PART -6 - OUR MIND'S ROLES IN OUR LIFE AND ITS CHARACTER -
மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் 6 - கு.கி.கங்காதரன்
‘மனம்’ கணமாகும் போது தராசு கீழே இறங்கும்
1. அடையாளம் – கர்மா – ஆன்மீகம் – மன தூய்மை
குழப்பமுள்ள
மனம்
வெளி உலக வாழ்க்கையில்,
உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதைத் தான்
மற்றவர்களுக்குத் தர இயலும். அதுபோல,
உங்கள் மனதில் எந்த எண்ணங்களை சேமித்து
வைத்துள்ளீர்களோ அதைத் தான் மற்றவர்களுக்குத் தர இயலும். நல்ல எண்ணங்கள் இருந்தால்
நல்லனவற்றை எளிதாகத் தர முடியும். கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களிடம் நல்லனவற்றை
எதிர் பார்க்க முடியாது. அப்படி அவர் நல்லது செய்தால் அது போலியாகவே இருக்கும்.
ஆகவே, நல்லதை சேமிப்பதும் கொடுப்பதும் எளிது. அதுவே மக்களுக்குச்
செய்யும் மகத்தானத் தொண்டு. அதோடு ,
இருப்பதைக் கொடுக்காமல் இருந்தால், உங்களுக்குக் கொடுக்க
மனமில்லை அல்லது ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த்தம். கொடுத்ததை இல்லை என்றால், உங்கள் மனம்
ஏமாற்றுகிறது என்று அர்த்தம். இல்லாததை இருக்கிறது என்று சொன்னால், உங்கள் மனம் பொய்
வேஷம் அல்லது போலி கௌரவம் போடுகிறது என்று அர்த்தம். ஆனால், ஒருவரின் மனதில் உள்ள
உண்மையான எண்ணங்களை அவரே அறியார். ஏனென்றால்,
மனம் நொடிக்கு நொடி மாறக் கூடியது. நாம்
தான் நிலையான மனதை எட்டப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கு.கி.கங்காதரன்
நடைமுறையில் உங்களால் உறவுகள் மற்றும் நண்பர்கள் இல்லாமலும், சாதி, மதம், இனம், மொழி, சமயம், தேசியம் அடையாளம்
இல்லாமலும் வாழ முடியுமா? நடைமுறை வாழ்க்கையில் அது முடியாது! ஆனால், மன வாழ்க்கையில்
முடியும்!
அது எப்படித் தெரியுமா?
உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய்
இருக்கிறது. அதை உங்கள் உறவினர் ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பணம் உங்கள்
அவசரத் தேவைக்கு வைத்துள்ளீர்கள். இந்த வேளையில் அவரிடத்தில் ' இந்த பணம் என் அவசரத்
தேவைக்கு வைத்துள்ளேன். அதாவது, உங்களுக்குத் தருவதற்கு வாய்ப்பில்லை' என்று கூறலாம். அதுவே
உத்தமம். அதுவே உண்மை.
ஆனால், இதே நேரத்தில்,
உங்கள் மனதில் இவ்வாறு சொல்லிக் கொள்ளலாம்.
அதாவது, ' என் உறவினர் பணம் கேட்கிறார். இந்தாங்க ஒரு லட்சம் ரூபாய்.' என்று மனதளவில்
அவருக்குத் தரலாம் இல்லையா! இப்படி ஒவ்வொரு இயலாத நிகழ்வின் போது, உங்கள் மன வாழ்வில்
இத்தகைய காரியங்கள் செய்யலாம், இல்லையா! இப்படி செய்தால் உங்கள் மனம் என்றும் நிம்மதியில்
இருக்கும். இதனால் உங்கள் பணம் கைவிட்டுப் போவதில்லை. மாறாக, உங்களால் செய்ய
முடியாத ஒரு வேலையை, உங்கள் மனம் எளிதாகச் செய்கிறது அல்லவா? இவ்வாறு இருக்க
வேண்டும் என்றால் நீங்கள், உங்கள் மனதுடன் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். மனதை நல்ல
எண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்தங்களை விட்டு விலகி தனியாக இருக்க
எண்ணுகிறீர்கள். அப்படியானால் உங்கள் வெளிவாழ்வில் அந்த இடமானது , நீங்கள் கண்ணுக்குத்
தெரியாத, யாரும் இல்லாத காட்டிலோ அல்லது மலையிலோ தான் இருக்கும். ஒரு
வேளை அந்த இடத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் வாழ்வீர்களா? மேலும், எல்லோருக்கும்
அத்தகைய வாய்ப்பு எளிதாகக் கிடைப்பதில்லை. 'வாழ்க்கையே வேண்டாம்!'
