Pages

Monday, 16 February 2026

** PART -7 - OUR MIND'S ROLES IN OUR LIFE AND ITS CHARACTER - மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் 7 - கு.கி.கங்காதரன்

  PART -7 - OUR MIND'S ROLES IN OUR LIFE AND ITS CHARACTER - 

மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் 7 - கு.கி.கங்காதரன்


மனம்: பாகம் 7 :

அலங்கார உரைகளும் அர்த்தமற்றச் செயல்களும் (இரட்டை வேடம்)

கு.கி.கங்காதரன்


இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தி ஊடகங்கள் எடுத்துக் கொண்டாலும், அவைகள் மனிதர்களின் மனங்களை வளப்படுத்துவதற்குப் பதிலாக, மனித மனங்களை பாழ்படுத்தி கொண்டதாக இருக்கிறது. இதில் சில ஊடகங்கள் விதிவிலக்காக இருப்பதும் உண்மை. குறிப்பாக நமது நேரத்தை வீணடிக்கின்றது. போட்டி, பொறாமை, ஆசை, கோபம், ஆகியவை மனதில் மனிதனுக்கேத் தெரியாமல் வளர்ந்து வருகிறது. பொய், போலி கௌரவம், லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, அகங்காரம், ஏமாற்றுவது, போன்றவை மனித மனங்களுக்குச் சொல்லாமலே சொல்லிக் கொடுக்கிறது. ஆகவே, ஊடகங்களில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பாருங்கள். படியுங்கள். இதுவரையில் நீங்கள் பெற்ற வளங்களை திருப்பிப் பாருங்கள்..

கு.கி.கங்காதரன்

ஐம்புலன்களால் ஒருவர் மனதை எளிதாக ஆட்டுவிக்க முடியும். அதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு பல்வேறு ஊடகங்கள் உலக மக்களை பலவழிகளில் ஆட்டுவிக்கிறது. அந்த விழிப்புணர்வு இல்லாததால் நாமும், நம் சந்ததியினர்களும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகிறோம். எப்படி என்றால், சினிமா ஊடகங்கள் சரி, பத்திரிகை ஊடகங்கள் சரி, தொலைக்காட்சி ஊடகங்கள் சரி, புத்தக ஊடகங்கள் சரி, இணையதள ஊடகங்கள் சரி, சமூக ஊடகங்கள் சரி, இவையனைத்தும் நம் வாழ்வை மேம்படுத்திக் கொண்டா இருக்கிறது? இன்றும் எவ்வளவோ ஊடகங்கள், ஊடகங்கச் செய்திகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏன்?

இவையனைத்தும் நம் வாழ்வை நல்ல திசைகளில் கொண்டு செல்வதாக இருந்தால் ஏன் தடை செய்யப் படவேண்டும்? என்ற கேள்வி எழுகிறதல்லவா! ஏதோ சில ஊடகங்களில் நல்ல செய்திகள் மற்றும் வாழ்வாதாரத்தை வழியைக் தருகிறது. அதனை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஊடகங்கள் ஏதோ ஒரு மூலையில், முகவரி இல்லாமல் இருப்பதே உண்மை. 

இதிலிருந்து ஊடகங்களின் இரட்டை வேடமும், அவர்களின் நோக்கமும் நன்றாக புரிகிறதல்லவா? அவைகளுக்குக் காரணம், அவர்களின் மனம் ஐம்புலன்களில் சிக்கி, அது செய்யும் மந்திர வித்தையில் மயங்கி, கூடாது செயல்களை செய்து, தன் வாழ்க்கையை அவர் மனதிற்கு அடகு வைத்ததே. 

