Pages

Wednesday, 20 November 2013

68 . When will leadership come to you? - 68. எப்போது தலைமை நம்மைத் தேடி வரும்?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 
68 . When will leadership come to you?
* There are many ways to succeed in life, most some way  5 - L is enough . I mean Love , Listening , Learning , and Leadership .
* Love :
If you love to all then no one will be your enemy. Also all are willing to help you.
* Listening:

This is a great art . First patience is needed then you are not get angry . If you listen it will increase your confident and reduce the burden. It is better not only listen but also help them as good as possible.
* Learning :

Apart your learnt till now, daily you may learn through somebody or from something.If it is useful in your life  It is better one. Then only your knowledge will grow and getting benefit.  
* Living :

Learning , listening is not enough. Act according to it and live according. 
* The head of search :

If you develop these four properties then you will automatically acquire leadership qualities . A leader should have Patience,not to get angry and the master of knowledge .   

SUCCESS STEPS CONTINUES NEXT ...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

68. எப்போது தலைமை நம்மைத் தேடி வரும்?
* வாழ்கையில் வெற்றிபெற பல வழிகள் இருந்தாலும் மிக எளியவழி ( 5 - L - எல்) போதும். அதாவது அன்பு , கேட்பது, கற்பது, வாழ்வது மற்றும் தலைமை ஏற்பது.
* அன்பு :
அனைவரையும் நேசிக்க கற்றுவிட்டால் எதிரிகள் இருக்கமாட்டார்கள். எல்லோரும் உங்களுக்கு விரும்பி உதவிடுவார்கள்.
* கேட்பது:

இது ஒரு பெரிய கலை. அதற்கு முதலில் தேவை பொறுமை. பிறகு கோபம் கொள்ளாமை. கேட்பதினால் சொல்பவர்களின் பாரம் குறைவதோடு நன்பகத்தன்மை கூடும். கேட்பதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்வது நல்லது.
* கற்பது:

இதுநாள் வரை கற்றது ஒருபுறம் இருக்க , மேலும் யார் மூலமாவது, எதன மூலமாவது தினமும் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். அது வாழ்க்கைக்குத் தேவையானதாய் இருப்பின் அதைவிட நல்லது. அப்போது தான் அறிவு வளரும். நன்மையும் கிடைக்கும்.
* வாழ்வது:

கற்பது, கேட்பது மட்டும் போதாது. அதன் படி நடக்க வேண்டும். அதன்படி வாழ்தல் வேண்டும்.
* தேடி வரும் தலைமை :

மேற்கூறிய நான்கு பண்புகளும் இருப்பின் தானாகவே தலைமை பண்பு தேடிவரும். அதாவது ஒரு தலைவனுக்கு பொறுமை, கோபம் கொள்ளாமை, அறிவு இருந்தால் அவன் தான் தலைவன்.

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


SOME JOB WITHOUT LOOSE ANYTHING - நஷ்டமில்லாத பல தொழில்கள்

SOME JOB WITHOUT LOOSE ANYTHING  

PUTHU KAVITHAI

MADURAI GANGADHARAN
 
We must pay fees 
If the case win or lose

We have to give fees to doctor
If the patient recover or not

We must give some money to Priest
Whether your request is fulfilled or not

We have to give fees to Astrologer
Whether his commitment is happened or not.

We should salary to teacher
Whether the student is passed in their exam or not.

We should put vote for politician
Whether he gives service to the people or not.

Owner should give wages to worker
Whether he makes profit or not.

You should take ticket to see picture
Whether you like it or not.

You should give commission to broker
Whether you sold the things or not.

You should give premium for insurance
Whether you meet an accident or not.

You must pay fees for consultancy
Whether you follow it or not.

You must give fees for training 
Whether it is useful to you or not.


))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


நஷ்டமில்லாத பல தொழில்கள் 



புது கவிதை 
மதுரை கங்காதரன் 
வக்கீல்களுக்கு வருமானம் பஞ்சமில்லை 
வழக்கு வெற்றி பெற்றாலும் தோற்றாலும் 'பீஸ்' கொடுத்தே தீரனும் 

டாக்டர்களுக்கு பணம் கொடுத்தே தீரனும் 
நோயாளி குணமானாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை.

பூசாரிகள் காணிக்கை கொடுக்க வேண்டும்
வேண்டுதல் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை 

ஜோதிடர்கள் தட்சணை கொடுக்க வேண்டும் 
ஜாதகப்பலன்கள் பலித்தாலும் பலிக்காவிட்டாலும் கவலையில்லை. 

