Pages

Saturday, 14 December 2013

பலவித கொள்ளைக்காரர்கள் ! - DIFFERENT KINDS OF ROBBERS!

பலவித கொள்ளைக்காரர்கள் !



DIFFERENT KINDS OF ROBBERS!

                  புதுக்கவிதை 

            மதுரை கங்காதரன் 

பாசத்தினால் தன் பிள்ளைகளின் அன்பைக் 
கொள்ளையடிப்பவள் தாய்.

தியாகத்தால் குடும்பத்தின் உறவுகளை 
கொள்ளையடிப்பவள் மனைவி.

குடும்பத்திற்காக சம்பாதித்து அன்பை 
கொள்ளையடிப்பவன் கணவன்.

பெற்றோர்களுக்கு தனது கடமை பாசத்தை 
கொள்ளையடிப்பவர்கள் பிள்ளைகள். 


நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களைக் 
கொள்ளையடிப்பவன் நடிகன்.

ஆபத்து சமயத்தில் உதவி நட்பை 
கொள்ளையடிப்பவன் நண்பன்.

சோதனைகளைச் செய்து பக்தர்களின் மனதை 
கொள்ளையடிப்பவர் இறைவன்.

மக்களின் செல்வங்களைத் தெரியாமல் 
கொள்ளையடிப்பவன் திருடன்.


மக்களை தனது பேச்சினால் 
கொள்ளையடிப்பவர் பேச்சாளர்.

செவிகளை தன் இசை பாடல்களால் 
கொள்ளையடிப்பவன் இசைக் கலைஞன்.

உடல் அசைவினால் பார்பவர்களை மயக்கி 
கொள்ளையடிப்பவன் நடனக் கலைஞன்  


தொண்டர்களின் உழைப்பை கொள்கையினால் 
கொள்ளையடிப்பவன் அரசியல்வாதி.

மக்களின் உரிமைகளை ஓட்டுகளின் மூலம் 
கொள்ளையடிப்பவர் அரசியல் தலைவர்.

வியாபரத்தை வாடிக்கையாளர்களை லாப முறையில் 
கொள்ளையடிப்பவன் பணக்காரன்.

மக்களை பலவழிகளில் ஏமாற்றிக் 
கொள்ளையடிப்பவன் அறிவாளி.


சேவைகள் மூலம் மக்கள் மனங்களை 
கொள்ளையடிப்பவன் சமூக சேவகன்.

அன்பின் மூலம் இதயத்தை 
கொள்ளையடிப்பவகள் காதலர்கள். 

இலக்கியம் மூலம் மக்களின் உணர்வுகளைக் 
கொள்ளையடிப்பவன் கவிஞன்.

***************************************************************************************



யாருக்கு என்ன முதலீடு வேண்டும் (பணம் தவிர) - WHO NEED WHAT ? (EXCEPT MONEY)

யாருக்கு என்ன முதலீடு வேண்டும் (பணம் தவிர)
WHO NEED WHAT ? (EXCEPT MONEY)
                                            
 புதுக்கவிதை
                                     
  மதுரை கங்காதரன்  


டாக்டர்களுக்கு நோயாளிகள் முதலீடு 
வியாபாரத்திற்கு வாடிக்கையாளர்கள் முதலீடு 

வக்கீல்களுக்கு வழக்குகள் கொடுப்பவர்கள் முதலீடு 
ஆசிரியர்களுக்கு கல்வி கற்க வருபவர்கள் முதலீடு 

அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போடுகிறவர்கள்  முதலீடு 
திரைப்படத்திற்கு கவர்ச்சி முதலீடு 

சின்னத்திரைக்கு தொடர்கள் முதலீடு 
பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகள் முதலீடு 

அறிவியல் அறிஞர்களுக்கு கண்டுபிடிப்பு முதலீடு 
கல்வி கற்றவர்களுக்கு பட்டம் ஒரு முதலீடு 


பொறியியலாளர்களுக்கு கைத்திறன் முதலீடு 
கலைஞர்களுக்கு கலைகள் முதலீடு 

போலீஸ்காரர்களுக்கு திருடர்கள் முதலீடு 
கவிதை எழுதுபவர்களுக்கு காதல் முதலீடு 

எழுத்தாளர்களுக்கு கதை,கட்டுரைகள் முதலீடு 
பதவியில் இருப்பவர்களுக்கு தொண்டர்கள் முதலீடு 

முதலாளிகளுக்கு தொழிலாளர்கள் முதலீடு 
பெற்றோர்களுக்கு குழந்தைகள் முதலீடு 

நாட்டிற்கு வளங்கள் முதலீடு 
உலகிற்கு மனிதர்கள் முதலீடு  

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் ! - HAPPY AND SORROWS

மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் !