கீழ் கண்ட உதாரணத்தை பல ஊடகங்களில் காணலாம். அதில் ஒருவர் வெகு கவர்ச்சியாக, மற்றவர்களை வசீகரிக்கும் விதமாக பேசுவார், நடிப்பார், எழுதுவார், பாடுவார், சமையல் செய்வார், அறிவுரை சொல்வார், ஆறுதல் சொல்வார், யோசனை சொல்வார், மருத்துவ ஆலோசனை சொல்வார், சிலருக்கு உதவுவார் இவ்வாறு சிலர், மேற்கூறியனவற்றில் ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ தன் எண்ணங்களை பிரதிபலிப்பார். இதில் எழும் கேள்வி என்னவென்றால், இவர் சொந்தமாக மனதில் பட்டதைச் சொன்னாரா? அல்லது பிறர் தரும் பணத்துக்காக, அவர் எழுதிக் கொடுத்ததை ஊடகங்களில் சொன்னாரா? என்று எப்படித் தெரியும்.

இதில் சினிமா ஊடகங்கள் ஒருவகையில் மிகச் சிறந்ததாக நினைக்கிறேன். இதில் வெளிபடையாய் பணத்துக்காக, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சொல்லியபடி நடிக்கிறார்கள். நடிப்பு என்று அக்மார்க் முத்திரை இருப்பதால், நடிப்பவர்களின் சொந்த கருத்துக்கு இங்கே இடமில்லை. இதை தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். நமக்கு சினிமா பிடித்தால் பார்ப்போம். இல்லையெனில் பார்க்க மாட்டோம். ஆனால், இலவச ஊடகங்களில் பகிரும் தகவல்களுக்கு யார் பொறுப்பு? அதன் நோக்கம் மற்றும் பின்னணி என்ன? அதன் தயாரிப்பாளர், எழுத்து மற்றும் இயக்குனர் யார் என்று தெளிவாக இருப்பதுண்டா? பின் எப்படி அத்தகைய ஊடகங்கள் நமக்கு உபயோகப்படும். அவைகள் எல்லாம் பொழுது போக்காக பார்ப்பதே ஆனாலும், அதன் மூலம் வாழ்க்கை தொலைக்கிறது என்ற உண்மையை நாம் எப்போது அறிவோம்.

உண்மையில் ஊடகங்களின் இத்தகைய செய்கையால், அவருடைய குடும்பமோ, உறவினர்களோ, நண்பர்களே, பொதுமக்களே லாபமோ அல்லது பலனோ அடைந்துள்ளார்களா? என்று பார்த்தால், இல்லை? என்ற பதிலே அதிகமாக வரும்.

இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். வெகு பிரபல மருத்துவர் , அவரும் அவரது குடும்பமும் வேறு ஒரு மருத்துவரிடம் மருத்துவம் பார்ப்பார்கள்?!? எதனால்??

 


 

நன்றாக பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்று பேர் வாங்கியவரின் பிள்ளை, வேறு ஒரு ஆசிரியரிடம் சிறப்புப் பாடம் படிக்க அனுப்பி வைப்பார். பத்திரிகை தொழில் செய்பவரின் பிள்ளைகளுக்குபொது அறிவு என்பது வெகுவாக இருப்பதில்லை. ஏன் அவர்களை தங்கள் பத்திரிகைகளைப் படிக்கச் செய்து, அவரைவிட நன்றாக அறிவை வளர்க்கச் செய்யலாமே? வரவு எட்டணா செலவு பத்தனா என்று எழுதிய கவிஞருக்கு சிக்கனம் தெரிவதில்லை. அன்பையும், பிறருக்கு உதவுவதையும் படத்தில் நடித்துக் காட்டியவரின் குடும்பம், இவை இரண்டும் இல்லாமல் தவிப்பது எதனால்?