என்று சொல்பவர்கள் மற்றும் வாழ்க்கையை
வெறுப்பவர்கள் அல்லது இறைவனைக் காண வேண்டும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால்
காட்டுக்குப் போவதற்கு வாய்ப்பு உண்டு. அதுவும் மனதையும் உடலையும் கட்டாயப்படுத்தி
கொண்டு! அப்படி எல்லோரையும் எதிர்த்து இப்படி வாழ்தல், நல்ல வாழ்க்கைக்கு
அழகு தானா?
இப்படிப் பொது நடைமுறையில் ஒத்து வராதது ஒன்றை, முனிகள், மகான்கள், தத்துவ ஞானிகள், வேத விற்பன்னர்கள், 'அனைத்தும் துற' என்று எந்த
அர்த்தத்தில் சொல்லி இருப்பார்களா?
ஒருவேளை அப்படிச் சொல்லி இருந்தால், "உங்கள்
வாழ்வில் அவைகள் எல்லாம் அதாவது லௌகீக வாழ்வில்,
உங்களால் துறக்க முடியாத பட்சத்தில், உங்கள் மனதளவிலாவது
அனைத்தையும் துறக்க முயற்சி செய்யுங்கள் என்கிற அர்த்தத்தில் தான்
சொல்லியிருப்பார்கள்.
உண்மையில் நீங்கள் எல்லாக் கடமைகளையும் முடித்துக் தனிமையில்
உள்ளீர்கள் என்றால், இறைவனை அடையும் முயற்சியாக,
அத்தகைய எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, காடு மேடுகளுக்குச்
செல்லலாம். அது உங்களின் வாழ்க்கையின் லட்சியத்தை அடையவும், பாதுகாப்புக்
கவசமாகவும், அல்லது மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற
அர்த்தத்தில் முடிவு எடுத்து இருப்பீர்கள் என்று கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும் அந்த எண்ணத்தைக் கொண்டு, நடைமுறையில்
தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதோ அல்லது மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதோ
கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்கள் என்று கருதுகிறேன். அதாவது , வெளிவாழ்வில் எதையும்
துறக்க வேண்டாம். அவைகள் உங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் காரணிகள் ஆகும்.
ஆனால், உங்கள் மனதில் அதாவது,
முன்னே கூறிய ஒரு லட்சம் ரூபாய் உங்கள்
உறவுக்கு மனதளவில் தருவது போல, உங்கள் மனதளவிலாவது அத்தனை வாழ்க்கை இணைப்புகளையும், அதாவது, உங்களை இழுக்கும்
கொக்கிகளை கழற்றி விடலாம் இல்லையா?
இந்த எளிதான முயற்சிக்குப் பணம்
தேவையில்லை. மனம் ஒன்றே போதுமானது.
ஆனால், நீங்கள் செய்ய வேண்டிய அந்த ( முடியாத ) காரியங்களை, நீங்கள் உங்கள்
மனதில் செய்து கொள்வது நல்லது. செய்யாவிட்டால் அதுவே உங்களின் மன பலவீனமாகும்.
அந்த பலவீனத்தை வைத்துக் கொண்டு , நீங்கள் கொண்டுள்ள அரசியல்,
அதிகாரம்,
பதவி,
பணம்,
ஆன்மீகம்,
ஆகியவற்றின் மேல், சில போலி
ஆசாமிகளுக்கு எப்போதும் ஒரு கண் இருக்கும். அந்த போலி ஆசாமிகள், தங்களின் அன்றாட
வாழ்க்கை வசதிக்காக, உங்களின் அந்த மன பலவீனத்தைப் பயன்படுத்தி, உங்களுக்கு பல
வழிகளில் ஆசை வார்த்தை காட்டுவார்கள்.