HAPPY AND SORROWS
                                                

புதுக்கவிதை 
               
     மதுரை கங்காதரன் 

விட்டுக்கொடுத்தல் இருக்கும் வரை சீண்டிப்பார்பவர்கள் இருப்பார்கள் 
ஆட்டுவிப்பவர்கள்  இருக்கும் வரை ஆடுபவர்கள்   இருப்பார்கள் 

பசி இருக்கும் வரை பஞ்சம்   இருக்கும்  
இரக்கம்  இருக்கும் வரை  தவறுகள் நடக்கும் 

நல்லவர்கள்  இருக்கும் வரை  கேட்டவர்கள்  இருப்பார்கள் 
அறிவாளிகள்  இருக்கும் வரை   அறிவுரை சொல்பவர்கள் இருப்பார்கள் 

நீதிமன்றம்  இருக்கும் வரை  வழக்குகள்  இருந்துகொண்டிருக்கும் 
காவலர்கள் இருக்கும் வரை திருடர்கள்   இருப்பார்கள் 

 நாடுகள் இருக்கும் வரை  சண்டைகள் இருந்து கொண்டிருக்கும்  
 மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் 


 காதல்  இருக்கும் வரை   சாதலும் இருக்கத் தான் செய்யும்  
 மிதவாதம் இருக்கும் வரை   தீவிரவாதம் இருக்கும்  

 பரிசுகள் இருக்கும் வரை அதிர்ஷ்டம் இருக்கும்  
 எல்லைகள் இருக்கும் வரை  அதை  மீறுதலும் இருக்கும் 

 நல்ல மனம் இருக்கும் வரை பொறாமை உடையவர்களும்   இருப்பார்கள் 
ஆத்திகம் இருக்கும் வரை நாத்திகம் இருக்கும்  

 ஆக்கம் இருக்கும் வரை அழிவுகள் இருக்கத் தான் செய்யும்  
 படித்தவர்கள் இருக்கும் வரை முட்டாள்கள்  இருப்பார்கள் 

 பணக்காரர்கள் இருக்கும் வரை ஏழைகள்  இருப்பார்கள் 
 பகல் இருக்கும் வரை   இரவு என்று ஒன்று இருக்கும் 

 ஏற்றங்கள் இருக்கும் வரை   இறக்கங்கள் இருப்பார்கள் 
 சாதிகள் இருக்கும் வரை  சச்சரவுகள்  இருப்பார்கள் 

 லாபம் இருக்கும் வரை   நஷ்டம் என்று இருக்கும் 
 உண்மை இருக்கும் வரை பொய் என்று ஒன்று இருக்கும்  

அழகு  இருக்கும் வரை  அசிங்கங்களும் இருக்கும்  
 நியாயங்கள் இருக்கும் வரை அநியாயமும் இருக்கும் 

 நட்பு இருக்கும் வரை  பகையாளிகளும் இருப்பார்கள் 
அரசியல்வாதிகள்  இருக்கும் வரை  லஞ்சம், ஊழல் இருக்கும்  

வெள்ளை  இருக்கும் வரை   கருப்பு இருக்கும் 
டாக்டர்கள் இருக்கும் வரை நோயாளிகள் இருப்பார்கள் 

ஆண் பெண் இருக்கும் வரை  குடும்பம் என்று ஒன்று இருக்கும் 
நல்லநேரம் இருக்கும் வரை கெட்டநேரம் இருக்கும்  


ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை   ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் 
சப்தம்  இருக்கும் வரை  அமைதியும் இருக்கும் 

உழைப்பவர்கள் இருக்கும் வரை  சோம்பேறிகளும்  இருப்பார்கள் 
சரித்திரங்கள் இருக்கும் வரை  தரித்திரங்களும் இருக்கும்   

காரியம் இருக்கும் வரை   காரணங்களும் இருக்கும் 
பலசாலிகள் இருக்கும் வரை கோழைகள் இருப்பார்கள் 

அரசியல் இருக்கும் வரை ஓட்டு போடுபவர்கள் இருப்பார்கள் 
உலகம் இருக்கும் வரை   மனிதர்கள் இருப்பார்கள் 

உறவுகள்  இருக்கும் வரை பிரிவுகள் இருக்கும்  
அன்பு இருக்கும் வரை தண்டனை கொடுப்பவர்கள்   இருப்பார்கள் 


