Pages

Monday, 17 September 2012

வாழ்க்கை என்பது ஒருவழி பாதை. வெற்றிப் பாதையின் வழி எது - LIFE IS A ONE WAY PATH

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

வாழ்க்கை என்பது ஒருவழி பாதை.-
 வெற்றிப்  பாதையின் வழி எது -

LIFE IS A ONE WAY PATH ! 
WHICH ONE WILL BE THE SUCCESS PATH - 



வாழ்க்கை என்பது ஒருவழி பயணம். நீங்கள் பயணிக்கும் பாதை மாறிப்போனாலோ,தவறி போனாலோ   பழைய இடத்திற்கு  திரும்ப வர இயலாது. ஆகவே பயணிக்கும் போதே மிகச் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதனாக பிறந்த  ஒவ்வொருவரும்    மூன்று காலங்களின் தொடர்புகளை தவிர்க்க முடியாதனாகவே  இருக்கிறான். அதாவது மனித  வாழ்க்கை பயணம் கடந்த நாட்கள் (கடந்த காலம்) , இப்போது பயணிக்கும் நாள் (நிகழ காலம்), இனி வரும் நாட்கள் (வருங்காலம்) என்று மூன்று காலங்களாக பிரித்து பயணிக்கிறான்.

ஒரு சிலர் தன் பாதையை தாங்களே ஒரு புதிய பாதையை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து அதில் பயணம் மேற்கொள்கிறான்.

சிலர் எதுக்குடா வம்பு ! என்று சிலரின் பாதையில் பின்பற்றி செல்கிறான்.

பலர் எந்த பாதையில் பயணம் செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கின்றனர்.

ரொம்ப பேர் பாதையை பற்றி கவலைபடாமல் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு 'நமக்கு கொடுப்பினையில்லை ' என்று அங்கேயே இருந்துகொண்டு காலத்தை வீணாக்கி வருகின்றனர்.  

ஏனென்றால் நீ பயணிக்க பயணிக்க பாதை மூடிவிடுகின்றது.

உன்னுடைய 'காலம் ' என்ற வண்டி :


ஒவ்வொரு மனிதன் பிறந்த உடன்  அவனின்  'வாழ்க்கை ' பயணத்திற்கு ஒரு வண்டி கொடுக்கபடுகிறது. அதன் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. (அதாவது 24 மணி நேரம்). அதன் அமைப்பு எப்படியென்றால்  'சைக்கிள்'  (மிதி வண்டி) போன்றது.. நீங்கள் சைக்கிளைப் போன்று வாழ்க்கை வண்டியை முன்னே தான் ஓட்டமுடியுமே தவிர பின்னே  (Reverse) ஓட்டமுடியாது. அதன்  இரு சக்கரங்கள் உனது திறமையும் அறிவும் என்று வைத்துக் கொள்ளலாம்., மிதிக்கும் 'பெடல்' என்பது உனது கடின உழைப்பும், இடைவிடாத முயற்சியுமாகும். அதில் ஒரு பொதி சுமக்கும் கூடை , அதாவது அதில் உங்களது கடந்த கால சுமைகளை அடங்கியது 

இப்போது ஒரு கேள்வி. பின் ஏன் ஒரு சிலரால் வண்டியை வேகமாக ஓட்டமுடிகின்ற்றது?சிலர் மித வேகமாகவும், பலர் மிகவும்  மெதுவாகவும் ஓட்டுகின்றனர்?

இதற்கு பதில் !

 

நீங்கள் 'சைக்கிள் ' ஓட்டும் பந்தயத்தைப் பார்த்திருக்கீறீர்களா ? மிகவும் வேகமாக ஓடும் சைக்கிளையும் , மிகவும் மெதுவாக ஓடும் சைக்கிளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பல உண்மைகள் தெரிய வரும்.

