Pages

Friday, 17 February 2017

தமிழ்ச் சொல் சதுரங்க விளையாட்டு - Mobile App Proposal (Tamil Word Chess)

தமிழ்ச் சொல் சதுரங்க விளையாட்டு
விளையாட்டு மூலம் தமிழ் வளர்க்கும் முயற்சி இது.

இது சதுரங்கம் விளையாட்டு போன்றது. இதில் 10 சொற்களும் அதற்கான உதவிகளும் (சதுரங்க மனிதர்களின் அடையாளங்கள் மற்றும் எதிர்மறை விடைகளும்) கொடுக்கப்பட்டுள்ளன. சொற்களில் விடுபட்ட எழுத்திற்கு பதிலாக சதுரங்க மனிதர்களின் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டு போலவே அந்தந்த மனிதர்களின் விதிபடி நகர்த்துதல் மூலம் உங்களுக்கு சரியான எழுத்து கிடைக்கும். அதாவது 'ராஜா' - ஒரு கட்டம் மட்டும் ஆனால் சுற்றிலும் உள்ள எட்டு கட்டத்திற்குள் நகர்த்தலாம். 'ராணி' - + மற்றும் X திசைகளிலும்,  யானை - + திசையிலும், மந்திரிதிசையில் மட்டும் முன்னே, பின்னே எத்தனை கட்டங்களை வேண்டுமானாலும் நகர்த்தலாம். குதிரையோ L திசையில் மூன்று கட்டங்கள்தான் கட்டாயம் நகர்த்த வேண்டும். சிப்பாய் - முன்னோக்கி நேராக முதல் நகர்த்தல் மட்டும் ஒன்று அல்லது இரு கட்டங்கள், அதன் பிறகு ஒவ்வொரு கட்டமும் நகர்த்த வேண்டும். அவ்வாறு கிடைக்கும் எழுத்து அல்லது எழுத்துகளைக் கொண்டு சொற்களில் நிரப்பினால் எதிர்மறை விடைக்கு ஒத்த முழு விடை உங்களுக்குக் கிடைக்கும்.



விளையாட்டுக்களம்






தமிழ்ச் சொல் சதுரங்கம் - விடைகள்

1. வெற்றி  - இது வாழ்க்கையை உயர்த்தும்
 
2. மகள்     - இதுவும் ஒரு உறவு

3. புன்கை - இது இருந்தால் பலவற்றைச் சாதிக்கலாம்

4. நூலகம்   - இங்கேயும் பலர் கூடுவார்கள்

5. வியப்பு  -  ஆச்சரியம்

6. விதி   -   நடக்காதவைகளைக் கூட நடத்திக் காட்டும்

7. ரு  - கதைக்கு இது முக்கியம்

8. ங்குபிரித்தல் என்றும் சொல்லலாம்

9. நவம்பர்  - இது ஒரு ஆங்கில மாதம்


10. மூன்று - இது ஒரு தமிழ் எண்

******

🤖 AI Review – தமிழ்ச் சொல் சதுரங்க விளையாட்டு
மொத்த மதிப்பீடு : ⭐⭐⭐⭐⭐ (5 / 5)

🔍 கருத்தாய்வு
இந்த “தமிழ்ச் சொல் சதுரங்க விளையாட்டு” என்பது
👉 விளையாட்டையும் மொழி வளர்ச்சியையும் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சி.
👉 சதுரங்கத்தின் விதிகளை தமிழ்ச் சொற்களுடன் இணைத்திருப்பது அறிவாற்றல் + மொழி பயிற்சி இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது.

🧠 கல்வி & அறிவுத் திறன்
நினைவாற்றல் (Memory Power) அதிகரிக்கிறது
சொல் களஞ்சியம் (Vocabulary) மேம்படுகிறது
தர்க்க சிந்தனை (Logical Thinking) வளர்கிறது
மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றது
♟️ விளையாட்டு வடிவமைப்பு
ராஜா, ராணி, யானை, குதிரை, சிப்பாய் போன்ற சதுரங்க மனிதர்களின் நகர்வு விதிகள்
எழுத்துகளை கண்டுபிடிக்கும் முறையாக மாற்றியிருப்பது மிகச் சிறந்த சிந்தனை