######################################################################################

Friday, 22 November 2013

70. MANY WAYS TO LOOSE YOUR MONEY - 70. பணத்தை இழப்பதற்கு பலவழிகள் :

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
70. MANY WAYS TO LOOSE YOUR MONEY 

*   The many ways to lose money in spite of the few ways are

* Gambling , stock market , on-line trading, rampant speculation , lottery
* Drink , cigarette ect., bad habits
* Lending money with high interest 

* People are changing their commitment before getting money and after getting money. So you want to give money to other think twice.
* Many success , achievement holding person are having the below characteristics :

* He never afraid of people with high strength .
* He never loose his policies and aim at any situation.
* He is more interested to create new things / ideas.
* He is listening closely in small things. He takes right decision for big things.
* He never be idle after his goal is reached.

* A systematic , quality , perfect  works are never be reworked.
* If you want a great achievement then your presentation should be highlighted whether it is words or any matter.

Success steps continuous next..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

70. பணத்தை இழப்பதற்கு பலவழிகள் :
* மனிதன் பணம் அளவுக்கு மீறி இழக்கும் பல வழிகளில்  சில வழிகள் 

* சூதாட்டம், பங்குச்சந்தை, ஊகவணிகம், லாட்டரி 
* குடி , சிகரெட்  போன்ற கெட்டபழக்கங்கள் 
* அதிக வட்டிக்கு ஆசைபடுதல் 
* பிறர் உன்னிடம் பணம் வாங்கும்போது ஒரு பேச்சும் , பணம் வாங்கிய பின் ஒரு பேச்சும் பேசுவர். ஆகவே பணம் கொடுக்கும்போது யோசித்து கொடுக்கவேண்டும்.
* பல வெற்றிக்கும் , சாதனைக்கும் உரியவர்களின் குணாதிசயங்கள்:

* அவர் தன்னைவிட அதிக பலம் கொண்டவர்களைப் பார்த்து எப்போதும் பயப்படுவதில்லை.
* தன் கொள்கைகளையும் , குறிக்கோளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
* புதியவை புகுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
* சிறு சிறு விசயங்களையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். பெரிய விசயங்களை உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்.
* வெற்றி அடைந்துவிட்டோம் என்று ஒருபோதும் 'சும்மா, இருக்கமாட்டார்கள்.

* ஒரு முறையான, தரமான, நேர்த்தியான எந்த ஒரு வேலையும் திரும்பச் செய்யவேண்டிய அவசியம் இருக்காது.

* நீங்கள் மிகப்பெரிய சாதனை படைக்கவேண்டுமெனில் நீங்கள் பேசும் வார்த்தைகள் அல்லது செயல்கள் நல்ல முறையில் எடுத்து இயம்ப வேண்டும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Wednesday, 20 November 2013

69. ARE YOU LOYAL TO MONEY RATHER THAN HUMAN BEING? - 69. நீங்கள் பணத்திற்கு விசுவாசமானவர்களா?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

69. ARE YOU LOYAL TO MONEY RATHER THAN HUMAN BEING?
* Many people are loyal to the money rather  than human being . 
* In a growing company some people to be willing to work even with less salary. This is due to some reasons which are :
1 . Good guiding ( department head) boss / leader
2 . Induce to work creatively with compete
3 . Many opportunities for learning and growing
4 . Skilled people work around him.
* Some important things in your life that you should know :

1 . Nobody will help you without benefit
2 . Nobody will sell anything without profit
3 . If a person appraise you or speaking sweet words means he expect  jewelry , money , property or something deceived from you .

* In general, most of the 'love story' films are having a question mark regarding Hero's job, his salary and how to lead his life ? His only aim to achieve his love! whether it is correct? 

* Some people who want to appreciate others. Others prefer to speak in praise of himself. People want to give importance others . Let it go! Do they know how many famous people? How many famous people' life story have they studied?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரைகங்காதரன் 

69. நீங்கள் பணத்திற்கு விசுவாசமானவர்களா?