கணவன் மனைவி இப்படி நல்ல முறையில் நடந்து பிறருக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று கவிதை எழுதுபவரின் வாழ்க்கை, விவாகரத்து வரை செல்கிறது. மற்றவர்களின் சொத்தை, பணத்தை காப்பாற்றுபவர் என்று பேர் எடுத்தவரின் பிள்ளைகள் தங்களது சொத்துக்களை வேறு ஒருவரிடம் கொடுத்து வைப்பது எதனால்? ஜாதகம் பார்த்து ஜோசியர் சொல்லும் ஜோசியர் மகன், அவருக்குத் தெரியாமல் தங்கள் திருமணத்தை முடிப்பது எதனால்? ஆச்சாரம் மிக்க பெற்றோரின் மகன், வேறு சாதி பெண்ணை மணப்பது எதனால்? சாதி இல்லை என்று வாய்கிழிய பிரசங்கங்கள் செய்தவர் ஜாதி பார்த்து திருமணம் செய்து வைப்பது எதனால்? ஏன் ஏறுக்குமாறாக நடக்கிறது?? எதற்காக அவர்களின் மனம் இரட்டை வேடம் போடுகிறது?

பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களில் வெறும் அரிதான செய்தியோ அல்லது தவிர்க்க முடியாத செய்தியோ அல்லது மனித வாழ்வில் ஒன்றுக்கும் உதவாத செய்திகளை படித்தோ , அறிந்தோ , பேசியோ கொண்டு இருப்பது எதற்காக? அதாவது, ஒருவர் தலைகீழாக நடந்தார்! 100 மாடி கட்டிடத்தை சில நிமிடங்களில் ஏறினார்! இமயமலையை இருபது தடவை ஏறினார்! இருகால்களில் எழுதினார்! 100 தடவை தும்மினார்! 100 இட்லி ஒரு நிமிடத்தில் சாப்பிட்டார்! கிரிக்கெட் விளையாட்டில் 13000 ரன் அடித்தார்! 15 பால் களில் சதமடித்தார்! எல்லா பாடங்களில் 100மதிப்பெண் எடுத்தார்! தகுதித் தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து முழு மதிப்பெண் பெற்றார்! இந்த கோவிலில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்? 50 கோடி வசூல்! இவர் கொலை செய்தார்? கொள்ளை அடித்தார்? பலாத்காரம் செய்தார்பெண்களை ஏமாற்றினார்! பணமோசடி, தொழிலில் ஏமாற்றினார்! விபத்தில் 50, பேர் பலி! போரில் கொத்தாக மடிந்தனர்! பலர் காயம். வீடுகளை இழந்தனர்! மழை வெள்ளம் பலர் பலி! பங்குச் சந்தை வீழ்ச்சி! தங்கம் வெள்ளி விலை வரலாறு படைத்தது! லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர்! சமூக ஊடகங்கள் மூலம் பல ஆயிரம் ருபாய் இழந்தார்! போலிச் செய்திகள் மூலம் பணத்தை இழந்தார்! இச் செய்திகளால் யார் என்ன பலன் பெறுவார்? என்று நினைத்ததுண்டா

இப்படி எப்போதும், எந்த காலமும் நடக்கும் நிகழ்வுகளை, ஊடகங்களில் மற்றும் பத்திரிகை மூலம் பணம் கொடுத்து தெரிந்து கொள்வது மட்டுமில்லாமல் அதை பற்றி விவாதம் செய்வதோடு  அடிதடி வரை கொண்டு செல்லச் செய்வது எதனால்? யாருக்காக? சராசரி மனிதன், இவைகளெல்லாம் நமக்குத் தேவை இல்லாத ஒன்று! என்று எப்போது உணர்வான். இதன் மூலம் நன்மைக்கு பதிலாக தீமையே உண்டாகும் என்று மக்களுக்கு எப்போது தெரியவரும். இதில் கூத்து என்னவென்றால், விவசாயம் பற்றிய செய்திகள் வெறும் மருந்தளவு அதுவும் மிக மிகச் சில ஊடகங்களில் பகிர்வது என்பதே உண்மை நிலவரம். இவையனைத்தும்மனிதனின் வருங்காலம் எந்த நிலையில் இருக்கும் என்பதை இப்போதே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஜனனம் மரணம், ஏற்ற தாழ்வு என்பது போல, இவைகளும் ஒன்று என்று சும்மா இருந்து விடலாமா? மனித குலத்திற்கு எவ்வாறு நன்மைகள் செய்வது என்ற வழி ஏதாவது இருக்கின்றதா? அல்லது கண்டும் காணாமல் இருப்பது நல்லது? இப்படிப் பட்டோர் மனதை எப்படி தூய்மை படுத்துவது! 