📚 தமிழுக்கு கிடைக்கும் பயன்
தமிழ் சொற்களின் அர்த்தம் புரியும்
தமிழ் எண்கள், மாதங்கள், உறவுகள் போன்ற அடிப்படை அறிவு வலுப்படும்
“விளையாட்டு மூலம் தமிழ் வளர்ப்பு” என்ற நோக்கம் முழுமையாக நிறைவேறுகிறது

✅ சிறப்பு அம்சங்கள்
✔ குழந்தைகளுக்கு சலிப்பில்லா கற்றல்
✔ ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்த ஏற்றது
✔ தமிழ் மொழி பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவும்
✔ புதுமையான Puzzle + Game Based Learning
🔧 மேலும் மேம்படுத்த AI பரிந்துரைகள்
விளையாட்டுக் கட்டம் (Grid) படமாக சேர்த்தால் புரிதல் இன்னும் எளிதாகும்
மாணவர்களுக்கு “Try Yourself” என்ற பகுதி
ஒவ்வொரு சொல்லுக்கும் சிறு விளக்கம் / உதாரண வாக்கியம்
PDF / Worksheet வடிவில் வெளியிட்டால் பள்ளிகளில் பயன்படுத்த வசதி
🌱 இறுதி கருத்து
“விளையாடி கற்றால் மொழி நிலைக்கும் –
தமிழை விளையாட்டாக்கினால் தலைமுறைகள் பேசும்.”
இந்த பதிவு
👉 கல்வியாளர்கள்
👉 தமிழ் ஆர்வலர்கள்
👉 பள்ளி மாணவர்கள்
எல்லோருக்கும் பயனளிக்கும் மிகச் சிறந்த மொழி விளையாட்டு முயற்சி.


📱 Mobile App Proposal
தமிழ்ச் சொல் சதுரங்கம் (Tamil Word Chess)
🎯 App நோக்கம்
விளையாட்டு வழியாக
👉 தமிழ் மொழி வளர்ச்சி
👉 சிந்தனைத் திறன் மேம்பாடு
👉 மாணவர்களுக்கு சுவையான கற்றல்

♟️ App செயல்பாட்டு முறை
சதுரங்க போர்டு போல 8×8 Grid
சில கட்டங்களில் எழுத்துகள் மறைக்கப்பட்டிருக்கும்
அந்த இடத்தில் சதுரங்க மனிதர் (♔ ♕ ♖ ♘ ♙) குறியீடு
அந்த மனிதரின் நகர்வு விதிப்படி நகர்த்தினால்

👉 சரியான தமிழ் எழுத்து கிடைக்கும்
எழுத்துகளை சேர்த்தால்
👉 முழு தமிழ் சொல் உருவாகும்
கொடுக்கப்பட்ட உதவி / எதிர்மறை விடை சரிபார்க்கும்

🧩 Game Levels
Beginner – 3–4 எழுத்து சொற்கள்
Intermediate – 5–6 எழுத்து சொற்கள்
Advanced – கடின சொற்கள் + குறைந்த clues
Daily Challenge – தினமும் ஒரு புதிய சொல்

🎓 கல்வி அம்சங்கள்
✔ தமிழ் சொல் களஞ்சியம் (Vocabulary)
✔ தர்க்க சிந்தனை (Logical Thinking)
✔ நினைவாற்றல் (Memory)
✔ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றது
🧑‍🏫 Special Mode
School Mode
ஆசிரியர்கள் Level தேர்வு செய்யலாம்
மாணவர்களின் Score Report
Practice Mode
எந்த அழுத்தமும் இல்லாமல் கற்றல்
🌱 சமூக & சுற்றுச்சூழல் கோணம்
Paper இல்லா கற்றல் (Eco-friendly)
புத்தக சுமை குறைவு
Digital Tamil Learning
💡 கூடுதல் அம்சங்கள்
🔊 தமிழ் உச்சரிப்பு (Audio)
🏆 Badges & Rewards
🌐 Offline Mode
📊 Progress Tracking
🏁 முடிவுரை
“சதுரங்கம் சிந்தனையை வளர்க்கும் –
தமிழ்ச் சொல் சதுரங்கம் மொழியையும் வளர்க்கும்.”
இந்த App
👉 அரசு பள்ளிகள்
👉 CBSE / Matric பள்ளிகள்
👉 தமிழ் ஆர்வலர்கள்
எல்லோருக்கும் பயன் தரும் EdTech Tamil Innovation.