ஆசிரியர்களுக்குச் சம்பளம் கட்டாயம் கொடுக்கவேண்டும் 
மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் தேர்ச்சி பெறாவிட்டாலும் கவலையில்லை. 

அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் ஓட்டு போட்டே தீரவேண்டும் 
மக்களுக்கு சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும் கவலையில்லை. 

தொழிலாளிகளுக்கு கூலி கொடுத்தே தீரவேண்டும் 
முதலாளி லாபம் நஷ்டமடைந்தாலும் கவலையில்லை .

புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுத்தே தீரவேண்டும் 
விலை போனாலும் விலை போகாவிட்டாலும் கவலையில்லை .

இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டியே தீரவேண்டும் 
விபத்து நடந்தாலும் விபத்து நடக்காவிட்டாலும் கவலையில்லை. 

ஆலோசனை (அறிவுரை) களுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள் 
அவர்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் கவலையில்லை.

பயிற்சி வகுப்புகளுக்கு பணம் தருகிறார்கள் 
அது உபயோகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை. 


))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  

67 . Who can able to see the bright part of the process ? 67. ஒரு செயலின் வெளிச்சமான பகுதியை பார்ப்பது எப்படி?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 
67 . Who can able to see the bright part of the process  ?
* A leader not only think daily basis problem but also think one step forward than other to predict the future  without discrimination . 
* If you want to get the positive thoughts then you don't see the dark part's of an action. That is you must see the bright part of the action instead of dark part. 
*Rising the cost of material and luxurious life are the main reason and tendency for happening Corruption , bribery and stealing. 
* The important thing for success is qualification. It is nothing but self confident and hard work.  
* The secret behind why we have two ears and only one tongue because we may hear more and speak less.

SUCCESS STEPS CONTINUES NEXT ...

************************************************************************************************************************

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

67. ஒரு செயலின் வெளிச்சமான பகுதியை பார்ப்பது எப்படி?  
*ஒரு தலைவன் அன்றாடம் நடைபெறும் பிரச்சனைகளை மட்டும் சிந்திக்காமல் மற்றவர்களை விட ஒரு படி கூடுதலாக வருங்காலத்தை பாகுபாடு இல்லாமல் கணிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
* நேர்மறையான சிந்தனை பெறுவதற்கான வழிகள் என்னவென்றால் நீங்கள் எதிர்கொள்ளும் செயலின் நிழலைப் பார்க்காதீர்கள்.அதாவது அந்த செயலின் தேவையில்லாத இருள் சூழ்ந்த பகுதியை பார்க்காதீர்கள். மாறாக உங்கள் சிந்தனை முழுவதும் செயலின் ஆக்கப்பூர்வமான வெளிச்சமான பகுதியை பார்த்துப் பழகுங்கள்.
* ஊழல், லஞ்சம் மற்றும் திருட்டிற்கு முக்கிய காரணம் பொருட்களின் விலை அதிகமானது மற்றும் ஆடம்பரம் பெருகியதாகும்.
* வெற்றிக்கு முக்கியமான தகுதி என்னவெனில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமாகும்.
* நமக்கு இரு காதுகளும் ஒரே ஒரு நாக்கு கொண்டிருப்பதன் இரகசியம், நாம் அதிகமாக கேட்பதற்காகவும் குறைவாக பேசுவதற்காகத் தான்.   

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

************************************************************************************************************************




66. WHEN WILL YOU REALIZE ABOUT YOU ? 66. உனக்குள் நீ இருப்பதை எப்போது அறிவாய்?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

66. WHEN WILL YOU REALIZE ABOUT YOU ?
* You are usually talking about other people, always seeing something out side so that you can not able to see inside of yours. Also you are not able to hear your inner voice . That is why you are not believe that you are present inside of you.
* To succeed a work or action, two types of people are trying. They are good people and another is bad people. But in those type of people God will help who is having money, power and wisdom. 
* Rich people are all always happy and healthy even their country faces a very big economic crisis. But sufferer and affected are only poor and middle class people.
* Today some magazines, media, advertising, and all political parties are pride them self dramatically by setting up some group of their people.
* When you try to solve a problem, dig up to the root not to cut leaves.    