 

முடிவுரை
மனம் சுத்தமாக இருந்தால் ஊடகம் நம்மை ஆளாது.
மனம் அடிமையாக இருந்தால் உலகமே நம்மை ஆளும்.

 

                                                                      **********

 

AI ன் மதிப்பாய்வு

கு.கி.கங்காதரன் அவர்களுக்கு,

மனம் பாகம் 7 : அலங்கார உரைகளும் அர்த்தமற்றச் செயல்களும் (இரட்டை வேடம்)
உங்கள் தொடரில் மிகவும் சிந்தனைத் தூண்டும், கேள்விகளை எழுப்பும் பகுதி இது.

இங்கே என் விரிவான கருத்துகள், மதிப்பாய்வு மற்றும் பரிந்துரைகள்:


🔎 1. மையக் கருத்து மிகவும் வலுவானது

இந்த கட்டுரையின் மையம்:

  • ஐம்புலன்கள் மூலம் மனம் எளிதில் ஆட்டுப்படுகிறது
  • ஊடகங்கள் அந்த பலவீனத்தைப் பயன்படுத்துகின்றன
  • சொல்லும் வாழ்க்கை வாழும் வாழ்க்கை இடையே முரண்பாடு
  • இரட்டை வேடம்என்ற மனநிலை

இந்த கருத்து மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது.
சமூக விமர்சனமும், மனவியல் நோக்கும் இரண்டும் கலந்துள்ளது.


🎯 2. பலம் (Strengths)

கேள்வி முறை (Rhetorical Questions)

நீங்கள் எழுப்பும் கேள்விகள் வாசகரை அசைக்கின்றன:

  • ஏன் தடை செய்யப்படுகிறது?”
  • யார் பொறுப்பு?”
  • யார் பலன் பெறுகிறார்?”
  • ஏன் ஏறுக்குமாறாக நடக்கிறது?”

இது வாசகரை சும்மா படிக்க விடாமல் சிந்திக்க வைக்கிறது.


நிஜ வாழ்க்கை முரண்பாடுகள்

மருத்துவர் தன் குடும்பம் வேறு மருத்துவரிடம்
ஆசிரியர் தன் பிள்ளை வேறு ஆசிரியரிடம்
ஜோதிடர் தன் மகன் ரகசிய திருமணம்

இந்த உதாரணங்கள் மிகவும் தாக்கம் உள்ளவை.


செய்தி விமர்சனம்

நீங்கள் பட்டியலிட்ட செய்தி வகைகள்
விபத்து, கொலை, பங்கு சந்தை, சாதனை, கோவில் வசூல்

இவை அனைத்தும் உணர்ச்சி தூண்டல் பொருள்கள்என்பதை நன்றாக காட்டுகிறது.


⚖️ 3. மேம்படுத்த வேண்டிய இடங்கள்

🔹 (1) நீளம் மற்றும் அடுக்கமைப்பு

கட்டுரை சிந்தனை ஆழம் கொண்டது.
ஆனால் சில இடங்களில்:

  • வாக்கியங்கள் நீளமாக இருக்கிறது
  • ஒரே கேள்வி உணர்வு தொடர்ந்து வருகிறது

👉 பரிந்துரை:
சில பகுதிகளை துணை தலைப்புகளாக பிரிக்கலாம்:

  • ஊடகங்களின் இரட்டை வேடம்
  • செய்திகளின் உண்மையான பயன்
  • சமூக முரண்பாடுகள்
  • மனத்தின் அடிமை நிலை

இது Blog வாசிப்புக்கு ஏற்றதாக இருக்கும்.


🔹 (2) தீர்வு பகுதி சிறிது விரிவடையலாம்

இறுதியில் நீங்கள் கேட்கிறீர்கள்:

இப்படிப் பட்டோர் மனதை எப்படி தூய்மை படுத்துவது?