************************

Monday, 13 February 2017

காதலர்கள் தினச் சிறப்புக் கதை - காதலைக் காப்பாற்றிய 'மை'


காதலர்கள் தினச் சிறப்புக் கதை 


காதலைக் காப்பாற்றிய 'மை'
மதுரை கங்காதரன்  

"இன்ஸ்பெக்டர் சார், இதோ நிக்கிறானே இவன், என் மகளை ஏமாற்றி இழுத்திட்டு வந்திருக்கிறான். உடனே இவனைக் கைது செய்யுங்க சார். என் மகளை அவனிடமிருந்து மீட்டுத் தாருங்க சார். அதில்லாமே என் மகள் பதினெட்டு வயது நிரம்பாத மைனர்!"
"சார். எங்கப்பா பொய் சொல்லுறாரு. நான் ஒரு மேஜரான பெண். நான் விரும்பித்தான் இவரோடு வந்திருக்கிறேன். இவரு கைநிறையச் சம்பாதிக்கிறார். இருவரும் ஒரே சாதி,, வரதட்சனை வேண்டாம்னு சொன்னவரு. ஆனா அப்பாப் பார்த்த பையனோ பெரிய இடமா இருந்தாலும் வேலை வெட்டி இல்லாதவன். எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத பையனை வலுக்கட்டாயமாக கட்டி வைக்கப் பார்க்கிறாங்க. நீங்கதான் சார் எங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்"
"ஏம்மா, பார்த்தா சின்னப் பொன்னு போல இருக்கே. நீ மேஜர்னு நான் எப்படி நம்புறது? ஏதாச்சும் அடையாள அட்டை இருக்குதா?"

"எல்லாமே வீட்டிலே இருக்குது சார். நான் வீட்டுக்குப் போனா எங்கப்பா என்னைப் பிடிச்சு வைச்சுருவாரு சார். என்னை நம்புங்க சார்"
"இதோப் பாரம்மா, நீ மேஜர்னு நிரூபிச்சாத்தான் நான் ஏதாச்சும் செய்ய முடியும். இல்லாட்டி நீ உங்கப்பாக் கூடப் போக வேண்டியதுதான். இனி இவரை மறந்து, உங்கக் காதலை மறந்து உங்கப்பாப் பார்த்த வரனைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்" என்று கறாராகப் பேசினார் இன்ஸ்பெக்டர்.
"இனிமே யோசிக்கிறதிலே எந்த ஒரு பிரயோசமும் இல்லை. சும்மா முகத்தைக் கையாலே மூடிட்டு அழுதா பிரச்சனைத் தீராது. இப்பவே சாட்சி வேண்டும்" என்று அடம்பிடித்த இன்ஸ்பெக்டருக்கு சட்டென்று சற்றும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாட்சிக் கிடைத்தது.
"நீ மேஜரானப் பொண்ணுதான். அதற்குச் சாட்சி எனக்குக் கிடைச்சிருச்சி"
"சாட்சி கிடைச்சிருச்சா! என்னா சார் சொல்றீங்க?"
"அந்தப் பொண்ணோட இடதுகை ஆட்காட்டி விரல்லே ஓட்டு போட்ட மைதான் சாட்சி. இதுவே போதும்" என்று சொல்ல பெண்ணின் அப்பா வாயடைத்துப் போக இளங்காதலர்கள் வாயில் புன்னகை அரும்பியது.
*****
காதலைக் காப்பாற்றிய மை
காதலைக் காப்பாற்றிய மை