அதாவது, வேகமாக சைக்கிளில் தேவையில்லாத பல பாகங்கள் இருக்காது. மிகவும் லேசான உலோகத்தால் செய்யப் பட்டியிருக்கும். ஓட்டுபவர் , தன்னுடைய பாதையில் தெளிவான கவனமும், வேகமாக 'பெடல் ' போடுபவர்களாகவும் இருப்பார். இவைகளெல்லாம் வேகமாக ஓடுவதற்கு உதவிடும்.


அதே போல வேகமாக வாழ்க்கை பயணிப்பவர்கள், தங்களிடத்தில் கடந்த கால , பயன்பெறாத, தேவையில்லாத சுமைகளை அதாவது தோல்விகள், பிரச்சனைகள், துன்பம் தரும் விஷயங்கள் போன்றவை வெட்டியாக சுமக்காமல் போகின்ற வழியில் அவைகளை மீண்டும் தலைதூக்காதவாறு புதைத்துவிட்டு, மகிழ்ச்சி தரும் எண்ணங்கள், சிறு சிறு வெற்றிகள், வாழ்க்கைக்கு பயன் தரும் அனுபவங்கள் மட்டுமே தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். துன்ப சுமைகளோ பயணத்தின் வேகத்தை 100 மடங்கு குறைக்கும் என்பது வேகமாக செல்பவர்களுக்குத் தெரியும். ஆனால் இன்ப எண்ணங்களோ மன ஊக்கமும் , தன்னம்பிக்கையும் கூட்டி வேகத்தை 100 மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பது அவர்களது அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம். அதை எப்போதும் மனதில் வைத்திருப்பர்.  


மேலும் வேகமாக ஓட்டுபவர்கள், தங்களுடைய பாதை தெளிவான இலக்கை நோக்கியும், திட்டமிட்ட சரியான பாதையாக இருக்கும். தங்களுடைய வருங்கால இலட்சியத்தை  அடைய , கடந்த கால அனுபத்தை கொண்டு இன்று இருக்கும் நிகழ்காலத்தில்  திட்டமிடுகின்றனர். ஆகவே அவர்களின் வாழ்க்கைப் பயணம் வேகமாகவும் வெற்றிப்பயணமாகவும் இருக்கும். அவர்கள் ஒருபோதும் கடந்த கால நிகழ்வுகளை அனாவிஷயமாக பேசுவதோ, வருங்கால கனவு காண்பதிலோ நிகழ்காலத்தில்  வீணாக்குவதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேவையில்லாச் சுமைகளை புதைத்து, மனவூக்கம் தரும் தன்னம்பிக்கை கொண்டு விடா முயற்சியும், கடினமான உழைப்பின் மூலம் தங்களுடைய திறமை , அறிவை வளர்த்துக்கொண்டு திட்டமிட்டபடி சரியான பாதையில் தெளிவான இலக்கை அடைவதே!

ஆகவே கடந்த கால சுமைகளை புதைத்துவிடுங்கள். உங்களை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சியான அனுபவத்தை வைத்துக்கொள்ளுங்கள்.


நிகழகாலத்தில் திட்டமிடுங்கள்.


வருங்காலத்தில்  உங்களின் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம். 

 இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Sunday, 16 September 2012

'ஈகோ' வை விரட்டினால் நன்மைகள் ஆயிரம் ம் வரும் - THOUSANDS OF BENEFITS , IF YOU GET RID OF 'EGO'

அனுபவ பொன்வரிகள் 



மதுரை கங்காதரன் 


'ஈகோ' வை விரட்டினால் 
நன்மைகள் ஆயிரம் வரும் 

THOUSANDS OF BENEFITS , IF YOU GET RID OF 'EGO'  



'ஈகோ ' என்பது எதற்கெடுத்தாலும் 'நான் தான் செய்தேன்'! 'நான் சொல்லும்படி தான் நடக்கணும்'! 'என்னால் தான் முடியும்'!  'என்னை விட்டால் யாரும் செய்ய முடியாது'! என்று நான் ...எனது  .... போன்ற கடுமையான சொற்கள் சிலர் உபயோகிப்பதை கேட்டிருப்பீர்கள். அது பெருபாலும் வறட்டு கௌரவத்தையும், சுயநலத்தின் அதிகபட்ச வெளிப்பாடு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். மேலும் அது ஒரு சர்வதிகாரத்தின் தோரணை , எல்லோரும் வெறுக்கும்படியான குணமும் என்று சொல்லலாம்.