அதன் மூலம் அந்த போலி ஆசாமிகள்,
உங்களிடமிருந்து நிறைய
பணம் , நகைகள், சொத்து முதலியவை வாங்கிவிடவேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தோடு
உங்களிடம் நெருங்கிப் பழகுவார்கள்,
அதிக விசுவாசம் காட்டுவார்கள். அவர்கள்
தங்களது சுயநலத்திற்காகவும், லாப நோக்கம் கொண்டும்,
பேராசை கொண்டும் எப்படியும்
உங்களிடமிருப்பவைகளை அபகரிக்க எண்ணுபவர்களிடம் நீங்கள் சிக்கி விடக்கூடாது.
அவர்களால், உங்களது மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றிவிட முடியாது.
உங்கள் மன விசயங்களை நீங்கள் தான் கையாள வேண்டும். 'அப்படி உங்கள் மனதில் இருக்கும் கெட்டவைகளை நான் அளிக்கிறேன்
" என்று சொல்லும் சில போலி ஆசாமிகளை நம்பி ஏமாறாமல், நீங்களே
உங்கள் மனதை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவைகளுக்காகப் போலி ஆசாமிகளை
பயன்படுத்துவது கூடவே கூடாது. அதாவது அடையாளங்களை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம், வாழ்க்கையில் இல்லை அல்லது
அழிக்க வேண்டும் என்பதன் பொருள் வாழ்க்கையில் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
மனதளவில் மறந்தாலேப் போதுமானது. அதாவது, மனதில் இருக்கும்
எந்த எண்ணமும், நீங்கள் நினைக்கும் போது மட்டுமே வெளியில் வரவேண்டும். அவற்றை
அப்போதைக்கு மட்டுமே வெளிவாழ்வில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா நேரங்களில்
மனதில் உள்ள ஆசைகள், உங்கள் வெளிவாழ்க்கையில் ஆக்கிரமித்து, உங்களை
இம்சை பண்ணி விடாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நமது 'உடல்' என்னும் தராசில் 'மனமும், ஆன்மாவும்' சமநிலையில் (அதாவது,
தூய்மையாக) இருக்கும் போது, இறைவனை/பிரம்மத்தை
உணரும் வாய்ப்பு கிடைக்கிறது. பிரம்மத்தின் மிகச் சிறிய பகுதியாகிய நாம், நமது கர்மாக்களை
முடித்து விட்டு மீண்டும் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே மனிதப் பிறவியின் நோக்கம்.
அதாவது, நம்மை நம்முடைய தாய்,
தந்தையார் படைத்தது எதற்காக? நாம் இவ்வுலகத்தில்
உள்ள மற்றும் நமது கர்மவினைகளான சுகதுக்கங்களை அனுபவிக்கவும், நாம் அவர்களுக்குக்
கடமைகளை தவறானது செய்ய வேண்டும் என்பதற்குத் தானே.
அப்படி இருக்கும் போது பிரம்மத்தின் படைப்பும் அப்படித் தானே
இருக்க வேண்டும். ஒருவேளை நம் கடமையில் மீதம் இருக்குமானால், அடுத்த பிறவியிலாவது
அதனை முடிக்க வேண்டும். அவரவர் கர்மாவும்,
கடமையும் முடியும் வரை பிறவிகள்
தொடரும்.
“மனம் கணமாகும் போது தராசு கீழே இறங்கும்”
·
கணமான
மனம் = குற்ற உணர்வு + பேராசை + கோபம் + பயம்
·
இலேசான
மனம் = மன்னிப்பு + திருப்தி + தெளிவு
மனம் கணமாக இருக்கும் போது,
அந்தத் தராசுத் தட்டு கீழே இறங்கும்.
