Pages

Wednesday, 20 November 2013

67 . Who can able to see the bright part of the process ? 67. ஒரு செயலின் வெளிச்சமான பகுதியை பார்ப்பது எப்படி?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 
67 . Who can able to see the bright part of the process  ?
* A leader not only think daily basis problem but also think one step forward than other to predict the future  without discrimination . 
* If you want to get the positive thoughts then you don't see the dark part's of an action. That is you must see the bright part of the action instead of dark part. 
*Rising the cost of material and luxurious life are the main reason and tendency for happening Corruption , bribery and stealing. 
* The important thing for success is qualification. It is nothing but self confident and hard work.  
* The secret behind why we have two ears and only one tongue because we may hear more and speak less.

SUCCESS STEPS CONTINUES NEXT ...

************************************************************************************************************************

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

67. ஒரு செயலின் வெளிச்சமான பகுதியை பார்ப்பது எப்படி?  
*ஒரு தலைவன் அன்றாடம் நடைபெறும் பிரச்சனைகளை மட்டும் சிந்திக்காமல் மற்றவர்களை விட ஒரு படி கூடுதலாக வருங்காலத்தை பாகுபாடு இல்லாமல் கணிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
* நேர்மறையான சிந்தனை பெறுவதற்கான வழிகள் என்னவென்றால் நீங்கள் எதிர்கொள்ளும் செயலின் நிழலைப் பார்க்காதீர்கள்.அதாவது அந்த செயலின் தேவையில்லாத இருள் சூழ்ந்த பகுதியை பார்க்காதீர்கள். மாறாக உங்கள் சிந்தனை முழுவதும் செயலின் ஆக்கப்பூர்வமான வெளிச்சமான பகுதியை பார்த்துப் பழகுங்கள்.
* ஊழல், லஞ்சம் மற்றும் திருட்டிற்கு முக்கிய காரணம் பொருட்களின் விலை அதிகமானது மற்றும் ஆடம்பரம் பெருகியதாகும்.
* வெற்றிக்கு முக்கியமான தகுதி என்னவெனில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமாகும்.
* நமக்கு இரு காதுகளும் ஒரே ஒரு நாக்கு கொண்டிருப்பதன் இரகசியம், நாம் அதிகமாக கேட்பதற்காகவும் குறைவாக பேசுவதற்காகத் தான்.   

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

************************************************************************************************************************




66. WHEN WILL YOU REALIZE ABOUT YOU ? 66. உனக்குள் நீ இருப்பதை எப்போது அறிவாய்?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

66. WHEN WILL YOU REALIZE ABOUT YOU ?
* You are usually talking about other people, always seeing something out side so that you can not able to see inside of yours. Also you are not able to hear your inner voice . That is why you are not believe that you are present inside of you.
* To succeed a work or action, two types of people are trying. They are good people and another is bad people. But in those type of people God will help who is having money, power and wisdom. 
* Rich people are all always happy and healthy even their country faces a very big economic crisis. But sufferer and affected are only poor and middle class people.
* Today some magazines, media, advertising, and all political parties are pride them self dramatically by setting up some group of their people.
* When you try to solve a problem, dig up to the root not to cut leaves.    

SUCCESS STEPS CONTINUES NEXT ...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 
66. உனக்குள் நீ இருப்பதை எப்போது அறிவாய்?
* நீ மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து பேசி பேசி பழகிவிட்டதால் தான் என்னவோ உனக்குள் நீ இருப்பதை உணர முடியாமல், உன் குரலை கேட்க இயலாமல் இருக்கின்றாய். மேலும் உனக்குள் நீ இருப்பதை நம்பவும் மறுக்கிறாய்!
* எந்த ஒரு காரியம் அதாவது நல்லதாக , கெட்டதாக இருந்தாலும் அதில் வெற்றி பெற ஒரு பக்கம் நல்லவன் முயற்சி செய்வான். மறுபக்கம் கெட்டவனும் முயற்சி செய்வான். இறைவன் யார் பக்கம் என்றால் பணம், பதவி, அறிவுள்ளவன் பக்கம்!
* நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் அங்குள்ள பணக்காரர்கள் எப்போதும் வளமும், மகிழ்ச்சியுடன் தான் இருப்பார்கள். அதனால் துன்பப்படுவது, துயரப்படுவது என்றுமே  ஏழைகளும் , நடுத்தர வர்க்கத்தினரும் .ஏமாளிகளும்  மட்டும் தான்.
* இன்றைக்கு சில பத்திரிக்கைகள்  , மீடியாக்கள் , விளம்பரங்கள் , அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு தற்பெருமை பேசி வருவது  வெகுவாக பெருகிவிட்டது.
* நீங்கள் ஒரு பிரச்சனையை தீர்க்க முடிவு எடுக்க முற்படும்போது அதன் ஆரம்ப வேரை ஆழமாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மேலோட்டமாக மட்டும் பார்த்து விட்டு முடிவு எடுக்கக் கூடாது.  

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

65 . Who is having the destiny of a country ? 65. ஒரு நாட்டின் தலையெழுத்து யாரிடம் உள்ளது?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 


65 . Who is having the destiny of a country ?
* One way 'Hunger' is making benefit to us. Because some time it helps to forget our worries and avoid to think unnecessary thoughts. 