'ஈகோ' இருக்கும் நபரைச் சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலும் கஷ்டத்தையும் , துயரத்தையும்  தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஆட்கள், நல்லது எதைச்  சொன்னாலும் கேட்கவே மாட்டார்கள். காதிலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் என்ன நினைக்கின்றனரோ அதுவே நடக்கனுமென்று உத்தரவு போடுவார்கள். மற்றவர்களில் கஷ்ட நஷ்டம், நன்மை தீமை பற்றி அவர்களுக்கு சிறிதும் கவலை இருக்காது.

அந்த சுயநலம் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாயும் இருக்கும். அவர்களுக்கு கீழ் தான் எல்லோரும் அடங்கி நடக்கனுமென்கிற எண்ணங்கள் மேலோங்கியே இருக்கும். ஈகோ மனிதர்கள் தங்கள்  வாழ்கையில் அவரும் முன்னேற மாட்டார். மற்றவர்களையும் முன்னேறவிடமாட்டர்கள். ஈகோ வும் ஒரு அறியாமையே அல்லது எண்ண வளர்ச்சி இல்லாமையே! அதாவது தங்களைத் தாண்டி அனைவரும் முந்தி விடுவார்களோ என்கிற பயம் அல்லது முன்னெச்சரிக்கை வெளிப்பாடு தான்.



ஈகோ ஒருவரையும் ஒட்டவிடாது. கூட்டு உறவை விரும்பாது. 

'ஈகோ' என்றால் 'நான்'. ஆங்கிலத்தில் அதை ' I ' (ஐ) என்று எழுதுவார்கள். எழுத்திலே நிமிர்ந்து நிற்ப்பது போல தெரிகின்றதா? கூடிய விரைவில் அவர் சாய்த்துவிடுவர். அப்படி சாய்ந்து விட்டால் அந்த எழுத்து ' -- ' என்று ஆகிவிடும். அதாவது ஆங்கிலத்தில் ' மைனஸ் ' (தமிழில் கழித்தல் ) என்பது குறிக்கும். அதாவது ஈகோ இருந்தால் உனக்கு 'நஷ்டம் ' என்று காட்டுகின்றது.


               


இரண்டு ஈகோ உள்ளவர்கள் , அதாவது I & I என்று வைத்துக்கொள்வோம். அதில் யாராவது வளைந்து (சாய்ந்து) கொடுத்தால் என்ன கிடைக்கும். அதாவது I & --  இரண்டும் சேர்ந்தால் ' + ' என்று வரும். அப்படித்தானே. அதாவது ஈகோ வை விட்டு கொடுத்தால் உங்களுக்கு ' நன்மை ' தான் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.



சரி ! இரண்டு ஈகோ ஆட்கள் லேசாக சாய்ந்தால் அதாவது ' / ' & ' \ ' என்று இருந்தால் என்னகிடைக்கும்? அதாவது ' X ' (பெருக்கல் - Multiple)  என்று தானே கிடைக்கும். அதாவது "கூட்டல்" ( + ) விட பெருக்கல் ( X ) பெரிதல்லாவா? ஆகவே 'நான்' என்று நிமிர்ந்து நிற்காமல் சாய்ந்தோ அல்லது சற்று சாய்ந்து விட்டுக்கொடுத்தால் உங்களுக்கு என்றும் +  அதாவது கூடுதல் வெற்றி அல்லது  ' X ' அதாவது வெற்றிகளின் பெருக்கம் தான்.