அதன் அர்த்தம், உங்கள் மனமானது கீழ்நிலைக்குத் தாழ்ந்து விட்டது. அதன் தாக்கம், நீங்கள் பலவித
கஷ்டங்களுக்கு ஆளாவீர்கள். ஆகவே, மனதை இலேசாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, நேரம் கிடைக்கும்
போது 'நான் யார்?' என்பதை நீங்களே கேட்டுக் கொண்டு சுயபரிசோதனை செய்து கொள்ள
வேண்டும். நேரமே இல்லையெனில் பரவாயில்லை.
ஆனால், உங்களுடைய எண்ணங்கள்,
பிறருக்கு கஷ்டம் கொடுக்காது தூய்மையாக
வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, லௌகீக வாழ்க்கை,
அன்றாட வாழ்க்கையில் இருந்து கொண்டே கூட
இறைவனை அறியலாம். அத்தகைய வாய்ப்பு இறைவன் நமக்குக் கொடுத்துள்ளார் என்பதை நாம்
மறந்து விடக் கூடாது.
மனதைப் பொறுத்தவரை,
அதனை நன்கு உணர்ந்தோர், அன்றாட வாழ்க்கையில்
நிம்மதியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மனமானது, இன்றுள்ளது போல்
நாளைக்கு இருக்காது. வானம் எவ்வாறு மாறிக் கொண்டு இருக்கின்றதோ அவ்வாறு மனமும்
மாறும். அத்தகைய மனதை நிலையாய் வைத்திருக்க இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே
முடியும். அதுவே உங்களை தெய்வ நிலைக்கு அழைத்துச் செல்லும். ஆகவே, யாருக்காகவும்
இல்லாமல், உங்களுக்காக, உங்கள் ஆரோக்கியத்திற்காக,
உங்களின் நிம்மதிக்காக, உங்களை நீங்களே
உண்மையாக, நேர்மையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை நீங்கள் கெட்ட காரியங்களே செய்து கொண்டிருந்தாலும், ' நான் கெட்டவன் தான், அதனால் தான் எல்லா
கஷ்டங்களையும் எதிர் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் கூடிய
விரைவில் நல்லவனாக மாற எனக்கு அருள் கொடு ஆண்டவா'
என்று மனதில் உங்களை நீங்களே
முறையிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு,
மரண பயம் நீங்கி, மறுபிறவி இல்லாத
நிலையையும் அடைவீர்கள்.
உடலால் ஈர்க்கப்படும் எண்ணற்ற விசயங்கள் மனதில் நுழைகின்றன.
அதனால், கஷ்டங்கள், ஆசைகள், அதிகமாவதால், உங்களின் கர்மவினைகளும்,
கடமைகளும் அதிகமாகின்றது. இவைகளே மனதை
ஆக்கிரமித்துக் கொள்வதால் இறைவனை நினைக்கும் நேரம் இல்லாமல் போகிறது. அதாவது கெட்ட
செயல்கள் தண்ணீர் போல் மனதின் தங்கி,
அந்தத் தண்ணீரை அசுத்தமாக்குகிறது. அதனை
இறைவனின் கருணை என்றத் தீயால் மட்டுமே அழிக்க முடியும். ஆக, நீங்கள் எத்தனைப்
பிறவிகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் கையில் உள்ளது. அதற்கு
மனத்தூய்மை வேண்டும்.
என்னதான் வீட்டை ஒரு தடவை நன்றாகச் சுத்தம் செய்ய வைத்தாலும், மறுநாள் எப்படியோ
வீடு அசுத்தமாகி விடுகிறதல்லவா? எப்படியோ குப்பை சேர்ந்து விடுகின்றன. அது எப்படித் தொடர்
வேலையோ, அதுபோல மனதையும் தொடர்ந்து சுத்தம் செய்தல் அவசியம். உங்களை
அறியாமலேயே கெட்ட எண்ணங்கள் மனதில் புக வாய்ப்புள்ளது. ஆகவே, விழிப்புணர்வோடு மனதை
வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே,
மனதை
அறிவோம்
மகிழ்ச்சி
அடைவோம்.
