்பை காட்டிலும் சிறப்பாக, அதிகமாக, தரமாக் செய்வதுதான்.

சில உதாரணங்கள். 


தொழில் நடத்துபவர் : 

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வியாபாரத்தை குறைந்தது 10% மாவது உயர்த்துவது தான் வெற்றி.

வேலை செய்பவர்கள் : 

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய திறமைகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்வது அல்லது புதிதாக சிலவற்றை கற்றுக்கொள்வது வெற்றி.

பள்ளி மாணவன்: 

ஒவ்வொரு பரிட்சையிலும் வாங்கும் மதிப்பெண்கள் சிறிதளவாவது முன்னேற்றம் இருப்பது வெற்றி 

வாழ்க்கை :

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்கையின் தரத்தை, அந்தஸ்தை கூடியவரையில் உயர்த்திக் கொள்வது வெற்றி 

சேவை :

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய சேவையின் மதிப்பை சற்றேனும் உயர்த்திக் கொள்வது வெற்றி.





இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 



'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன் 

'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH  


நாம் இறக்கும்போது எதுவுமே கொண்டு போக முடியாது. அதாவது பட்டினத்தார் கூறியது படி 'செத்த பின் காதறுந்த ஊசி கூட உடன் வராது !' என்பது உண்மை தான். ஏன் ஒரு செல்லாத காசை கூட உடன் கொண்டு செல்ல முடியாது, கொண்டு செல்லவும் முடியாது? அதனால் இருப்பதை துறந்துவிட்டு அதாவது மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் கடைசி வரை 'பரதேசியாக வாழ் ' என்கிற அர்த்தத்தில் தவறாக புரிந்துகொண்டு  தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களை தங்களுடைய குடும்பத்திற்கும் கூட கொடுக்காமல் 'வாழ்கையில் முக்தி பெற அனைத்தையும் துறக்கவேண்டும் ' என்று போதிக்கும்  உழைக்காத வாய்ச்சொல் ஜாலம் புரியும் போலி சாமியார்களிடத்தில் ஏமாந்து வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வாங்கிய போலி சாமியார்களோ அதை வைத்துக்கொண்டு ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். 

அதுவுமில்லாமல் சிறிய வயதில் 'எல்லாம் துறந்தவன்' என்பவரிடத்தில் தங்கள் சொத்து முழுவதும் கொடுத்து காலம் பூராவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களிடம் கொடுத்த செல்வம் ஒருபோதும் திரும்ப கிடைக்காது.  அத்தகைய போலிமகானாக இருப்பரிடத்தில் ஒரு பைசா கூட கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் பேச்சு உனக்கு ஒருவேளை சாப்பாட்டிற்கும் உதவாது.  

அறிவுள்ளவனோ, உழைக்க முடியும் என்கிறவனோ பரதேசியாய் காலம் முழுவதும் வாழ்வதில் என்ன பிரயோஜனம்?  


உண்மை       அர்த்தம்     என்னவென்றால், உனது அறிவுள்ள வரை உழைத்து அல்லது         மற்றவர்களின்    வாழ்க்கைக்கு    உதவி    செய்து    கிடைக்கும் வருமானத்தில், அல்லது      சேர்த்து வைத்த செல்வங்களை , சொத்துகளை நியாயமான        வழியில்       தன்னை    நம்பியிருப்பவர்களுக்கும்,     உதவி செய்தவர்களுக்கும், சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கும் யார் யாருக்கு  எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதை கடைசி காலத்தில் சந்தோஷமாக பிரித்து கொடுத்து இறக்கும்போது அப்படி துறப்பதேயாகும்.

'எல்லாம்      துறந்தவன்' என்று    யாருக்கும்     உதவாமல்   சோம்பேறியாய் உழைக்காமல் இருந்தால் யாருக்கும் எந்த ஒரு பிரயோசனமும் கிடையாது. ஆக மூச்சு இருக்கும் வரை உழை அல்லது உதவி செய். அறிவு ஒத்துழைப்பு இருக்கும்வரை பாடுபடு. உழைக்கும்   மக்களுக்கு   உதவி   செய்.  அது வீண் போகாது. உன் வாழ்நாள் முழுவதும் அவர்கள் பேசுவார்கள்.