                         

அதை தவிர்க்க நீங்கள் உங்களுக்குள் இருக்கும் பயத்தை, தாழ்வு மனபான்மை ஒழித்து  அறிவை வளர்க்கும் சிந்தனையை பெற்று தன்னம்பிக்கையுடன் நீங்கள் நடந்துகொள்வீர்களானால் உங்களுக்கு எந்நாளும் வெற்றி தான். மேலும் ஈகோ வை விரட்ட உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகாவும் ஒரு சிறந்த வழியாகும்.

குடும்பத்தில் இருக்கும் 'ஈகோ' பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக மாற்றிவிடும். இரக்க நெஞ்சங்களை அரக்கத்தனமாக மாற்றிவிடும். கூட்டு குடும்பத்தை சிதறடித்து விடும்.

ஒரு தலைவனில் 'ஈகோ' நாட்டு மக்களுக்கு எந்நாளும் கஷ்டத்தை கொடுக்கும்.

ஒரு நிறுவன தலைவர் / அதிகாரியின் 'ஈகோ' அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையை இருந்திடும்.

ஒரு மனிதனில் 'ஈகோ' என்பது , அவன் தனக்குத்தானே மெதுவாக விஷத்தை (Slow Poison) ஏற்றிக்கொள்வது போல.     


ஈகோ வை விட்டுத்தள்ளுங்கள்!




உங்களுக்கு + அல்லது  X  உறுதி தான்  



     இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Saturday, 15 September 2012

வாய்ப்பு மேகம் வெற்றி மழையாகப் பொழியும் வழி A WAY TO CONVERT OPPORTUNITY CLOUD TO SUCCESSFUL RAIN

அனுபவ பொன்வரிகள்


மதுரை கங்காதரன்

வாய்ப்பு மேகம் 
வெற்றி மழையாகப் பொழியும் வழி
A WAY TO CONVERT OPPORTUNITY CLOUD TO SUCCESSFUL RAIN


பாத்திரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தண்ணீர் வரும் குழாயின் வாய்க்கு  (விழுவதற்கு) கீழ் நேராக இருந்தால் தான் அந்த பாத்திரத்தில்  தண்ணீர் நிறையும்.


என்னுடைய 'தன்னம்பிக்கை ' ஊட்டும் பயிற்சி வகுப்பில் நடந்த நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எப்போதும் எனது பயிற்சி வகுப்பில் முதலில் அதில் பங்கெடுத்துக் கொள்கிறவர்கள் ஆர்வம் உண்டாக்கும் வகையில் வாழ்கையில் , வகுப்பில் பயனுள்ள வகையில் ஒரு விளக்கத்தை செய்முறையுடன் கொடுப்பேன். அப்போது தான் அவர்கள் எப்போதும் அதனை மறக்கமாட்டார்கள்.


அதன்படி, நான் ஒரு பாத்திரத்தை (தூக்கு வாளி போன்று வாய் அகலமுள்ளது) எடுத்துக்கொண்டேன். பிறகு ஒரு சிறிய டம்ளரில் தண்ணீரை  மேஜையின் மீது வைத்தேன். அவர்களிடத்தில் " யாராவது ஒருவர் முன்வந்து இந்த சிறிய டம்ளரில் இருக்கும் தண்ணீரை அந்த பாத்திரத்தில் ஊற்றுகிறீர்களா ? " என்று கேட்டேன். எல்லோரும் நான்! நீ! என்று போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.


ஒருவரிடத்தில் அந்த தண்ணீர் உள்ள சிறிய டம்ளரை கையில் கொடுத்தேன். கொடுத்த வேகத்தில் அந்த பாத்திரத்தில் ஊற்ற போனார். நான் உடனே அவரைத் தடுத்து "இப்போது வேண்டாம். நான் சொல்லும்போது ஊற்றினால் போதுமென்றேன்."