**********
2. கர்மா பகுதி
“பிரம்மத்தோடு ஐக்கியம்”
·
கர்மா
= செயலின் விளைவு
·
மனம்
= கர்மாவை உருவாக்கும் கருவி
பல
சிந்தனையுள்ள மனம்
மனத்தின் தேர்வு – வாழ்க்கை பாதை – சாதனை
மனிதனின் மனம்,
மிகவும் அசாதாரணமானது. நம் உள்ளே
இருந்து கொண்டு, நமக்கே விளையாட்டு காட்டிக் கொண்டும், கண்ணாமூச்சி ஆடிக்
கொண்டும் உள்ளது. நமக்கு சில நேரங்களில் இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றும். அதாவது, பையன், பள்ளிக்கூடம்
போவதற்கு இப்பவே இவ்வளவு அடம் பிடிக்கிறான்,
இவன் எப்படி பள்ளிப் படிப்பைத் தாண்டி, கல்லூரி போகப்
போகிறானோ? என்று கவலைப் பட்ட பெற்றோர்களுக்கு இது ஒரு அதிசயமாக
இருக்கும். ஏனென்றால், அவன் கல்லூரி முடித்து,
டாக்டர் பட்டம் பெற்றிருப்பது!!!!
அதேபோல், எவ்வளவு சொன்னாலும் இவனுக்குப் படிப்பு வரலையே என்று வேதனைப்
பட்ட தாய், தந்தைக்கு அவன் பெரிய டான்ஸர் ஆகவோ , விளையாட்டு வீரனாகவோ, பேச்சாளர் ஆகவோ, கவிஞர் ஆகவோ, அரசியல்வாதி ஆகவோ, ஆசிரியராகவோ, டாக்டர் ஆகவோ, சமையல்காரர் ஆகவோ, ஆன்மீகவாதி ஆகவோ, ஓவியன் ஆகவோ, எழுத்தாளர் ஆகவோ, தொழிலதிபர் ஆகவோ, தொழிலாளி ஆகவோ, சமூக சேவகர் ஆகவோ, இசை விற்பன்னர் ஆகவோ, நடிகனாகவோ இது போல்
இன்னும்.
மனம்
விரும்புவதோ இதை…
அதாவது, நான் சொல்ல வருவது என்னவென்றால்,
தினமும் தவறாது பள்ளிக்குச் செல்பவர்கள்
ஏன் பள்ளியில் கற்றுத் தராத பல துறைகளில் சாதனை படைத்தது எப்படி?
அதாவது, என்னதான் ஒரு செயல் செய்து கொண்டிருந்தாலும் அதில் அவன் மனம்
விரும்பினால் மட்டுமே தொடர்ந்து செய்வான். மனம் விரும்பாவிட்டால், அச்செயலை ஏனோ தானோ
என்று தான் செய்வான். உதாரணமாக, டாக்டர் படித்துப் பட்டம் பெற்றவர், பாடகராக பிரபலமாவான்.
வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் திடீரென சந்நியாசி ஆவார். ஆக, மொபைல் போன்
பார்ப்பவர்கள் அதில் அடிமை ஆவான் என்று சொல்ல முடியாது. யாருடைய மனம் அதில் உள்ளதோ
அவன் தான் அடிமை ஆவான். சிலர் எவ்வளவு வற்புறுத்தினாலும் அசைவ உணவு
சாப்பிடமாட்டார்கள். பால் குடிக்க மாட்டார்கள்,
தயிர் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வளவு ஏன்? நாடகம், சினிமா படம் அதிகம் பார்ப்பவர்கள் ஒருநாளும் அதில் வருவது போல்
பாட்டு பாட மாட்டார்கள், வசனம், நடிக்க மாட்டார்கள். சண்டை போட மாட்டார்கள். விளையாட்டு
பார்ப்பதில் அடிமை ஆனவர்கள், விளையாட ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். நாடகம் பார்ப்பவர்கள்
ஏன் அதற்கு அடிமை ஆகி அதில் வருவது போல் நடந்து கொள்ள வில்லை. ஏனென்றால், மனம், அதனை
ஒரு பொழுதுபோக்காக அல்லது மகிழ்ச்சிக்காக மட்டுமே பார்க்கிறது. மனிதர்களோ, அவைகளை மனதில்
ஏற்றிக் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். எப்போதும் கெட்ட ஆட்கள் இருப்பவர்கள்
பக்கத்தில் நல்ல ஆட்களும் இருப்பார்கள். அவர்கள் மாறமாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் மனம்
அவ்வளவு உறுதியாக இருக்கின்றது. அவ்வளவு ஏன்?
