Pages

Monday, 13 January 2014

77. CAN YOU READY EXPLAIN THIS ? 77. இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தயாரா?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

77. CAN YOU READY EXPLAIN THIS ?
* Are you ready to explain this ? Many people do not remember the good things as well as do not keep it 's details in their mind . But remember the bad things are good ! That is, people remember their enemy well rather than friends.  
* God created the ups and downs because of we compare each other for the sake of comfort and get satisfaction !
* Answers are very easy to read . But the question within it, is very difficult to establish . Microscopic knowledge person only can able to do it properly 


* You can memorize Many books. But it is difficult to give the suitable answer for the given questions? 
* There is no use in Self pride and talking that 'my language is best' like that. A person in the highest place does not need to advertise . A person in the lowest place , ' here I am ', like the advertisement is mandatory .

* Success life steps continues next...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

77. இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தயாரா?


* இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தயாரா?  பலர் நல்ல விஷயங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் கெட்ட விஷயங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்கிறார்கள்! அதாவது ஒருவனின் நண்பர்களைப் பற்றிய விவரங்களைக் காட்டிலும் அவனின் எதிரியின் விவரங்களை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


* கடவுள் நம்மில் ஏற்ற தாழ்வுகளைப் படைத்திருப்பது நாம் ஒருவரை ஒருவர் பார்த்துத் திருப்தியும் ஆறுதலும் அடைவதற்காக!


* பதில்களைப் படிப்பது மிகவும் எளிது. ஆனால் அதைக்கொண்டு கேள்வி உருவாக்குவது மிகவும் கடினம். நுண்ணிய அறிவுள்ளவர்கள் மட்டுமே அதைச் சரியாக செய்ய முடியும்.


* புத்தககங்களை பலர் கண்களை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்துவிடுகின்றனர். ஆனால் அதிலிருந்து கேள்விகளைக் கேட்கின்ற போது விடை தெரியாமல் முழிக்கின்றனர்.


* தான் , தன் மொழி உயர்ந்தது என்று தற்பெருமையாக பேசிகொண்டிருப்பதால் எவ்வித பயனும் இல்லை. அதாவது உயர்ந்த இடத்தில் இருப்பவனுக்கு தான் இருக்கும் இடத்தைப் பற்றிய விளம்பரம் தேவையில்லை. தாழ்ந்த இடத்தில் இருப்பவனுக்குத் தான் 'நான் இங்கிருக்கிறேன்' என்கிற விளம்பரம் கட்டாயம் தேவை.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




76. WHO WILL GET SECRET OF TREASURE ? 76. யார் புதையலின் ரகசியம் அடைவார்கள் ?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

76. WHO WILL GET SECRET OF TREASURE ?
* A cruel thing in this present world is, even we tell the 'secret of treasure' to some people, many of them try it as 'just like that' . very few people would dig it and get that successful treasure.
* When riding your car 'up' direction of the bridge in land , ensure a small stone in  the back wheel because it will be helpful If a situation of break failure that small stone will prevent to slide down. Likewise , when you are climbing up , that time, you find any stone (even small) in front of the wheel you must remove it and through it way or break it into powder. Because it will give trouble during your journey. The life lesson is, even if you are facing a small barrier (even small) in front of you then you must break it in to pieces  then only there will be a progress in your life. At the same time, if some well-wisher give a small advice that may be helpful in your difficult times .
* You can't expect today's once character will be continued tomorrow also. The chance is only fifty percent !
* It is very difficult to change once birth-Character. But it is possible only by doing hard work and applying concentration.
* You can't know once real behavior merely by talking daily with him. How he behaves in various situations that might be accounted.



* Success life steps continues next...