பிறகு அந்த பத்திரத்தை சுமார் 20 அடி தூரத்தில் வைத்தேன். இப்போது அவரிடத்தில் "இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை அந்த பாத்தித்தில் கொஞ்சம் கூட சிந்தாமல், வீணாக்காமல் முழு தண்ணீரையும் ஊற்றும்படிச் சொன்னேன்." சொன்னவுடன் முழி முழி வென்று முழித்தான். 'முடியாது' என்பதை ஜாடையில் தலையை ஆட்டினான்.


அதன் பிறகு அந்த பாத்திரத்தை அவர் வைத்திருக்கும் டம்ளரை நோக்கி 5 அடிக்கு முன்னால் இழுத்து வைத்தேன். மீண்டும் 'முடியாது 'என்றான். மேலும் ஒரு  5 அடி முன்னால் வைத்தேன்  (இப்போது 10 அடி தூரத்தில் பாத்திரம் உள்ளது). அதற்கு மேலும்  5 முன்னால் .....ம்ஹூம் ... கடைசியாக 5 அடி முன்னால் வரும்போது அவன் வைத்திருக்கும் டம்ளர் நேராக அந்த பாத்திரம் இருந்தது. இப்போது ஊற்றச் சொன்னேன். ஒரு சொட்டு சிந்தாமல் சரியாக ஊற்றினான். அதற்கு எல்லோரையும் கையை தட்டச் சொல்லி பாராட்டை தெரிவித்தேன். 


இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் , நான் பாடம் நடத்தும்போதும் அல்லது யாராவது ஒரு விஷயத்தை  பேசும்போது (அது டம்ளரில் இருக்கும் தண்ணீர் போன்றது) பாத்திரம் போல கவனத்தை எங்கேயோ வைத்துக்கொண்டால் நான் என்ன சொன்னாலும் பிரயோஜனம் இருக்காது, அவைகள் உங்களது காது வழியாக நுழைந்து  மூளையில் பதியாது. 

இந்த செய்முறை பயிற்சியிலிருந்து , அவர்களுக்கு   வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியதை பாடத்தை  போதித்தேன். அதாவது நான் உங்களுக்கு பாடம் நடத்துவது என்பது வாழ்கையில் உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியான நேரங்கள், நல்ல சிந்தனைகள். அதை வாங்கிக் கொள்ளவேண்டுமென்றால், உங்கள் கவனம் பாத்திரம் போல மிகவும் தள்ளி இருந்தால் நான் என்ன சொன்னாலும் உங்கள் மூளையில் ஏறாது.

"ஆகவே உங்கள் கவனத்தை ஒருநிலைப்படுத்தி உங்களது பார்வையை ஒருமனதோடு நேருக்கு நேராக வைத்துகொண்டு என்னை நன்கு கவனித்தால் தான் நான் சொல்லும் விஷயங்களும், கொடுக்கும் சிந்தனைகளும் உங்கள் மனதில் ஆழமாக பதியும்" என்று சொன்னேன்.

அதாவது உனது கவன பாத்திரம் ஏன் தள்ளியிருகின்றது? (எடுத்துக் காட்டாக 20 அடி). உங்களுடைய பிரச்சனைகளை நினைப்பது  (5 அடி என்று கொள்), நீங்கள் அடைந்த ஏமாற்றங்கள் (அது ஒரு 5 அடி), எதிர் கொண்ட தோல்விகள் (அதுவும் ஒரு 5 அடி), உங்களுக்கு ஏற்பட்ட ஆறாத வடுக்கள் (அது ஒரு 5 அடி). இவைகள் தான் தள்ளி வைப்பது.

ஆகவே  வாய்ப்புகளை , மகிழ்ச்சிகளை , நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும்போது உங்களது கவனம்  தள்ளி போகும் அல்லது சிதறும் படியாக பிரச்சனைகளை நினைப்பதை தூக்கி எறிந்து விடுங்கள். அதன் பிறகு ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் வடுக்களில் என்று எல்லாவற்றையும் அகற்றுங்கள். இப்போது உங்கள் கவனம் 100%   கிடைத்த வாய்ப்புகளை , மகிழ்ச்சிகளை , நல்ல விஷயங்களில் செலுத்தும்போது நீங்கள் கட்டாயம் வெற்றி பெறமுடியும்.