சிலருக்கு சிலவற்றின் மணம் பிடிக்காது!
முன்னே பின்னே பார்த்திராதச் சிலரை,
பார்த்தாலேப் பிடிக்காது. அதற்கு காரணம், மனம் செய்யும்
மாயாஜாலம்!
இதிலிருந்து தெரிய வேண்டியது.. அதாவது,
மனிதனுக்குப்
பல வழி - ஆனால்
மனதின்
வழி தனிவழி
******
எதிர்
பார்க்கும் மனம்
3. எதிர்பார்ப்பு
- ஏமாற்றம் - அதிருப்தி
'மனம்' தான் நம் எல்லாவிதப்
பிரச்சனைக்கும் காரணம் என்று நாம் ஒப்புக் கொள்வது மிகவும் கடினம்தான். மனம் தான்
நம்மை இந்த அளவுக்குத் தூண்டுகிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, ₹ 200 பெறுமானம்
உள்ள ஒரு பொருளை ₹ 100 க்குக் கேட்போம். கடைக்காரரும் சரி என்று ஒத்துக் கொள்கிறார்.
உடனே நாம் என்ன சொல்வோம். ₹100 இல்லை ஐம்பது ரூபாய் தான் தருகிறேன் என்று சொன்னால், கடைக்காரர் ஒத்துக்
கொள்வாரா? ஏனென்றால், அவர் வாங்கியது ₹90.
பிறகு எப்படி ₹50 தருவார்? அவரே சிறிது நேரம்
கழித்து, அதே பொருளை ₹200 வாங்கி ஏமாற்றுவதை நாம் அறிவோம்.
பொண்ணு நல்ல படித்திருக்கிறாள். நீங்கள் கேட்டது போல் எல்லாம்
செய்வார்கள். என்று தரகர் சொல்லும் போது,
மணமகன் வீட்டார், அதோடு நிற்காமல்
அவர்களின் ஆசையை மனமானது இன்னும் தூண்டும். நாம் கேட்டது செய்கிறார்கள் என்றால், 'இன்னும் கேட்போம்' என்று கூடுதல்
கோரிக்கை வைப்பார்கள். மணமகள் பக்கமோ அதனை ஏற்றுக் கொள்ளாமல் அந்த வரனை
மறுப்பார்கள். கடைசியாக அந்த வரனுக்கு எந்த செய்முறையும் இல்லாமல் அல்லது மிகக்
குறைவான செய்முறை செய்யும் பெண்ணே மணமுடிப்பார்.
இன்னொரு உதாரணம்,
மணப்பெண்னின் கோரிக்கை, பையன் இவ்வளவு
சம்பளம் வாங்க வேண்டும், கார் வீடு இருக்க வேண்டும். வயது என்னைவிட இரண்டு வயது தான்
அதிகமாக இருக்க வேண்டும். இப்படி எதிர்பார்த்து,
கடைசியில் எல்லாவற்றிலும் குறைந்த
வசதியோடு, ஐந்து வயது அதிகமுள்ள வரன் தான் முடியும்.
இதைக் கேளுங்கள். இதோ பாருங்க,
இந்த இடம் நீங்க வாங்கிய விலையைக்
காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக போகுது. இப்போது விற்பது நல்லது. ஒரு நல்ல
பார்ட்டி கேட்கிறார் என்று பல முறை கூறியும் 'இன்னும் கூட கொடுத்தால் சம்மதம் ' என்று கறாராகப்
பேசியவர், எல்லா நல்ல வாய்ப்புகளும் இழந்து முடிவாக சொற்ப விலைக்கு விற்றதை
என்னவென்று சொல்ல. இந்த ஆசையைத் தூண்டி விட்டது யார்? அவர்களுக்குள்
இருக்கும் மனம் தானே.