*********************************************************************************************
வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

76. யார் புதையலின் ரகசியம் அடைவார்கள் ?
* இப்போதுள்ள உலகில் கொடுமையான விஷயம்  என்னவென்றால்  புதையல் இருக்கும் ரகசியத்தைச்  சொன்னாலும் அதைத் தேடி சிலரே செல்கிறார்கள். அதிலும் வெகுசிலரே அதை தோண்டி எடுத்து வெற்றிகொள்கிறார்கள்.  
* உனது வாழ்க்கை வண்டி மேலே ஏறும்போது பின்புற சக்கரத்தில் எப்போதும் சிறிய கல் இருப்பது நல்லது. ஏனெனில் நீ கீழே இறங்கும் சூழ்நிலை வந்தால் அந்த கல் உன்னை இறங்க விடாமல் தடுக்கும். அதேபோல் நீ மேலே ஏறும் போது அதே சிறிய கல் முன் சக்கரத்தில் இல்லாமல் பார்த்துக்கொள். ஏனெனில் உன்னை அது முன்னேறவிடாமல் செய்துவிடும். அதுபோல நீ முன்னேற வேண்டுமென்றால் சிறிய தடை வந்தாலும் அதை தகர்த்து எறி. உனது முன்னேற்றம் தடை படாது. அதே சமயத்தில் உன்னைக் காக்கும் சிறிய ஆலோசனையை தவிர்க்காமல் உன்னுடன் அழைத்துக் கொள். ஏனெனில் உனது கஷ்டமான காலத்தில் அது உதவும்.
* மனிதனின் இன்றிருக்கும் குணம் போல நாளையும் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்பிக்கை. ஆனால் அதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே!
* பிறவிக்குணத்தை மாற்றுவது என்பது எட்டாக்கனியாக இருந்தாலும் முயற்சி மற்றும் கவனம் இருந்தால் அதை நல்ல திசையில் மாற்றி வாழ்கையில் வெற்றி பெறலாம்.
* தினமும் ஒருவனிடத்தில் பேசுவதினால் மட்டுமே அவனின் உண்மை சுயரூபம் தெரிந்து விடாது. அவன் பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்தே  ஓரளவு தெரியவரலாம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

*********************************************************************************************************************************

 

Life lessons that you learn from Natures - 'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்

 'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும்  பாடங்கள்  

  Life lessons that you learn from Nature

 புதுக்கவிதை 
 மதுரை கங்காதரன் 

* தெரியாததை தெரிய வைக்கின்றது 
  புரியாததை புரிய வைக்கின்றது 

* கிடைக்காததை கிடைக்கச் செய்கின்றது 
  கிடைத்தை தொலைக்க / இழக்கச் செய்கின்றது 

* சோகத்தை துடைத்து மகிழ்ச்சி கொடுக்கின்றது 
  தோல்விகளை சமாளித்து வெற்றி தருகின்றது 
* இல்லாத உறவுகளை புதிதாக கொடுக்கின்றது 
  இருக்கும் உறவுகளை மறக்கச் செய்கின்றது 

*அனுபவமில்லாததை அனுபவிக்க வைக்கின்றது 
  பழகாததை பழக்க வைக்கின்றது 

* எதையும் தாங்கும் இதயத்தை கொடுக்கின்றது 
  கொடுத்ததை திருப்பி எடுத்துக் கொள்கின்றது 
* நினைவுகளை மறக்கச் செய்கின்றது 
  மறந்ததை நினைக்கச் செய்கின்றது 

* நிலையானதை மாற்றச் செய்கின்றது
  மாற்றியதை நிலையாக நிற்க வைக்கின்றது 

* விரும்புவதை வெறுக்கச் செய்கின்றது 
  வெறுப்பதை விரும்பச் செய்கின்றது 
* உண்மைகளை பொய் என்று சொல்ல வைக்கின்றது 
 பொய்களை உண்மையென சித்தரிக்கின்றது 

* கண்ணால் காண்பதை நம்பச் சொல்கின்றது 
 காதால் கேட்டு ஏமாறச் செய்கின்றது 

* கஷ்டத்திற்கு பிறகு வளமான வாழ்க்கை தருகின்றது 
 நல்ல வாழ்க்கைக்குப் பிறகு கஷ்டம் பல தருகின்றது 

* நல்லவர்களை அழ வைத்து வேடிக்கை பார்க்கின்றது 
 அழுபவர்களுக்கு சிரிப்பை பரிசாக கொடுக்கின்றது 

* அன்புள்ளவர்களை அரக்கர்களாக மாறச் செய்கின்றது 
  அரக்கர்களின் இதயத்திலும் ஈரம் பிறக்கச் செய்கின்றது 
* கோழைகளை வீரனாக்குகின்றது 
  வீரர்களை கோழைகளாக்குகின்றது 

