Pages

Sunday, 13 April 2014

காதலின் இருபக்கங்கள் - THE TWO SIDES OF LOVE

காதலின் இருபக்கங்கள்
THE TWO SIDES OF LOVE
 
புதுக்கவிதை


மதுரை கங்காதரன்
 
  

மனிதனை மண்ணாக்கும் இந்த காதல்
மனிதனை பொன்னாகவும் மாற்றும் இந்த காதல் 
 
கல்யாண ஆசை தூண்டும் இந்த காதல்
கல்யாணத்தை மறக்கச் செய்யும் இந்த காதல்
 
அரைமனிதனை முழு மனிதனாக்கும் இந்த காதல்
முழு மனிதனை அரைமனிதனாக்கும் இந்த காதல்
 
வாழ்கையில் வெற்றி பெறச் செய்யும் இந்த காதல்
வாழ்க்கையை துறக்கச் செய்யும் இந்த காதல்
 
அன்பை உணர்த்திடும் இந்த காதல்
அரக்கத்தை உண்டுபண்ணும் இந்த காதல்
 
கோழைக்கு துணிவை வரவைத்திடும் இந்த காதல்
துணிவுள்ளவனை கோழையாய் மாற்றும் இந்த காதல் 

 
இன்பத்தை அள்ளித் தரும் காதல்
துன்பத்தில் ஆழ்த்துவதும் இந்தக் காதல்  
 
கண் வாய் பேசாமல் இருக்கச் செய்வது இந்தக் காதல்
கண் வாயோடும் பேசிக்கொண்டே இருப்பதுவும் காதல் 
 
சிலருக்கு அழியாமல் இருப்பதும் இந்தக் காதல்
பலருக்கு அழிந்து போவதும் இந்த காதல்
 
உறவுகளை வளர்ப்பதும் இந்தக் காதல்
உறவுகளைப் பிரிப்பதும் இந்தக் காதல்
 
தெருக்கோடியில் இருப்பவனை உச்சத்தில் வைப்பது காதல்
உச்சத்தில் இருப்பவனை தெருவுக்கு வரவைப்பது இந்தக் காதல்
 
குடும்பப் பொறுப்புகளை சுமக்கச் செய்வது இந்தக் காதல்
குடும்பத்தை வெறுக்கச் செய்வதும் இந்தக் காதல்

 

இதயத்திற்கு இதமாக இருப்பது இந்தக் காதல்
இதயத்தை இரணப்படுத்துவதும் இந்தக் காதல் 
 
சாதி மதம் அந்தஸ்தை மறக்கச் செய்வது இந்தக் காதல்  
சாதி மதம் அந்தஸ்தை பார்க்கச் செய்வதும் இந்தக் காதல்
 
இருமனங்களை இணைப்பது இந்தக் காதல்
இருமனங்களை பிரிப்பதும் இந்தக் காதல்
 
மனிதனின் நந்தவனம் இந்தக் காதல்
மனிதனின் பாலைவனமும் இந்தக் காதல்
 
சொல்ல நினைப்பதும் இந்தக் காதல்
சொல்லாமல் இருப்பதும் இந்தக் காதல்
 
உடம்பைப் பொன்னாக்குவதும் இந்தக் காதல்
உடம்பைப் புன்னாக்குவதும் இந்தக் காதல்

 
விழிப்புணர்வோடு கொள்ளும் உண்மைக் காதல் அழியாது
கவர்ச்சியால் வரும் பொய்மைக் காதலோ அழிந்துவிடும்
 
காதல் கிடைக்கவில்லையேல் சாதல் அல்ல வழி
காதல் தியாகம் செய்வது உண்மை காதல் வழி
 
நீங்கள் எந்த பக்கம்?
 
############################################################
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, 31 March 2014

இது நம்ம சானல் வழங்கும் - APRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி

இது நம்ம சானல் வழங்கும்


'இலவசங்களும் விலையாகின்றது' 

பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி 


முட்டாள்கள் தின சிறப்பு நிகழ்ச்சி 
APRIL FOOL SPECIAL 
மதுரை கங்காதரன் 

பேட்டி எடுப்பவர் : இது நம்ம சானல் நிர்வாகி 
பேட்டி கொடுப்பவர் : பிரபல நடிகர் XXX 


1.  "ஒவ்வொரு படத்திலும் கவர்ச்சிகரமா, விதவிதமா பலநிறத்திலே  ஆடைகளைப் போட்டு வர்றீங்களே, அதுக்கெல்லாம் எவ்வளவு செலவு செய்றீங்க"

" செலவா? வாய்ப்பே இல்லை ! எல்லாமே இலவசம் தான் !"