நடப்பது என்னவென்றால், அப்படி செல்வமிருப்பவர்களின்     வீட்டில், அந்த சொத்து கிடைக்குமென்று    கடைசி   வரை   மற்றவர்கள்        உழைக்காமல் சோம்பேறியாய் இருக்கின்றனர். உழைப்பவரோ    கடைசிவரை      உழைத்து சேர்த்த செல்வங்களை பகிர்ந்து கொடுக்காமல் அனைவரையும் கஷ்டத்தில் விட்டு விட்டு செல்கின்றனர். அந்த சொத்தோ யார்   யாரோ    அனுபவிக்கும் நிலைமையை உருவாக்கிவிடுகின்றனர்.



கடைசி காலத்தில் உங்கள் விருப்பப்படி சந்தோஷமாக பகிர்ந்து கொடுத்து துறந்த நிலையுடன் உலகை விட்டுசெல்வதாகும். 


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 



      
  

உங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா - IS YOUR INCOME HELP YOU A RICH MAN ?

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன் 

உங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா -

IS YOUR INCOME HELP YOU A RICH MAN ?



சராசரியாக எல்லோரும் நினைப்பார்கள், அதிகமாக சம்பளம் வாங்கும் அனைவருமே பணக்காரர்களாக இருப்பார்கள் என்று. அதேபோன்று நல்ல தொழில் செய்து சம்பாதிப்பவர்கள் பெரிய பணக்காரர்கள் தான் என்று. அவைகளெல்லாம் மேலோட்டமாக பார்க்கும்போது அப்படி எண்ணுவது உண்மை போலத் தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல சம்பாத்தியம் பெறுகிறவர்கள் அதைவிட அதிகம் செலவழித்தால் அவர்கள் கடனாளியாய் மாறிவிடுவர்.

அதேபோல் தொழிலில் நல்ல வருமானம் உள்ளவர்கள் தேவையில்லாமல் முதலை முடக்கும்படி செலவு செய்தால் அவர் கூடிய விரைவில் ஆண்டியாகும் வாய்ப்பு அதிகம்.

அதாவது வரவுக்கு மேல் செலவு செய்தல் எப்பொழுதுமே  கூடாது. உங்கள் சேமிப்பை பொறுத்து தான் நீங்கள் பணக்காரரா இல்லையா என்பது தெரியும்.


ஒன்றை வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சேர்க்கும் பணமென்பது சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் போல கொஞ்சம் கொஞ்சமாக அல்லது ஒவ்வொன்றாக வருபவர்கள் போன்றது. நீங்கள் திட்டமில்லாமல் இருந்தால் சினிமா முடிந்தவுடன் எல்லாரும் மொத்தமாக வெளியே செல்வது போன்று சேர்த்த செல்வம் முழுவதும் ஒரேயடியாய் போய்விடும்.


சோறு - என்பது அன்றைகன்று சாப்பிடுவது 

அரிசி  - குறுகியகால்  தேவைக்கு உபயோகமாய் இருப்பது.

நெல்  - என்பது உன் வருங்காலத்திற்கு வாழ்க்கை முழுவதிற்கும் தேவைபடுவது.



பணக்காரர் = சம்பாதிப்பு - சேமிப்பு - செலவு - கடன் 

எல்லா நெல்லையும்  அரிசியாகவோ பின் சோறாக்கி சாப்பிட்டு விடாதே.