வெற்றிக்கு இரண்டு வழிகள் :

ஒன்று பாத்திரத்தை டம்ளரை நோக்கி நகர்த்துவது முதல் வகை.  டம்ளர் பாத்திரத்தை நோக்கி நகர்த்திவது இரண்டாம் வகை. நான் பாடம் எடுப்பது முதல் வகை. ஐ.நெட், டி .வி.. ரேடியோ, மொபைல் போன்றவை இரண்டாம் வகை.

அதுபோல:


பூமியை தோண்டினால் தண்ணீர் வரும். சரி தான்!  ஆனால் பாலைவனத்தில் தோண்டினால் தண்ணீர் கிடைக்குமா? நாம் தான் தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடித் தோண்டவேண்டும்.


மழையானது கடலில் விழுந்தால் யாருக்கு என்ன லாபம். அது நிலத்தில் விழுந்தால் தான் மக்களுக்கு பயன். அதற்கு பசுமையான உயர்ந்த மரங்கள் அந்த வாய்ப்பு மேகத்தை தன் பக்கத்தில் இழுத்து மழையாக பொழிய வைக்கின்றது.

அதுபோல வேகமாக செல்லும் வாய்ப்பு மேகங்கள் உங்களுக்கு வெற்றி மழையாக கிடைக்கவேண்டுமென்றால் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு எதிர்கொள்ளுங்கள். வெற்றியை எளிதாக அடையலாம்.

ஆகவே
ஒன்று


வெற்றி கொடுப்பவர்களை நோக்கி நகருங்கள்!

அல்லது


வெற்றி கொடுப்பவர்கள் உங்களை நோக்கி வரும்படி இழுத்துகொள்ளுங்கள் !

இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Friday, 14 September 2012

'வெற்றி ' ஒரு கால்பந்தாட்ட 'கோல் கீப்பர் ' 'SUCCESS' IS A FOOTBALL GOAL KEEPER

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

'வெற்றி ' ஒரு கால்பந்தாட்ட 'கோல் கீப்பர் '
'SUCCESS' IS A FOOTBALL GOAL KEEPER


ஆம், உங்களுக்கு கால்பந்தாட்டம் விளையாட்டு பற்றி ஓரளவு அல்லது நன்றாகவே தெரியுமல்லவா?  தெரியாவிட்டால் இதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். ஆட்டத்தின் வெற்றி என்பது பந்தை 'கோல் போஸ்ட் ' க்குள் அனுப்பினால் தான் வெற்றி. இரு அணிகளின் பலம் சமமாக இருந்தால் 'கோல் கீப்பருக்கு ' வேலை குறைவு. பந்து  'கோல் போஸ்ட்' எல்லையை நெருங்க நெருங்க ஒரு அலாதியான சுறுசுறுப்பு கோல் கீப்பருக்கு வந்துவிடும். அவரின் கவனம் முழுவதும் பந்தில் மீது தான் இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் கோல் போஸ்ட்குள் தாண்ட விடகூடாது என்கிற வெறிதான் இறக்கும். அப்படி பந்து எல்லைகுள் வராமல் இருக்கின்ற வரைக்கும்  அவருக்கு வேலை குறைவு அல்லது இல்லை . அப்போது வெறும் பந்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமானது. 'கோல் ' அடிப்பது ஒருவரது அல்லது அணியின் திறமையும் பலவீனத்தியும் பொறுத்து கோல் போடும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது தெரிந்து விட்டதா?


இதற்கும் வாழ்கையின் வெற்றிக்கும் என்ன சம்பந்தம் ? என்பதைப் பார்ப்போம்.