* A person who is involved very much in science  is very difficult to accept ' God ' ideology . Because each thing in science is having proof . But God's philosophy  depends upon everyone's sense of realization. 
* A nation's destiny is in it's top twenty rich people as well as political leaders hand. They won't be affected if their country is trapped in a tense state of the economy , financial crisis or bankrupt etc., but many of us are not aware of this.
* Making of multiple best instruments like flute, veena , tabela  are not having capable of playing such instruments, You tell me ! why?
* If you want to be succeeded in your philosophy then it's words and actions should be accepted by  irrespective of age , gender, distinction and any where it should be fit for human life .

SUCCESS STEPS CONTINUES NEXT ...


############################################################################################

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

65. ஒரு நாட்டின் தலையெழுத்து யாரிடம் உள்ளது? 
* பசியும் ஒரு வகையில் நமக்கு நன்மை செய்கிறது. ஏனெனில் சில சமயங்களில் பசியானது கவலைகளை மறக்கச் செய்வதோடு தேவையற்றவைகளை நினைக்கவிடாமல் செய்துவிடுகின்றது.
* அறிவியலில் / விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு 'இறைவன்' சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். ஏனெனில் அறிவியலில் ஒவ்வொன்றும் நிரூபணம் கொண்டவை. ஆனால் இறைவனைப் பொருத்தமட்டில் அவரவர் உணர்வைப் பொறுத்ததாகும்.
* ஒரு நாட்டின் தலையெழுத்து அந்த நாட்டில் இருக்கும் முதல் இருபது பணக்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கைகளில் உள்ளது. ஒரு நாடு பொருளாதாரத்தில் சிக்கித் தவித்தாலும், நிதி நெருக்கடியில் தத்தளித்தாலும் அல்லது நாடே திவாலாகிவிட்டாலும் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.  
* பலவகை சிறந்த புல்லங்குழல், வீணை, தபேலா போன்ற இசைக்கருவிகளைத் தயாரிக்கும் வல்லமை கொண்டவனுக்கு அதை வாசிக்கும் ஞானம் இல்லாமல் இல்லாது போவது ஏனோ? என்பதை  நீங்களே சொல்லுங்கள்!

* உனது தத்துவம், கொள்கை வெற்றிபெற வேண்டுமானால் உன்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒவ்வொன்றும் வயது வித்தியாசம் இல்லாமல், பால் வேற்றுமை இல்லாமல், நாடு வேறுபாடு இல்லாமல் அனைவரும் எக்காலத்திலும், எந்த இடத்திலும் மனித வாழ்க்கைக்குப் பொருந்தும்படி இருக்கவேண்டும்.

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Friday, 25 October 2013

64. WHAT WILL HAPPEN IF YOU HAVE MONEY AND MAY NOT HAVE MONEY? - 64. பணம் இருந்தால் , இல்லாவிட்டால் என்ன நடக்கும்?


HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

64. WHAT WILL HAPPEN IF YOU HAVE MONEY AND 
MAY NOT HAVE MONEY?
* Even you say powerful chants or give  valuable wealth or money, you can't stop once's death or postpone the death. 
* To Enrich the mind and strengthen the body related numerous books, stories, literature, poetry, essays, articles are available in the Tamil language when compare to other languages.  But at the same time there are not enough books of technology , medicine , agriculture , science and engineering. This has to be taken to an account for Tamil language development. 
* lying and crime can't be stopped by a great books and laws. 
* Your body can accept porridge ! Your body also accept higher price foods! Even your body can accept harmful drinks ! Those are all depend upon your perception and habit. If you have money in your hand, then your body will offer many things! If you do not have the money in your hand, it makes your stomach hurt .
* Criminals , thieves are expected to show fair and kindness from  other people. But he never be realized that he is dishonest.  If he is having this type of thought how he will be reformed?

Success steps continuous next..

========================================================================================
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 

64. பணம் இருந்தால் என்ன நடக்கும்? இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

* எவ்வளவு சக்திமிக்க மந்திரங்கள் சொன்னாலும், செல்வங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் ஒருவரின் மரணம் நிறுத்தவோ, தள்ளிப் போடவோ முடியாது. 
* மனத்தை வளப்படுத்தவும், உடலை பலப்படுத்தவும் தமிழ் மொழியில் வேறு மொழியில் இல்லாத அளவிற்கு ஏராளமான புத்தகங்கள், கதைகள், இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால் இக்கால தொழில் நுணுக்கங்களைப் பற்றிய புத்தகங்கள், மருத்துவம், விவசாயம், அறிவியல், பொறியியல் பற்றிய புத்தகங்கள் போதிய அளவு இல்லை.
* எந்த ஒரு புத்தகத்தாலும், சட்டத்தாலும்  ஒருவனை பொய் சொல்லாமல் இருக்க வைப்பதோ, குற்றம் செய்யாமல் இருக்க வைப்பதோ முடியாது.
* உன் உடம்பு கஞ்சி குடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்! விலை உயர்ந்த உணவையும் ஏற்றுக்கொள்ளும். ஏன் சரக்கு அடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்.எல்லாமே உன் எண்ணத்திலும், பழக்கவழக்கத்திலும் இருக்கின்றன. உடம்பு இருக்கின்றதே கை நிறை காசு இருந்தால் கண்டதை கேட்கும் ! கையில் பணம் இல்லாவிட்டால் வயிறு காய வைக்கும்.
* குற்றவாளிகள், திருடர்கள் கூட தங்களிடம்  பிறர் நியாயமாக மற்றும் இரக்கம் காட்ட வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர தான் தவறு செய்கிறோம் என்று ஒருபோதும் எண்ணுவதில்லை. இந்த மாதிரி எண்ணம் இருக்கின்றபோது எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

====================================================== ===================================