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 






உன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை - NEED A SELF CONFIDENT PUNCH TO YOU

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன் 

உன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை -
NEED A SELF CONFIDENT PUNCH TO YOU


யாணைக்கு கோபம் (மதம் பிடித்தால்) வந்தால் எப்படி இருக்கும்? தன்னைச் சுற்றியுள்ளவர்களை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடும். அந்த சுபாவத்தினால் தான் அந்த காலத்தில் எதிரிகளை அழிப்பதற்கு தங்களுடைய படைகளில்  யாணைகளை அதிகமாக சேர்த்துக்கொண்டனர். அப்படிப்பட்ட பலசாலியான  யாணை  எப்படி அப்பாவி சுபாவம் கொண்ட பாகனிடம் அடிபணிந்து கிடக்கின்றது.


பொதுவாக முன்பெல்லாம்  யாணையைப் பிடிப்பதற்கு பெரிய பள்ளம் தோண்டி அதன்மேல் அந்த பள்ளம் தெரியாதவாறு யாணைக்கு பிடித்த சருகு, இலை தளைகளை  போட்டு மூடிவிடுவார்கள். வருகின்ற  யாணையோ இதை அறியாமல் அதன்மேல் கால் வைத்தவுடன் அந்த பள்ளத்திற்குள் விழுந்துவிடும். விழுந்த   யாணை   ஆவேசத்துடனும், அக்குரோஷத்துடன் அதிலிருந்து தப்பிப்பதற்காக முட்டும் மோதும்.


தன்  பலம் உள்ளவரை மோதிய  பின் விரைவில் சோர்ந்துவிடும். ஒருகட்டத்தில் தன்னால் எதுவும் முடியாது தன்னுடைய பலம் குறைத்துவிட்டது என்று எண்ணி அமைதியாகிவிடும். அமைதியான யாணை வெளியே வந்தபிறகு யாணைப் பாகன் சொன்னபடி நடக்கும். பிறகு எப்படி போரில் இந்த அமைதியான யானயை பயன்படுத்துகிறார்கள்? யாணை போரில் நுழைந்தவுடன் யாணை மேல் உட்கார்ந்து சவாரி செய்பவன் வைத்திருக்கும் கூமையான் அங்குசம் கொண்டு தலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குத்து குத்தியவுடன் மீண்டும் பழைய முழுவலிமையுடன் 'தன பலம் எங்கும் போய்விடவில்லை . என்னுடன் தான் இருக்கின்றது' என்று காட்டிவிடும்.

அதுபோல நமது எண்ணங்களும் அப்படித்தான். சில தோல்விகளின் அனுபவத்தால், வாழ்க்கை கஷ்டத்தினால், தீர்க்க முடியாத பிரச்சினைகளால் மனம் எந்த வேலையும் செய்யவிடாமல் சோர்வை கொடுக்கின்றது. 'தன்னிடமிருந்த பலம் குறைந்துவிட்டது. இனி என்ன முயற்சி செய்தாலும் பலன் இருக்காது' என்று முடிவுக்கு வநதுவிடும். 

அப்போது தான் சிறந்த தலைவரோ, நிர்வாகியோ, ஆலோசகரோ, குருவோ, ஆசானோ அவர்களின் தலையில் 'தன்னம்பிக்கை' என்னும் அங்குசத்தை குத்தி அவர்களுக்குள் இருக்கும் உழைப்பையும் திறமையும் வெளியே கொண்டுவரசெயவார்கள்.


அப்படி உனது எண்ணங்கள் சோர்வடையும்போது யாராவது 'அங்குசம் ' கொண்டு உன் தலையில் குத்துவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்காதே . விடா - முயற்சி, நம்பிக்கை கொண்டு உன்னை நீயே குத்திக்கொள். அதுதான் உன் திறமைகளை வெளியே கொண்டுவரும் வழி . அதுபோலத்தான் மாடு, குதிரை வேகமாக ஓடுவதற்கு 'தார்குச்சி' கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் குத்தி ஓடவைப்பார்கள்.  


உங்கள் திறமை வெளியே கொடுவர 'அங்குசம்' போன்று தன்னம்பிக்கையை  மூளையில் ஏற்றிக்கொள்ளுங்கள்.   

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com