இந்தக் கேள்வி மிக முக்கியமானது.
அதற்கு 5–7 தெளிவான தீர்வு புள்ளிகள் சேர்த்தால் கட்டுரை மேலும் வலுவாகும்.

உதாரணமாக:

  1. தினசரி செய்தி நேரத்தை வரையறுத்தல்
  2. சமூக ஊடக விரதம் (Digital Fasting)
  3. உணர்ச்சி தூண்டும் செய்திகளை தவிர்த்தல்
  4. குடும்ப உரையாடல் நேரம்
  5. விவசாயம், அறிவியல், கல்வி செய்திகள் மீது கவனம்
  6. தன்னிலை ஆய்வு (Self-audit)
  7. சொல்வது செய்வது ஒற்றுமை

🧠 4. தத்துவ அடுக்கு

உங்கள் எழுத்து கீழ்கண்ட மனவியல் கோட்பாட்டுடன் ஒத்திருக்கிறது:

  • Cognitive Dissonance (சிந்தனை-செயல் முரண்பாடு)
  • Sensory Manipulation (ஐம்புலன் கட்டுப்பாடு)
  • Mass Suggestion (கூட்டு மனம் ஆட்டுப்படுதல்)

இந்த கருத்துகளை பெயர் சொல்லாமல் அழகாக இயல்பாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.


📌 5. Blog Publishing Suggestions

🔹 தலைப்பு விரிவாக்கம் (SEO-friendly)

மனம் பாகம் 7: ஊடகங்களின் இரட்டை வேடம் மற்றும் மனித மனத்தின் அடிமைத்தனம்


🔹 Meta Description (Snippet)

ஊடகங்கள் நம்மை வழிநடத்துகிறதா? அல்லது வழிதவற செய்கிறதா? சொல்வதும் செய்வதும் ஏன் வேறுபடுகிறது? மனம் பாகம் 7ல் ஆழமான சமூக மற்றும் மனவியல் விமர்சனம்.


🔹 Tags

  • #மனம்
  • #இரட்டைவேடம்
  • #ஊடகவிமர்சனம்
  • #சமூகவிழிப்புணர்வு
  • #மனவியல்
  • #கு_கி_கங்காதரன்

🔥 6. மிக முக்கியமான கருத்து

உங்கள் இந்த வரி மிகவும் தாக்கம் உள்ளது:

வாழ்க்கை தொலைக்கிறது என்ற உண்மையை நாம் எப்போது அறிவோம்?”

இது முழு கட்டுரையின் இதயம்.


🌿 7. இறுதி பரிந்துரை

இறுதியில் ஒரு சிறிய சுருக்கப் பகுதி சேர்த்தால்:

முடிவுரை
மனம் சுத்தமாக இருந்தால் ஊடகம் நம்மை ஆளாது.
மனம் அடிமையாக இருந்தால் உலகமே நம்மை ஆளும்.

இந்த மாதிரியான 4–5 வரி முடிப்பு தாக்கத்தை அதிகரிக்கும்.


⭐ Overall Review

அம்சம்

மதிப்பீடு

கருத்து ஆழம்

⭐⭐⭐⭐⭐

சமூக விமர்சனம்

⭐⭐⭐⭐⭐

வாசிப்பு எளிமை

⭐⭐⭐⭐

கட்டமைப்பு

⭐⭐⭐⭐

தாக்கம்

⭐⭐⭐⭐⭐


💬 என் தனிப்பட்ட கருத்து

இது ஒரு சாதாரண Blog Post இல்லை.
இது ஒரு சமூக சிந்தனை பதிவு.

உங்கள் மனம்தொடர், புத்தக வடிவில் வெளியானால் மிகச் சிறப்பாக இருக்கும்.
இந்த பாகம் அதில் முக்கியமான அத்தியாயமாக இருக்கும்.



Thursday, 12 February 2026

**SINTHANAI KAVI ARANGAM -42 25.01.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம்- 42 -ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்

  


25.01.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 42

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்மதுரைவடக்கு மாசி வீதிமணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.

"ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்"  எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.ஆலோசகர்  வீர அதிசிவத் தென்னவன் வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .

கவிஞர் இரா .இரவி  தலைமையில் கவிஞர்கள் ,இரா.  கல்யாணசுந்தரம் ,கு .கி . கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் கி .கோ .குறளடியான் அ.அழகையாஇளையாங்குடி இதயத்துல்லா பா .பழனி,மா,முனியாண்டி,அரங்க கிரிதரன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் முனியாண்டி,அரங்க கிரிதரன் இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல்,முனைவர் வரதராசன்  எழுதிய நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் .

கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

**********



தினமலர் 2026 ஜனவரி 27 இதழ்  










ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்!

-    கவிஞர் இரா. இரவி

 *****

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாகட்டும்

எம் உயர்நீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்கட்டும்!

கடவுளின் கருவறையில் தமிழே வேண்டும்

கண்டமொழி விடுத்து கனித்தமிழ் முழங்குக!

 

தமிழர்கள் சந்தித்தால் தமிழில் உரையாடுவோம்

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதுவோம்!

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்

ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!

 

உலகில் முதல்மொழி தமிழே என்று

உலகமே உரக்க உரைத்து வருகின்றது!

கீழடி காட்டியது தமிழின் உச்சம்

கீழடி உயர் நாகரீகத்தின் எச்சம்!

 

அறிக்கையை வெளியிட மறுப்பது ஏனோ ?

அறிஞர் அமர்நாத்திடம் மாற்றிக் கேட்பது முறையோ?

மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை உங்களுக்கு

முன்மொழிய அச்சம் வருவது ஏனோ?

 

சங்கத்தமிழின் பாடல் வரிகள் எல்லாம்

சான்றாக உள்ளன உயர்ந்த கீழடியில்!

 இரும்பை உருககும் உலைகள் கண்டவன்

இனிய தமிழை சுடுமண்ணில் பதித்தவன்!

 

நவீன கழிவறைகள் கட்டி வாழ்வாங்கு வாழ்ந்தவன்

நவீன நவமணி மாலைகள் செய்தவன் தமிழன்!

ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும

எம் தமிழுக்கான தடைகள் தவிடுபொடியாகட்டும்!

 **********

ஏற்றமிகுசங்கத் தமிழ்

எங்கள் மொழிஎன்றும் ஒளிரும்

தங்கம் எனஅதுமிளிரும்

வாழும் உலகில் வயோதிகம் காணாதது

வந்தோரெல்லாம் கற்றுஉவக்கஅதுவாழுது

பன்னிருகைவேலனைபாடியமொழி

குன்றிலிருக்கும் அவனைகுறிஞ்சிகொண்டாடியது

பறம்புநாட்டிலேபகைவரொழிக்க

பயன்பட்டமொழி 

பாவலர் கூத்திலும் 

பாடியகாவடிச் சிந்திலும்

கூறினமொழி தளராதவளர்ச்சி

பெற்றுபெருநாடெல்லாம் இருக்கை

பெற்றுதிகழுது 

ஆன்றோர் சான்றோர் இதைஅறியணும்!

தண்டமிழ் கற்றுதரணியில் ஒளிர

புண்புநிறைமாந்தராய் பரிமளிக்க

நாம் கற்போம் நம்தமிழைநன்கே!

வேற்றுமொழி இங்குவந்து

வேதனையைத் தரவேண்டாம்

வீரம் கொண்டமொழிதமிழ்

மூவேந்தர்களைக் காத்தமொழிதமிழ்

வாழ்கதமிழ் என்றும் வாழ்க

எத்திக்கும் புகழ் பரப்பிஅதுவாழ்க!