ஒருவர் வாழ்கையில் வெற்றி பெற எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள். கூட்டாகவோ அல்லது தனியாகவோ? முதலில் தன் முயற்சியினாலும் , பயிற்சியினாலும், தன்னம்பிக்கையாலும் பலப்படுத்திக்கொண்டு முன்னேற்ற பந்தை எடுத்துச்செல்கிறான். அதை பார்த்துக் கொண்டிருக்கும் எதிரி / போட்டியாளர்கள் அப்போது என்ன செய்கிறார்கள்?  அவர்களின் சக்தியையெல்லாம் உபயோகித்து தடுக்க பார்கின்றனர். சில வேலைகளில் சகாக்களும் , உறவுகளும் அடங்குவர். அதுவரை வெற்றியென்ற கோல்கீப்பர் அதை சாதாரணமாக பார்த்துகொண்டிருப்பவர்  தனதருகில் தனியாகவோ அல்லது கூட்டாக பந்தைக் கொண்டு முன்னேறுபவர்கள் தனது பக்கத்தில் வர வர சுறுசுறுப்பாகி எப்படியாவது பந்தை (முன்னேற்றத்தை) தடுபதற்க்கு மிக மிக திறமையாக பலவிதங்களில் தடுக்க நினைகிறார் . அந்த சமயத்தில்  நீங்கள் மட்டும் தனியாக அல்லது கூட்டாக உள்ளவர்களின் ஆர்வம், திறமை, தன்னம்பிக்கை மற்றும் 'வெற்றி பெற்றே தீருவோம்' என்கிற முனைப்பும், வெறியால் மட்டும் தான் அந்த 'வெற்றி' என்ற கோல் கீப்பரையும் தாண்டி உங்களை முன்னேறச் செய்கிறது.


ஒரு சிலர் மட்டுமே கடுமையான முயற்சி மற்றும் உழைப்பினால் சரியாக வெற்றி என்கிற கோல் கீப்பரையும் கடந்து முன்னேறுகிறார்கள்.


சிலர் சில தடவை முயற்சி செய்து வெற்றி என்கிற கோல் கீப்பரை சமாளிக்க முடியாமல் தோல்வியை தழுவுகிறார்கள்.

பலர் வெற்றி என்கிற கோல் கீப்பரின் திறமைகளை கேள்விபட்டே ஒதுங்கி முன்னேற ஆர்வமில்லாமல் காலத்தை கழித்து வருகின்றனர்.

நீங்கள் முன்னேறுவது தனியாகவா? கூட்டாகவா?


எது இருந்தாலும் வெற்றியை விளையாட்டாகவே எடுத்துக்கொண்டு ஊக்கத்துடன், கடுமையான உழைப்பும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் கட்டாயம் உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் உறுதி!


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com      

Thursday, 13 September 2012

பலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். THINK NEGATIVE AND ACT POSITIVE

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

பலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள்.
THINK NEGATIVE AND ACT POSITIVE 



எண்ணம் என்பது உங்களுடன் இருப்பது. செயல் என்பது மற்றவர்களுக்கு கொடுப்பது. ஆக பலவீனமான எண்ணங்களை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பலத்தை மட்டும் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது உங்களின் திறமைகளை விரும்பி , மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். அதன்மூலம் கூட உங்களின் பலவீனம் பலமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.


அதாவது எப்போதும் எதிர்மறை சிந்தனைகளை எண்ணுங்கள். (THINK NEGATIVE). நேர்மறை சிந்தனைகளை செயல்படுத்துங்கள் (ACT POSITIVE). இந்த வார்த்தைகள் உங்களுக்கு முரணாக தெரியலாம். ஏனென்றால் பொதுவாக அனைவரும் கூறிவருவது  எப்போதும் நேர்மறை சிந்தனைகளை எண்ணுங்கள். (THINK POSITIVE).நேர்மறை சிந்தனைகளை செயல்படுத்துங்கள்  (ACT POSITIVE) என்பது தானே. அது ஒருவகையில் உங்களை ஏமாற்றும் செயல். தற்பெருமையும் கூட. ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய உண்மையை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். 

