Pages

Wednesday, 7 August 2013

33. OVERCOME OBSTACLES FOR SUCCESS - 33. வெற்றிக்கு தடைகளை தகர்த்தெறி

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

33. OVERCOME OBSTACLES FOR SUCCESS


* Natural breathing is always keeping us happy. If your breath is not in natural, automatically it will create unnecessary disturbance.


* Taking pain is also a kind of passion which will help to overcome any obstacles and give a clear way to success.


* Success = Passion + Consistency + Positive attitude


* You cannot able to see your entire house when you are inside of the house. Like wise, your mistakes are not realized when you are having power.


* which are the things liked by human, all are uncertain. People are thinking that it is true and easily cheated by it.

Success life steps continues next..

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இனிய வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

33. வெற்றிக்கு தடைகளை தகர்த்தெறி 


* இயற்கையான சுவாசம் நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அசாதாரணமான சுவாசம் தேவையற்ற இடையூறு உருவாகும்.


* வலியை ஏற்றுக்கொள்வதும் ஒருவகையான பொறுமையாகும். அது எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றிக்குத் தேவையான தெளிவான பாதையை காட்ட உதவுகிறது.


* வெற்றி = பொறுமை + நிலைத்தன்மை + நேர்மறையான அணுகுமுறை


* நீங்கள் வீட்டின் உள்ளே இருக்கும் போது, உங்கள் வீடு முழுவதும் பார்க்க முடியாது. அதுபோல உங்கள் கையில் அதிகாரம் இருக்கின்ற வரையில் உங்கள் தவறு தெரிவதில்லை.


* மனிதனால் விரும்புவது அனைத்தும் நிரந்தரமானதல்ல. அவைகள் உண்மை என்று நம்பி எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

நட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13) - FRIENDSHIP DAY - SPECIAL PUTHU KAVITHAI

நட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)


சிறப்பு புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 


அரிது அரிது நட்பு கிடைப்பதரிது 
உண்மை நட்பு கிடைப்பது அதனினும் அரிது.

கிடைத்தாலும் பொறாமை இல்லா நட்பு அரிது 
அதுவும் கிடைத்தாலும் ஒரே இடத்தில் இருப்பது அரிது 

ஒரே இடத்தில் கிடைத்தாலும் நட்பு தொடர்வது அரிது 
அனைத்தும் இருக்கும் நட்பு அழியாத பெருமை தருமே.

மானத்தை காப்பது நட்பு 
உண்மை அன்பை கொடுப்பது நட்பு 



மணம் கூட காற்றிக்கு சுமையாக இருக்கலாம் 
மகரந்தம் கூட மலருக்கு பாரமாக இருக்கலாம் 
குழந்தை கூட தாய்க்கு பாரமாக தெரியலாம் 
உண்மை நட்பு என்றைக்குமே மனதிற்கு இதம் தான்.

உண்மை நட்பு 
மடை திறந்த வெள்ளம் போல 
வானைப் பிளந்து பெய்யும் மழை போல 
தடை எதையும் தாண்டி விடுமே. 

அருகில் 
இருக்கும் போது பேசும் 
இல்லாதபோது நினைக்கும் 
உண்மை நட்பு.



இரத்தபாசம் கூட பிரிகின்றது 
சொத்து, பொறாமை இருக்கும்போது 

காதல் கூட தோற்கின்றது 
சாதி , அந்தஸ்து என்று வருகின்றபோது 

திருமணம் கூட தடைபடுகின்றது 
வரதட்சனை, புரியாமை வருகின்றபோது.

வாழ்க்கை கூட கசக்கிறது 
துன்பம் வருகின்றபோது 

நட்பு மட்டும் மலை போல் நிற்கின்றது 
எல்லா நிலையிலும் தாங்குகின்றது.



நட்பு முகவரியக் கூட கேட்காது 
நட்பு பெயரைக் கூட கேட்காது 
சாதி இனம் மதம் பார்க்காது 
இதயம் ஒன்றையே பார்க்கக்கூடியது.



நட்பு மலரும்போது பாரம் குறைகிறது 
நட்பு தொடரும் போது சிறகடித்துப் பறக்கின்றது 

நம்மை தாங்கும் பூமி கூட அதிர்ச்சி தருகின்றது 
நட்பு என்றுமே மகிழ்ச்சி தருகின்றது.