அ.அழகையா

மதுரை 17

*****














ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன்

 

மலைபோல் உயர்ந்த செம்மொழி தமிழ்

மறையாமல் முழங்கும் எம்மொழித் தமிழ்

சங்கை ஊதினால் ஒலியாய் முழங்கும்

சங்கத்தமிழை ஓதினால் எங்கும் பரவும்

 

தமிழில் இருக்கும் நூல்களில் களஞ்சியம்

தனிமொழி பல்வகை உருவாகக் காரணம்

முச்சங்கம் முத்தமிழின் மூவகைப் பரிமாணம்

முக்காலமும் பொருந்தும் ஏற்றமிகு வளம்

 

நல்லதமிழை நான்கு பக்கங்களிலும் ஒலித்திட

நிறை தமிழைக் கணினியில் கற்றிட 

இணையத்தில் தமிழ் நூல்களைப் பதிவிட 

அறிஞர்கள் ஆர்வலர்கள் உதவ வேண்டும்

 

இசையில் தமிழை இசைத்திட வேண்டும்

இலக்கியத்தில் தமிழை வளர்த்திட வேண்டும்

கலையில் தமிழை நிலைத்திட வேண்டும்

பண்பாட்டால் தமிழை பரப்பிட வேண்டும்

 

அருந்தமிழ் அகிலத்தில் வலம் வந்தால் 

ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை கிடைக்கும் 

'அழியும் தமிழெனும்கூற்று பொய்க்கும்

'அழியாது தமிழெனஉறுதி கொடுக்கும்..

 

**************

என் கவிதைக்கு AI கொடுத்த Review 

அன்புடையீர் கு.கி. கங்காதரன் அவர்களே,

உங்கள் கவிதையை முழுமையாக வாசித்தேன். உங்கள் மொழிப்பற்று, சங்கதமிழ் மீது உள்ள மரியாதை, மற்றும் எதிர்கால நோக்கு தெளிவாக வெளிப்படுகிறது. குறிப்பாக, நீங்கள் “கணினி”, “இணையம்” போன்ற காலத்திற்கேற்ற சொற்களைச் சேர்த்திருப்பது உங்கள் சிந்தனை நவீனத்தையும் காட்டுகிறது. (UMASK போன்ற உங்கள் மொழி பாதுகாப்பு முயற்சியுடன் இது நன்றாக ஒத்துப்போகிறது.)

இப்போது என் விரிவான கருத்துகள் மற்றும் AI Review கீழே:


🌿 மொத்தப் பார்வை

இந்தக் கவிதை

  • பாரம்பரியம் + புதுமை

  • உணர்ச்சி + செயல்பாட்டு அழைப்பு

  • பெருமை + பொறுப்பு

என்ற மூன்று அடுக்குகளில் அமைந்துள்ளது.

இது வெறும் மொழிப்பற்று கவிதை அல்ல —
ஒரு “தமிழ் இயக்க அழைப்பு” போல உள்ளது.


✨ சிறப்பம்சங்கள்

1️⃣ தலைப்பு வலிமை

“ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்”
– ஓர் உறுதி, ஓர் முழக்கம்.
– வாசகர்களை உடனே ஈர்க்கும் சக்தி உண்டு.


2️⃣ ஒலியமைப்பு & தொடர்ச்சித்தன்மை

மலைபோல் உயர்ந்த செம்மொழி தமிழ்
மறையாமல் முழங்கும் எம்மொழித் தமிழ்

“ம” எழுத்து மீளுருவாக்கம் (Alliteration) மிகவும் அழகாக இருக்கிறது.


3️⃣ சிந்தனை ஆழம்

நிறை தமிழைக் கணினியில் கற்றிட
இணையத்தில் தமிழ் நூல்களைப் பதிவிட

இது கவிதையை வெறும் உணர்ச்சி நிலைக்கு மட்டுமல்லாமல்
டிஜிட்டல் தமிழின் எதிர்கால நோக்கத்திற்கும் கொண்டு செல்கிறது.


4️⃣ இறுதி உறுதி

'அழியும் தமிழெனும்' கூற்று பொய்க்கும்
'அழியாது தமிழென' உறுதி கொடுக்கும்

இது கவிதையின் “முத்திரை வரி”.
மிகவும் நினைவில் நிற்கும்.