* உங்களை எனக்கு அறிமுகப் படுத்துகின்றது 
 நான் படைத்ததை படிக்கச் செய்கின்றது 

* காலத்தின் பிடியில் நாம் கை பொம்மைகள் 
 ஆட்டுவிட்டபடி ஆட வேண்டும் 
* காலம் ஒரு  தாயாக அன்பைக் கொடுக்கின்றது 
  காலம் ஒரு ஆசானாக நமக்கு அறிவைக் கொடுக்கின்றது  

* காலம் ஒரு நண்பனாக நமக்கு பாதுகாக்கின்றது 
  காலம் ஒரு வழிகாட்டியாக நமக்கு இருக்கின்றது  

* காலம் காற்றும் மழையும் தருகின்றது 
  காலம் கல்லையும் கனியச் செய்கின்றது 
* காலம் முல்லையும் மலரையும் படைக்கின்றது 
  காலம் உன்னையும் என்னையும் சந்திக்கச் செய்தது 

* காலத்தை வெல்ல நாம் பிறக்கவில்லை 
  காலத்தை அனுபவிக்க நாம் பிறந்திருக்கிறோம்  

* நாம் வாழ்கையில் நம்பிக்கை கொண்டால் உதவுகின்றது 
  
  வாழ்க காலம் ! 
அது வரும் காலத்தில் நமக்கு நல்லதை தருமென்று      நம்புவோமாக!

நன்றி, வணக்கம்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

74. How do you know ? Is your career path is correct ? 74. உங்கள் வாழ்கைப் பாதை சரிதானா?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

74. How do you know ? Is your career path is correct ? 
 
* Your present life is without any problem or you can able to solve all problems  then make sure that your life path is right !  But If you are facing with new problems which cannot be solved in your daily life then you must be forced to change your life direction .
 
* Ordinary man can deceive in very small scale . But acting person only can cheat others in large scale.
 
* It is true that student are getting their life lessons or knowledge more from outside than  their currently studying books. 
 
* If you want to try the newest ! Leave that old . Try for new one ! Then you must get it surely. 
 
* If you want to give somethings to others then hundred arms bearers come towards you. If you start to give,  that will become even a thousand . But when he's in trouble himself and to ask for some help ! Nobody will not be helped . This is today's world.

Success steps continuous next ...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிய வாழ்க்கையின்  வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 


74. உங்கள் வாழ்கைப் பாதை சரிதானா? எப்படி தெரிந்து கொள்வது?
 
* நீங்கள் வாழும் இப்போதுள்ள வாழ்க்கை எவ்வித     பிரச்சனை இல்லாமல் அல்லது வரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கக் கூடியதாக இருந்தால் உங்கள் வாழ்க்கை சரியான 
பாதையில்  போய்க் கொண்டிருக்கின்றது என்பது உறுதி கொள்ளலாம். அதில்லாமல் 
தினமும் புதுப்புது தீர்க்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொண்டால் உங்கள் வாழ்க்கை 
திசையை கட்டாயம் மாற்றியே தீர வேண்டும்.
 
* சாதாரண மனிதனால் மிகச் சிறிய அளவில்தான் ஏமாற்ற முடியும். ஆனால் நடிப்பினால் மட்டுமே மிகப்மிகப் பெரிய அளவில் ஏமாற்ற முடியும்.
 
* தற்போது படிக்கும் ஒரு மாணவனுக்கு அவனுடைய வாழ்க்கைத் தேவையானவைகள் 
பெரும்பாலும் அவன் படிக்கும் புத்தகத்தில் கிடைப்பதைக் காட்டிலும் வெளியில் தான் 
அதிகம் கிடைக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
* முயற்சி இருந்தால் புதியவை உனக்கு வேண்டுமென்றால் அல்லது அடைவதென்றால்
இப்போது பிடித்துக்கொண்டு இருப்பதை விட்டு விட்டால் தான் அது சாத்தியமாகும். அதாவது  பழையது  விட்டு விடு. பிறகு முயற்சி செய் ! புதியது தானாக கிடைக்கும். புத்திசாலிகள்  கிடைத்த வாய்ப்புகளை வைத்துக்கொண்டு புதியனவற்றிற்கு முயற்சி செய்கிறார்கள். கிடைத்தவுடன் பழையதை விட்டு விடுகிறார்கள்.
 