Friday, 10 February 2017

ரேஷன், கேஸ் மானியம் இருந்தா... குறுங்கதை


ரேஷன்கேஸ் மானியம் இருந்தா...
மதுரை  கங்காதரன்
குறுங்கதை
"நான் அப்பவே படிச்சு படிச்சுச் சொன்னேன். நீங்க கேட்டீங்களா?"
"தலை போறாப்பலே இப்போ என்னாச்சு?"
"என்னாச்சாவா? நான் இப்போ தனியார் கம்பெனியிலே கைநிறையச் சம்பாதிக்கிறேன். அதனாலே ரேஷன் பொருள் வேண்டாம், கேஸ் மானியமும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திடப் போறேன்னு சொன்னீங்க. நீங்க ஒண்ணுச் சொன்னா செஞ்சுடுவீங்கன்னும் எனக்குத் தெரியும்"
"அதனாலே இப்ப என்னா?"
"இப்போ உங்களுக்கு அந்தக் கம்பெனியிலை வேலை இல்லைன்னுச் சொல்லிட்டாங்க. இனி அடுத்த வேலையைத் தேடணும். எப்போதுக் கிடைக்குதோ? அப்படிக் கிடைச்சாலும் இப்ப இருக்கிற சம்பளம் போலக் கிடைக்குமா? இந்த நிலைமையிலே ரேஷனும், கேஸும் இருந்தா வேலைக் கிடைக்கிற வரைக்கும் ஓரளவுக்குச் சமாளிச்சிருக்கலாம்"
"ஏன் இப்படிப் புலம்புரே. எனக்கு மட்டுமா இந்த கதி. உலகத்திலே உள்ள எத்தனையோ பேருக்கு இது மாதிரி நடந்திட்டே இருக்கு. அவங்களெல்லாம் செத்தாப் போயிட்டாங்க?"
"அது இல்லிங்க, நாமெல்லாம் தனியார் கம்பெனியிலே வேலை பார்க்கிறவங்க. வேலை நிரந்தரம் கிடையாது. அதோடு தினமும் பல மணி நேரம் ஓய்வு கொடுக்காமல் பிழிந்தெடுக்கும் வேலை, அத்தனையும் தாண்டி எப்போது வேண்டுமானால் வீட்டிற்கு அனுப்பும் விதி.  ஆனா அரசாங்க வேலை அப்படி இல்லை. வேலை இருந்தாலும், இழந்தாலும் தேதி ஒண்ணு பொறந்தா அவங்களுக்குச் சம்பளமா அல்லது பென்சனா கிடைக்குது. பிச்சு பிடுங்கல் இல்லாத வெள்ளைக்கார வேலை, வருடா வருடம் சம்பள உயர்வு, சலுகைகள், பதவி உயர்வுன்னு அனுபவிக்கிற அவங்களே ரேஷன் வேண்டாம், கேஸ் மானியம் வேண்டாம்னு எழுதித் தராதவங்க உங்களுக்கு மட்டும் எப்படிங்க இந்த மாதிரி எண்ணம் வந்திருச்சு"
"கொஞ்சம் புலம்புறதை நிறுத்து. நான் சொல்றதை முழுசாக் கேளு. போன வாரம் நான் உன்கிட்டே சொன்னதுபோல ரேஷன், கேஸ் வேண்டாம்னு எழுதிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா ஏதோ ஒரு காரணத்தினாலே அதைச் செய்யலை. அதுக்குக் தோதா என்னோட நிலைமையும் இப்படி ஆயிடுச்சி. ஒரு வேளை நான் அப்படிச் செஞ்சுருந்தா, அரசாங்கம் இந்த நிலையிலே 'ஐயோ பாவம், இவரு நல்ல வேலையிலே இருந்தவரு. இப்போது வேலையில்லாமே இருக்கிறாரு. அதனாலே மீண்டும் இவருக்கு ரேஷனும், கேஸும் தருவோம்னுச் சொல்லுமா என்ன? கட்டாயம் சொல்லாது. மறுபடியும் அதைச் சேர்க்குறதுக்குள்ளே எப்பாடுபட வேண்டியிருக்கும்னு நமக்கு நல்லாவேத் தெரியுமில்லே. இந்த காரணத்தினாலேதான் என்னவோ பல பேரு அப்படி எழுதிக் கொடுக்கமாட்டீங்கிறாங்க போல இருக்குது"
".. என்னங்க, நீங்க வேண்டாம்னு எழுதித்தரலேயா? இப்போத்தான் எனக்குப் போன உசுரு திரும்பி வந்தாப்போல இருக்கு" என்று அவள் நிம்மதி மூச்சு விட்டாள்.