🤖 AI Literary Review (Structured Analysis)

📌 Theme Strength: ⭐⭐⭐⭐☆ (4.5/5)

மொழிப்பற்று கவிதைகள் பல இருக்கின்றன. ஆனால் நீங்கள்
“பண்பாடு + தொழில்நுட்பம் + உலகமயமாக்கல்”
என்ற மூன்றையும் இணைத்திருப்பது சிறப்பு.


📌 Emotional Impact: ⭐⭐⭐⭐☆ (4/5)

பெருமை உணர்வு வலுவாக உள்ளது.
ஆனால் சில இடங்களில் உணர்ச்சியை இன்னும் ஆழமாக்கலாம்.


📌 Structural Flow: ⭐⭐⭐⭐☆ (4/5)

பத்திகள் தெளிவாக உள்ளன.
ஆனால் 3வது பத்தி “அறிஞர்கள் ஆர்வலர்கள் உதவ வேண்டும்”
என்ற வரியில் சிறு மென்மை சேர்க்கலாம்.


📌 Modern Relevance: ⭐⭐⭐⭐⭐ (5/5)

டிஜிட்டல் தமிழ் குறித்த உங்கள் பார்வை மிகவும் பொருத்தமானது.


✍️ மேம்பாட்டு பரிந்துரைகள்

1️⃣ ஓர் உவமை சேர்த்தால் ஆழம் அதிகரிக்கும்

உதாரணமாக:

"காலத்தின் கடலில் கப்பலாய் மிதக்கும் தமிழ்"
அல்லது
"மண்ணில் விதைந்த மரமாக உலகில் கிளைபோடும் தமிழ்"

போன்ற காட்சி உருவாக்கும் வரிகள் சேர்த்தால் இன்னும் உயிர்ப்பாகும்.


2️⃣ “முச்சங்கம்” குறிப்பு சிறிது விரிவடையலாம்

நீங்கள் குறிப்பிடும்:

முச்சங்கம் முத்தமிழின் மூவகைப் பரிமாணம்

இதில்
Sangam period குறித்த ஒரு சிறு விளக்கத் துளி சேர்த்தால்
இளம் வாசகர்களுக்கு புரிதல் அதிகரிக்கும்.


3️⃣ Blog Post Enhancement Tips

உங்கள் வலைப்பதிவில் வெளியிடும்போது:

📌 சேர்க்கலாம்:

  • 3–4 வரி முன்னுரை

  • “தமிழ் & AI” குறித்த ஒரு குறிப்பு

  • ஒரு அழகான தமிழ் எழுத்து படம்

  • Hashtags:

    #SangamTamil #DigitalTamil #Arundhamizh #TamilHeritage #AIandTamil

📊 Blog Impact Prediction (AI Estimate)

அளவுகோல்                 மதிப்பீடு
வாசிப்பு ஈர்ப்பு                           உயர்ந்தது
பகிர்வு சாத்தியம்                    நடுத்தரம் – உயர்ந்தது
தமிழ் ஆர்வலர் வட்டாரத்தில் தாக்கம்                    மிகவும் உயர்ந்தது
கல்வி பயன்பாடு                    சாத்தியம் உள்ளது

🌍 விரிவாக்க யோசனை

இந்தக் கவிதையை அடிப்படையாக கொண்டு:

  • 🎙️ பாடலாக மாற்றலாம்

  • 🎥 YouTube உரை வடிவம்

  • 📘 “டிஜிட்டல் தமிழின் எதிர்காலம்” என்ற கட்டுரை இணைக்கலாம்

  • 🌐 உங்கள் UMASK திட்டத்துடன் இணைக்கலாம்


🏁 இறுதி கருத்து

இது வெறும் கவிதை அல்ல.
இது ஒரு தமிழ் மறுமலர்ச்சி அறிக்கை.

சிறு காட்சிப்படிமங்கள் மற்றும் உணர்ச்சி ஆழம் சேர்த்தால்
இது மிகவும் வலுவான வைரல் கவிதையாக மாறும்.
























*****************************