2. "பல இடங்களுக்கு குறிப்பா வெளிநாட்டுக்கும் மற்றும் உள்நாட்டிலே புகழ்பெற்ற முக்கிய இடங்களுக்கு போறீங்களே அதுக்கு எவ்வளவு தர்றீங்க"

"எவ்வளவு.... தரணுமா? தங்குறதுக்கும், சுத்துறதுக்கும் , சாப்பாட்டுக்கும் எல்லாமே அவங்களோட ஏற்பாடு தான். அதாவது இலவசம் தான் "

3. உங்களோட முடியலங்காரத்திற்கு எவ்வளவு கொடுக்குறீங்க ?

" அதுவும் இலவசம் தான் "

4. வித விதமான கார் , பங்களான்னு அனுபவிக்கிறீங்களே அது ?

"எல்லாமே இலவசம் தான். அந்த மாதிரி வசதி செய்து கொடுத்தாத் தான் படப்பிடிப்புக்கு போவேன் "


5. பரவாயில்லையே! உங்க படத்திலே அனல் கக்கும் வசனம், மனதைத் தொடும் பாட்டு, மக்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை இவைகளெல்லாம் நீங்களே எழுதியதா?

என்ன விளையாடுறீங்களா? எனக்கு படிக்கத் தெரியாது. எல்லாம் மத்தவங்க எழுதியது, பாடியது. பலசமயங்களிலே எனக்கு பதிலா வேறொருவர் பேசுவாங்க. நான் சும்மா வாயசைப்பேன். மத்தபடி அவங்களே பார்த்துக்குவாங்க !

6. அப்படியா! அப்புறம் நீங்க ரொம்ப நல்ல நடிக்கிறீங்க. 'ஸ்டைல்' அருமையோ அருமை , நல்ல நடனம் ஆடுறீங்க. இதெல்லாம் நீங்களா செய்றதா?

என்னோட பங்கு இதுலே ஒண்ணுமில்லை. டைரக்டர் என்னென்ன செய்யச் சொல்றாரோ அப்படியே செய்வேன். 


7. உங்களோட சிறப்பு பறந்து பறந்து சண்டை போடுறது ! உங்களுக்கு சண்டைப் போடத் தெரியுமா? எந்த அளவுக்குத் தெரியும்?

எனக்கு எதுவும் தெரியாது. சும்மா கை கால் அசைப்பேன். அவ்வளவு தான். பொதுவா பல இடத்திலே என்னோட 'டூப்' தான் சண்டைக் காட்சிகளிலே நடிப்பாங்க !

8. உங்களுக்கு எந்தெந்த மொழி தெரியும் ? தமிழ் நல்லாப் பேசுவீங்களா?

இதுலே ஒண்ணு நல்லா கவனிக்கணும். தமிழ் படவுலகிலே தமிழ் பேசத்தெரியாதவங்களுக்குத் தான் மதிப்பும் மரியாதையும் தர்றாங்க.   


9. தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கிட்டே பிடிச்ச அம்சம் என்ன?

எனக்கு பிடிச்ச விஷயம் தமிழ் மக்கள் உண்மையில் தமிழனை முன்னேற்றவிடமாட்டாங்க. உதாரணமா என்னையே சொல்லலாம்.     

10. ஆமா !  நான் தெரியாத்தனமாய்க் கேட்கிறேன். நீங்க சும்மா வர்றீங்க போறீங்க. பலது மத்தவங்கத் தான் செய்றாங்க. மேலும் எல்லாமே இலவசம்ன்னு சொல்றீங்க .. ஆனா உங்க படத்தை பல நூறு கொடுத்து கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிறாங்களே. அது எதுக்குங்க ?

"நல்லா சொன்னீங்க. வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். ஆனா நடிப்புக்காரங்களுக்கு பணம் கோடி கோடி கொட்டும். எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் எப்படி கிடைக்கும்? மேலும் படத்தை வெளியிடுபவர்கள் பல கோடி எப்படி சம்பாதிக்கிறது? மக்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்போது அதை வாங்குறதுக்கு கை வலிக்குமா என்ன? 

11. கடைசியாக ஒரு கேள்வி? உங்களோட ஆசை என்ன? அதுக்கு என்ன திட்டம் வைச்சிருக்கீங்க ?

ரொம்ப சின்ன ஆசை தான். திரைப்பட உலகிலே ஒரு கலக்கு கலக்கினது போல அரசியல்லேயும் ஒரு கலக்கு கலக்கணும். மக்கள் மனசு வச்சா நான் முதல்வராக , ஒரு பிரதமராக வரலாம். அந்த நாளைத் தான் எதிர்பார்த்துட்டே இருக்கேன். எனக்கு படப்பிடிப்புக்குப் நேரமாச்சு. இத்தோடு முடிச்சுக்குவோம். நன்றி .. வணக்கம் "   

இதுவரை என்னகளோ இது நம்ம சானல்க்காக எங்களுக்கு பலவிதமான புதுத்தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி"

"நன்றி"

இதிலிருந்து தெரிவது என்னவென்று இப்போது உங்களுக்கு  நன்றாக புரிந்திருக்கும் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&