நகம் சதைபோல இருக்கும் நட்பு 
என்றும் பிரியாமல் இருக்கும் 

கண்ணும் இமையும் போலிருக்கும் நட்பு 
என்றும் பாதுகாப்பு தருகின்றது 

நிலவும் வானும் போல சேர்ந்திருக்கும் நட்பு 
வளர்பிறை போல வளர்ந்து வரும்.

கடிதம் மூலம் நட்பு வளர்ந்தது அன்று 
பேஸ்புக் மூலம் நட்பு கிடைக்கின்றது இன்று 

மெயில் மூலம் தொடர்கிறது நட்பு 
மொபைல் மூலம் பேசுகிறது நட்பு 

மெசேஜ் மூலம் பரிமாறிக்கொள்கிறது நட்பு 
சாட் மூலம் வளர்கிறது நட்பு 



உண்மை நட்பு வேண்டும் 
பிரியாத நட்பு வேண்டும் 
நல்ல குணம் கொண்ட நட்பு வேண்டும் 
சிறந்த நட்புச் செல்வம் வேண்டும் 

துன்பம் துடைக்கும் நட்பு வேண்டும் 
நம்பிக்கை வளர்க்கும் நட்பு வேண்டும் 
நுனி கரும்பு போல் இனித்திடும் நட்பு வேண்டும் 
தேன் சுவை கொடுத்திடும் நட்பு வேண்டும் 

உரிமைக்கு குரல் கொடுக்கும் நட்பு வேண்டும் 
விட்டுக்கொடுக்கும் நட்பு வேண்டும் 
உதவிக்கரம் நீட்டும் நட்பு வேண்டும் 
பகைவரிடமிருந்து காக்கும் நட்பு வேண்டும்.

அகம் புறம் அன்பு காட்டும் நட்பு வேண்டும் 
சிரித்துப் பழகும் நட்பு வேண்டும் 
நல்லதை சொல்லும் நட்பு வேண்டும் 
தீமை கலவாத நட்பு வேண்டும்.

மனம் கோணாத நட்பு வேண்டும் 
தற்பெருமை இல்லாத நட்பு வேண்டும் 
கஷ்டத்தை பகிர்ந்திடும் நட்பு வேண்டும் 
பழகப் பழக அன்பு பெருகும் நட்பு வேண்டும்.



வாழ்க நண்பர்கள் 



கொண்டாடுங்கள் நண்பர்கள் வாரம்!

நன்றி 
வணக்கம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^






Tuesday, 6 August 2013

32. YOUR LIFE IS A JOURNEY OR PICNIC - 32. உங்கள் வாழ்க்கை நீண்ட பயணமா? சுற்றுலாவா?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
32. YOUR LIFE IS A JOURNEY OR PICNIC


* True successful person does not want to use others. But other want to use successful person.

        

* Prepare a plan to reach your ambition and mingle it in your life. Because life is a long journey not a short picnic.


* An aimless person is equal to having a sight but no vision.


* Most of the people is searching their successful path in the sky. But they don't see it beside them.


* The greatest gain and experience are getting from their most difficult life time period.

Successful life steps continuous next..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 



மதுரை கங்காதரன் 

32. உங்கள் வாழ்க்கை நீண்ட பயணமா? சுற்றுலாவா?


* உண்மையான வெற்றியடைந்த நபர் தனது வேலைக்கு மற்றவர்களை  பயன்படுத்த விரும்புவதில்லை. ஆனால் மற்றவர்கள் அந்த  வெற்றிகரமாக நபரை பயன்படுத்த விரும்புகின்றனர்.



* உங்கள் நோக்கம் அடைவதற்கான திட்டத்தை தயாரித்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் வாழ்க்கையோடு கலந்துவிடுங்கள்.  ஏனெனில் வாழ்க்கை என்பது  ஒரு நீண்ட பயணம். அது ஒரு குறுகிய சுற்றுலா போல அல்ல.


* வாழ்கையில் குறிக்கோள் இல்லாத நபர் கண்கள் இருந்தும் பார்வை தெரியாமல் இருப்பதற்குச் சமம்..


* பெரும்பாலான மக்கள் வானத்தில் இல்லாத வெற்றிகரமான பாதையைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் அருகிலுள்ள வெற்றிப்பாதையைப் பார்ப்பதில்லை. 