**************************************


அமெரிக்க மாப்பிள்ளை - குறுங்கதை


அமெரிக்க  மாப்பிள்ளை
மதுரை கங்காதரன்
குறுங்கதை

'"எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, உங்களுக்கு தெரியும், நம்ம மாப்பிள்ளை அமெரிக்கா மாப்பிள்ளைன்னு! விருந்து தடபுடலா இருக்கணும். சாப்பாடு சமாச்சாரம் நல்ல உசத்தியா இருக்கணும். மேரி பிரவுன், பர்கர், பிட்சா, கே.எப்.சி இன்னும் புதுசா ஏதேதோ சொல்றாங்களே அதுங்க கட்டாயம் இருக்க வேண்டும்" என்று மடமடவென்று மாணிக்கம் தன் பாட்டி, மனைவியிடம் சொல்லி முடித்தார்.
"எல்லாம் சரிதாங்க, ஆனா மாப்பிள்ளைக்குப் பிடிச்சதா இருந்தாத்தான் சாப்பிடுற அவருக்கும் திருப்தி. விருந்து வைக்கிற நமக்கும் திருப்தி"
"நீ சொல்றது சரிதான். எவ்வளவோ சீரியல், சினிமாப்படம், விளம்பரம் பார்க்கிறோம். அதிலேயிருந்து நாமதான் அமெரிக்காவிலே இருக்கிறவங்க எதை எதை விரும்பிச் சாப்பிடுவாங்கன்னுத் தெரிஞ்சிக்கணும்"
"அது இருக்கட்டுங்க, உங்கப் பாட்டி ஏதோ சொல்றாங்க. அதையும் கேட்டுங்க"
"அவங்க பழங்காலத்து ஆளுங்க. அங்களுக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது"
"என்னங்க, மாப்பிள்ளை வந்தாச்சுப் போல இருக்கு. கூடவே நம்ம மகளும் சிரிச்சிட்டே வர்றா. இப்பத்தாங்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு"
"வாங்க, வாங்க என்று வரவேற்றார் மாணிக்கமும் அவன் மனைவியும்.
"மாப்பிள்ளை பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா? எப்படி இருக்கீங்க?என்னதான் தினமும் வீடியோ காலிங்லே பேசினாலும் நேரிலைப் பார்த்துப் பேசுறதுபோல வருமா?"

'"சரியாச் சொன்னீங்க மாமா, எனக்கு எதிலும் குறைச்சல் இல்லை மாமா. அந்த அளவுக்கு உங்க மகள் என்னை நல்லவே கவனிச்சிக்கிறா"
"மாப்பிள்ளையும், நீயும் கோவிலுக்குப் போறாதா..."
"ஆமாம் அம்மா. நாங்க கோவிலுக்குப் போயிட்டு வந்துடுறோம். அப்புறம் ஒண்ணுக் கேட்க மறந்துட்டேன். அம்மா, அப்பா நீங்க எங்களுக்கு எந்த வகையானச் சாப்பாடுச் செய்யப் போறீங்க?"
"இது கூட நமக்குத் தெரியாதா என்ன?" என்று சாப்பாட்டு வகைகளை ஒப்பித்தார்.
"ஐய்யோ அப்பா, இந்த மாதிரி ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணிடாதீங்க".
"ஆமாம் மாமா, உங்க மகள் சொல்றது சரிதான். நீங்க சொன்ன சாப்பாட்டு வகைங்க அங்கே வேறு வழியில்லாமச் சாப்பிடுகிறோம். எங்களுக்குப் பிடிச்சது கேப்பை மாவு தோசை, புட்டு, பருப்புச் சாதம், காய்கறிக் கூட்டு, வத்தல் கொழம்பு, ரசம், தயிர்.." என்று சொல்லச் சொல்ல மாணிக்கத்திற்கு நடப்பது எல்லாம் உண்மை தானா? என்று தன் மனைவியைப் பார்த்தார்.
அடுத்த வினாடியே "பாட்டி, பாட்டி உன் பேரனுக்குப் பிடிச்ச மாதிரி விருந்து கொடுக்கணும்னா  நீங்கதான் விதமா விதமாச் சமைச்சுப் போடனும்":
"அதுக்கென்னடா மாணிக்கம்..." என்று அந்த எண்பது வயதிலும் சுறுசறுப்பாக சமையலறைக்குள் நுழைந்தாள் பாட்டி.