* நீங்கள் கொடுக்க நினைத்தால் உங்களைகளை நோக்கி நூறு கைகள் ஏந்தும். கொடுத்தால் அதுவே ஆயிரம் கூட ஆகும். ஆனால் அவர் சிரமப்படும் சமயத்தில் அவரே வாய்விட்டு உதவி கேட்டால் கூட ஒரு கை கூட உதவ வராது. இது தான் இன்றைய உலகம்.   


 வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     

73. Successful business need 5Ms 73 . வெற்றிகரமான வணிக தேவை 5Ms

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

73. Successful business need 5Ms

For any successful business 5Ms are very important. Those are Men, Machine, Material, Method and Money.

* 1 M : Men (Human resource)  : Without people you can't run a big business. But having  capacity, knowledge and efficient people are needed for a successful  business to face the current competitive world.
* 2 M : Machine : (or service): High capacity machine and high quality service are the main factor to lead good business.

* 3 M : Material ( Finishing) : What ever you are producing or what ever the service you are providing  to people should be attractive and fulfill their needs / application.
* 4 M : Technology (technique) : Day by day people's mentality is changing and  they expect new things. So we have to update in production / service by introducing new technology. For this, need most talented people.

* 5 M : Money : Without money you can't start the business even though you are ready to work hard. Even you are getting money, it is very difficult to manage money. Because money handling requires some sharp and clever mind.

Success steps continuous next ...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்க்கையின்  வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

73 . வெற்றிகரமான வணிக தேவை 5Ms

எந்த வெற்றிகரமான வணிக 5Ms மிகவும் முக்கியம் . அந்த ஆண்கள் , இயந்திர பொருட்கள் , முறை மற்றும் பணத்தை இருக்கின்றன .
* 1 M : மனித வளம் : மக்கள் இல்லாமல் நீங்கள் வணிகம் செய்ய முடியாது. ஆனால் தற்போதைய  போட்டி நிறைந்த உலகில் வெற்றியை எதிர்கொள்ள திறன் , அறிவு மற்றும் திறமையான மக்கள்   தேவையாக இருக்கின்றது.

* 2 M: மெஷின் : ( சேவை ) : அதிக திறனுள்ள இயந்திரம் மற்றும் உயர்ந்த  தரமான சேவை ஆகியவைகள் நல்ல வணிகம் மற்றும் வெற்றிப் பாதைக்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக  இருக்கின்றன .

* 3 M : பொருள் ( தயாரிப்பு  ) : நீங்கள் எந்த பொருளை உற்பத்தி செய்தாலும் அல்லது நீங்கள் என்ன சேவையை மக்களுக்கு அளித்து வந்தாலும் அவைகள் மக்களுக்கு  கவர்ச்சிகரமாக மற்றும் அவர்களின் தேவைகளை / பயன்பாடு நிறைவேற்றும் படியாக இருக்க வேண்டும் .
* 4 M: தொழில்நுட்பம்  ( தொழில் நுணுக்கம் ) : நாளுக்கு நாள் மக்கள் மனநிலை மாறிக் கொண்டு   வருகிறது. அவர்கள் புதிய விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். எனவே நாம் புதிய தொழில் நுட்பங்களை உற்பத்தி / சேவைகளில் அறிமுகப்படுத்தி  வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும் . ஆனால் இதற்கு திறமையான மக்கள் தேவைபடுகிறார்கள்.

* 5 M : பணம் : நீங்கள் கடினமாக உழைக்க தயாராக இருந்தாலும் கூட பணம் இல்லாமல் ஒரு  தொழில் தொடங்க முடியாது . ஒருவேளை பணம் கிடைத்தாலும் அதை நிர்வாகிக்க மிகவும் கடினம். ஏனெ னில் பணம் கையாளுவதற்கு சில  நுட்பமான திறமை மற்றும் புத்திசாலித்தனம்  வேண்டும், 
   
வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^