* மிக பெரிய ஆதாயம் மற்றும் அனுபவம் மிகவும் கடினமான வாழ்க்கை காலத்தில் இருந்து கிடைக்கிறது.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, 5 August 2013

31. WHO IS BEHIND YOUR SUCCESS? - 31. உங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

31. WHO IS BEHIND YOUR SUCCESS?
* You may be belonged to any field (whether business or service), you want to focus people's interest and attraction towards you, then you must have the capacity to give something new endlessly.


* It is not a mistake who are not read and write but the blunder mistake is who do not learn, relearn and unlearn.


* Behind any successful man there are so many hidden life lifters.

* Successful man is having the habits doing anything in a successful way and they don't like to do failure things.


* Try to use at least few minutes in a intelligent way, it will gives you extra power. 

Success life steps continues next..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
31. உங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?


* நீங்கள் எந்த துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம் (வணிகம் அல்லது சேவை), மக்களின் ஆர்வம் மற்றும் ஈர்ப்பு உங்களை நோக்கி வரச் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அவர்களுக்கு ஏதாவது புதிய புதிய செயலை முடிவில்லாமல் கொடுக்கும் திறமை பெற்றிருக்கவேண்டும். 


* ஒருவர் படிப்பது மற்றும் எழுதாது  தவறல்ல. ஆனால் யார் ஒருவர் கற்காமல், மேலும் மேலும் கற்காமல் அல்லது முழுவதும் கற்காமல் இருப்பது மிகப்பெரிய தவறாகும்.     


* எந்த ஒரு வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னால் அவரின்   வாழ்க்கையை உயத்துபவர்கள் பலர் மறைந்த்திருக்கிறார்கள்.


* வெற்றி மனிதர்கள் எப்போதும் எந்த ஒரு செயலையும் வெற்றிப் பாதையில் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் தோல்விப் பாதையில் செல்ல விருப்புவதில்லை. 


* நீங்கள்   அறிவார்ந்த முறையில் குறைந்தது சில நிமிடங்களை  பயன்படுத்த முயற்சி செய்தால் , அது உங்களுக்கு கூடுதல் பலம் கொடுக்கும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



Friday, 2 August 2013

30.LOVE HELPS TO STRENGTHEN HEART - 30. அன்பு ஒருவரின் இதயத்தை பலப்படுத்துகின்றது

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

30.LOVE HELPS TO STRENGTHEN HEART
*  Motivated person is always showing improvements without any tired.


* Anger breaks a man's Heart.
   Anxiety breaks a man's relationship and
   Failure breaks a man's life.
   Don't worry about your failure, Go ahead ! There is a way is          always open for you.


* 'Taking' is never quench once hunger.


* Love will help to strengthen Heart
   Good think will help to strengthen Health.
   Success will help to strengthen Happy Life.


* 5H are important for Human life. Head , Heart, hand, Hip and        Heel.

 Success steps continues next...

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

30. அன்பு ஒருவரின் இதயத்தை பலப்படுத்துகின்றது 


* ஊக்கமுள்ள மனிதன் எப்போதும் சோர்வடையாமல் முன்னேற்றத்தைக் காட்டிக் கொண்டே இருப்பான்.
* கோபம் ஒரு மனிதனின் இதயத்தை சுக்குநூறாக்குகின்றது.
   பொறாமை ஒரு மனிதனின் உறவை அறுக்கின்றது.
   தோல்வி ஒரு மனிதனின் வாழ்கையை அழிக்கின்றது .
   ஆகையால் தோல்வியைப் பற்றி கவலைபடாதே! முன்னேறு! எனக்காக      எப்போதும் ஒரு பாதை திறந்தே இருக்கின்றது!

* "பேச்சு" எப்போதும் ஒரு மனிதனின் பசியைத் தீர்க்காது.


* அன்பு ஒரு மனிதனின் இதயத்தை பலப்படுத்த உதவுகிறது..
   நல்ல எண்ணங்கள் ஒருமனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
   வெற்றி ஒரு மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுகிறது.


* மனித வாழ்வில் முக்கியமானது, தலை (அறிவு) ,  இதயம் (இரக்கம்) , கைகள் (உதவி) , இடை (பலம்) மற்றும் குதிகால் (நிற்பதற்கு).

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////