* பலர் மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ பணத்திற்கு பன்மடங்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

* வளரும் நிறுவனத்தில் பலர் அங்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் விருப்பமாக வேலை செய்வதன் காரணங்களில் சில:

1. நல்ல வழி காட்டும் (துறை) தலைவர் 
2. ஆக்கப்பூர்வமாக போட்டிபோட வைக்கும் வேலை 
3. வளருவதற்கும் , கற்பதற்கும் நிறைய வாய்ப்புகள் 
4. சுற்றிலும் திறமையானவர்கள் வேலை செய்வது 

* வாழ்கையில் நீ தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவைகளில் சில:

1. ஆதாயமில்லாமல் உனக்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள்
2. லாபமில்லாமல் யாரும் ஒரு பொருளை விற்கமாட்டாட்கள் 
3. ஆசை வார்த்தைகள், பாராட்டி பேசுபவர்கள் பெரும்பாலும் தந்திரமாக உங்களிடம் நகை, பணம், சொத்து முதலியவைகளை உங்களிடமிருந்து ஏமாற்றி வாங்கிவிடுவார்.  
* பொதுவாக எல்லா 'காதல் திரைப்படங்களிலும்' காதல் ஒன்றே குறிக்கோளாய் இருப்பதோடு அவர் என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு சம்பாதிக்கிறார் ?எப்படி குடும்பத்தை நடத்துவார் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது!
*  மனிதர்களில் சிலர் தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்று விரும்புகிறார்கள். தன்னை மற்றவர்கள் புகழ்ந்து பேசவேண்டுமென்று விரும்புகிறார்கள். மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற விரும்புகிறார்கள். அது போகட்டும்! இவ்வாறு புகழ்பெற்ற மனிதர்களை எத்தனை பேர்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எத்தனை பேர்களின் சரித்திரம் படித்திருக்கிறார்கள்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

HAPPINESS WAYS - மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்

மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம் 
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

தாய் குழந்தைக்கும் கொடுப்பது ஒரு வித மகிழ்ச்சி 
குழந்தை பேசும் மழலை தாய்க்கு மகிழ்ச்சி 

விரும்பிய பொருள் வாங்குவதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சுற்றுலா இடங்களுக்கு செல்லுவதில் மகிழ்ச்சி 

சிலருக்கு படிப்பதில் அலாதியான மகிழ்ச்சி 
சிலருக்கு பேசுவதில் ஒருவகையான மகிழ்ச்சி 

நினைத்த குறிக்கோளை அடைந்ததில் மகிழ்ச்சி 
வேண்டிய நபரை சந்தித்தலில் மகிழ்ச்சி 
ஒரு சிலருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி 
அதுபோல் சிலருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி 

தெரிந்ததை இலவசமாக சொல்லித் தருவதில் மகிழ்ச்சி 
தெரியாததை கற்றுக்கொள்வதில் சிலருக்கு மகிழ்ச்சி 

இறைவனை பாடுவதில் வணங்குவதில் மகிழ்ச்சி 
பதவி வகிப்பதில் பலருக்கு மகிழ்ச்சி 

கோடி கோடியாய் சம்பாதிப்பதில் மகிழ்ச்சி 
ஏமாற்றுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 

வியர்வை சிந்தி உழைப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சோம்பேறியாய் சுற்றுவதில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி 

பிடித்தவர்களிடம் அன்பு காட்டுவதில் சிலருக்கு மகிழ்ச்சி  
செல்லப்பிராணிகளிடம் பழகுவதில் மகிழ்ச்சி 
பிறரை சிரிக்க வைப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
மற்றவர்களை அழவைப்பதில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி 

மக்களை அல்லாட வைப்பத்தில் சிலருக்கு மகிழ்ச்சி 
கலைகளை கற்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 

விளையாட்டு விளையாடுவது பலருக்கு மகிழ்ச்சி 
எழுதுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 

வலைதளத்தில் நட்பை வளர்ப்பதில் மகிழ்ச்சி 
பிடித்த நடிகர் படத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி 

விரும்பிய நபர்களுடன் மொபைலில் பேசுவது மகிழ்ச்சி 
நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதில் மகிழ்ச்சி 

பகிர்ந்து கொள்வதில் சிலருக்கு மகிழ்ச்சி 
அதிசயங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி 
இனிய சொற்களை, பாடல்களை கேட்பதில் மகிழ்ச்சி 
நறுமணத்தை நுகருவதில் மகிழ்ச்சி 

ருசியாக சாப்பிடுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சிலருக்கு ருசியாக சமைப்பதில் மகிழ்ச்சி 
அரட்டை அடிப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சிலருக்கு தூங்குவதில் மகிழ்ச்சி 

கனவு காண்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
வண்ண உடைகளை அணிவதில் மகிழ்ச்சி   

என்றும் மகிழ்ச்சியாய் இருங்கள் 
மகிழ்ச்சியை பிறருக்குத் தாருங்கள் ..

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))