SUCCESS STEPS CONTINUES NEXT ...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 
66. உனக்குள் நீ இருப்பதை எப்போது அறிவாய்?
* நீ மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து பேசி பேசி பழகிவிட்டதால் தான் என்னவோ உனக்குள் நீ இருப்பதை உணர முடியாமல், உன் குரலை கேட்க இயலாமல் இருக்கின்றாய். மேலும் உனக்குள் நீ இருப்பதை நம்பவும் மறுக்கிறாய்!
* எந்த ஒரு காரியம் அதாவது நல்லதாக , கெட்டதாக இருந்தாலும் அதில் வெற்றி பெற ஒரு பக்கம் நல்லவன் முயற்சி செய்வான். மறுபக்கம் கெட்டவனும் முயற்சி செய்வான். இறைவன் யார் பக்கம் என்றால் பணம், பதவி, அறிவுள்ளவன் பக்கம்!
* நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் அங்குள்ள பணக்காரர்கள் எப்போதும் வளமும், மகிழ்ச்சியுடன் தான் இருப்பார்கள். அதனால் துன்பப்படுவது, துயரப்படுவது என்றுமே  ஏழைகளும் , நடுத்தர வர்க்கத்தினரும் .ஏமாளிகளும்  மட்டும் தான்.
* இன்றைக்கு சில பத்திரிக்கைகள்  , மீடியாக்கள் , விளம்பரங்கள் , அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு தற்பெருமை பேசி வருவது  வெகுவாக பெருகிவிட்டது.
* நீங்கள் ஒரு பிரச்சனையை தீர்க்க முடிவு எடுக்க முற்படும்போது அதன் ஆரம்ப வேரை ஆழமாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மேலோட்டமாக மட்டும் பார்த்து விட்டு முடிவு எடுக்கக் கூடாது.  

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

65 . Who is having the destiny of a country ? 65. ஒரு நாட்டின் தலையெழுத்து யாரிடம் உள்ளது?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 


65 . Who is having the destiny of a country ?
* One way 'Hunger' is making benefit to us. Because some time it helps to forget our worries and avoid to think unnecessary thoughts. 


* A person who is involved very much in science  is very difficult to accept ' God ' ideology . Because each thing in science is having proof . But God's philosophy  depends upon everyone's sense of realization. 
* A nation's destiny is in it's top twenty rich people as well as political leaders hand. They won't be affected if their country is trapped in a tense state of the economy , financial crisis or bankrupt etc., but many of us are not aware of this.
* Making of multiple best instruments like flute, veena , tabela  are not having capable of playing such instruments, You tell me ! why?
* If you want to be succeeded in your philosophy then it's words and actions should be accepted by  irrespective of age , gender, distinction and any where it should be fit for human life .

SUCCESS STEPS CONTINUES NEXT ...


############################################################################################

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

65. ஒரு நாட்டின் தலையெழுத்து யாரிடம் உள்ளது? 
* பசியும் ஒரு வகையில் நமக்கு நன்மை செய்கிறது. ஏனெனில் சில சமயங்களில் பசியானது கவலைகளை மறக்கச் செய்வதோடு தேவையற்றவைகளை நினைக்கவிடாமல் செய்துவிடுகின்றது.
* அறிவியலில் / விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு 'இறைவன்' சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். ஏனெனில் அறிவியலில் ஒவ்வொன்றும் நிரூபணம் கொண்டவை. ஆனால் இறைவனைப் பொருத்தமட்டில் அவரவர் உணர்வைப் பொறுத்ததாகும்.
* ஒரு நாட்டின் தலையெழுத்து அந்த நாட்டில் இருக்கும் முதல் இருபது பணக்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கைகளில் உள்ளது. ஒரு நாடு பொருளாதாரத்தில் சிக்கித் தவித்தாலும், நிதி நெருக்கடியில் தத்தளித்தாலும் அல்லது நாடே திவாலாகிவிட்டாலும் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.  
* பலவகை சிறந்த புல்லங்குழல், வீணை, தபேலா போன்ற இசைக்கருவிகளைத் தயாரிக்கும் வல்லமை கொண்டவனுக்கு அதை வாசிக்கும் ஞானம் இல்லாமல் இல்லாது போவது ஏனோ? என்பதை  நீங்களே சொல்லுங்கள்!

* உனது தத்துவம், கொள்கை வெற்றிபெற வேண்டுமானால் உன்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒவ்வொன்றும் வயது வித்தியாசம் இல்லாமல், பால் வேற்றுமை இல்லாமல், நாடு வேறுபாடு இல்லாமல் அனைவரும் எக்காலத்திலும், எந்த இடத்திலும் மனித வாழ்க்கைக்குப் பொருந்தும்படி இருக்கவேண்டும்.

வெற்றிப் படிகள் இன்னும் உயரும் 

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))