                                                        

ஒருவன் பணக்காரனாக வேண்டுமென்று எண்ணுகிறான் என்று வைத்துகொள்ளுங்கள். அதை அடைவதற்கு பலவித வழிகளில் முயற்சி செய்கிறான். நன்றாக உழைகிறான் . நல்ல தொழில் செய்கிறான் , ஆனால் இவ்வளவு இருந்தும் அவனால் வெற்றிபெற முடியாமல் தோல்விகளை சந்திக்கிறான். இப்படித்தான் பலருடைய வாழ்வின் நிகழுகிறது. அவனுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது. இதற்க்கு காரணம் என்னவாக இருக்கும்? அவனுடைய பலவீனகள் தான் செயலாக மாறியிருக்கின்றன.  

                                     

ஒன்று மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணங்கள் தான் எப்போதும் செயலாக மாறுகின்றது! உங்களிடத்தில் பலவீனமான எண்ணங்கள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை செயலாக விரும்புவீர்களா? அப்படி செய்தாலும் வெற்றி பெறுமா?

ஒரு உதாரணத்தில் மூலம் உங்களுக்கு எளிதாக விளக்குகிறேன். அதாவது உங்களுக்கு நீச்சல் தெரியாது. இருப்பினும் நேர்மறை சிந்தையோடு ஆற்றில் குதிக்கிறீகள். உங்களது நேர்மறை சிந்தனை அங்கு வந்து உங்களுக்கு உதவி செய்யுமா? 

அப்படியில்லாமல் ஆற்றில் குளிக்க ஆசை. ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரியாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்? கட்டாயமாக ஆற்றில் இறங்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் பலவீனம் 'நீச்சல் தெரியாதது.' ஆகையால் ஒன்று ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிப்பீர்கள் அல்லது முறையாக நல்லவிதத்தில் நீச்சலை கற்று கொண்டு குதித்தால் உங்கள் ஆசை வெற்றிகரமாக நிறைவேறும். அதுவும் இல்லையென்றால் 'லைப் ஜாக்கெட்' அணிந்துகொண்டு நன்கு நீச்சல் தெரிந்த ஒருவரின் துணையோடு உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள் . அதாவது உங்கள் பலவீனமான சிந்தனை தான் பலத்தை சிந்திக்க வைத்து செயபடுத்த உதவி செய்கின்றது.


அதேபோல் சமையல் செய்யத்தெரியாதவர்கள் நேர்மறை சிந்தனையோடு சமையல் செய்தால் ருசியான உணவு கிடைக்குமா?


பள்ளி மாணவன், நான் படித்த கேள்விகள் தான் பரீட்சையில் கேட்க வேண்டுமென்ற நேர்மறை சிந்தனையோடு பரீட்சைக்கு சென்றால் அவன் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் வாங்குவான். அப்படி எண்ணாமல் ஒருவேளை நான் படிக்காத கேள்விகள் வந்துவிட்டால் என்ன செய்வது? ஆகவே எதற்கும் அதையும் படித்து வைப்போம் என்று எண்ணுகின்ற மாணவர்களே சாதனைகள் பல படைக்கின்றனர்.


நாளை மழைபெய்யும் என்று நினைத்தால் என்னாவது. ஒருவேளை மழை பெய்யாவிட்டால்  அதற்க்கு மாற்று வைத்திருப்பவனே வெற்றியடைகிறான்.


எனக்கு தான் பரிசு கிடைக்குமென்று ஒவ்வொருவரும் நினைத்தால் , பரிசு கிடைக்குமா? அதற்கு வாய்ப்பு மிகவும் அரிது. ஏனென்றால் பரிசின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணலாம்.   

எனவே எப்போதும் பலவீனங்களை நினையுங்கள்!


பலமுள்ள செயல்களை செய்யுங்கள்!

உங்களுக்கு எப்போதும் வெற்றி தான்.
       
  இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com