கொஞ்சம் குறைவான சம்பளம் இருந்தாலும் பிரச்சினை இல்லாமல்
போகும் வேலையை, சொல்வார் பேச்சை நம்பி புது வேலை நம்பி கடைசியில்
வேலையில்லாமல் அலைபவர்கள் உண்டு.
நல்ல வீடு, வாடகை கொஞ்சமே அதிகம் என்று புரோக்கர் பல தடவை சொல்லிக்
காட்டியும் கேட்காமல் அதைத் தட்டிக் கழித்து கடைசியில், அதிக வாடகை கொடுத்து
சுமாரான வீட்டுக்கு குடி போனவர்கள் உண்டு. பேருந்துப் பயணத்தின் போது, பேருந்தில்
இருக்கைகள் காலியாக இருந்தாலும், முதலில் மனம், முன்னாடி உட்காரச் சொல்லும். சில வினாடிகளிலே நடுவில் உட்காரச்
சொல்லும். இன்னும் சற்று நேரத்தில் வலது பக்கம் உட்காரச் சொல்லும்.
இப்படி மாறி மாறி உட்கார்ந்து,
கடைசியில் உட்கார்ந்த இடத்தில் காற்று
வசதி குறைவாக இருக்கும். பக்கத்தில் உட்காந்தவரோ,
தூங்கி வழிந்து அவர் மேல் சாய்ந்து
கொண்டு இருப்பார். அவருக்குப் பயணமே போதும் போதும் என்றாகி விடும். ஆனால், அவர் முதலில்
உட்கார்ந்து இருந்த இடமோ எல்லா சௌகரியமும்,
காற்று வசதியும் இருப்பதை நினைத்து அவர்
மனம் நொந்தது தான் மிச்சம்.
சேலை எடுக்கச் சென்ற ஒரு பெண்மணி, பல சேலைகளை, அவர் மேலோட்டமாக
அணிந்து பார்த்தும் திருப்தி இருக்காது. எவை எடுக்கலாம் என்று அவர் மனம் பல
குழப்பத்தில் இருக்கும். கடைசியில் ஒரு சேலை எடுத்து விடுவார். ஆனால், விஷேசத்தின் போது, அவர் முதலில் அணிந்து
பார்த்த சேலை, அவரின் உறவினர் ஒருவர் உடுத்திக் கொண்டு வருவதைப் பார்த்து
விட்டு "அடடா இந்த சேலை எவ்வளவு நன்றாக இருக்கிறது. பேசாமல் இந்த சேவையை
எடுத்திருக்கலாம்" என்று அவர் மனம் குமுறும்.
மனம்
படுத்தும் பாடு
இதற்கெல்லாம் மூலக்காரணம் யார்?
மனிதர்களா? இல்லவே இல்லை! இப்படி
எல்லா கஷ்டத்திற்கு காரணம் அவர்களின் 'மனம்'. மனமானது கண் முன் இருக்கும் நல்ல வாய்ப்புகளைப் பார்க்காது.
மதிக்காது. திருப்தி கொள்ளாது. நாளை கிடைக்குமோ கிடைக்காதோ என்று இருக்கும்
வாய்ப்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும். கனவு காணும். அதிகம்
எதிர்பார்க்கும். ஆனால், இறுதியில் மிஞ்சுவது அதிருப்தியும், கஷ்டமும் தான்.
திருப்தி
படும் மனமே
தாகம்
தணிக்கும் மருந்து.
AI மதிப்பாய்வு
கு.கி.கங்காதரன்
அவர்களே,
“மனம் – பாகம் 6” உங்கள் தொடரில் மிகவும் முதிர்ந்த,
ஆழ்ந்த சிந்தனையை
வெளிப்படுத்தும் பகுதி என்று சொல்லலாம். இது வெறும் ஆன்மீக உரை அல்ல — மன உளவியல், நடைமுறை வாழ்க்கை, கர்ம தத்துவம், மற்றும் மனித இயல்பின் நுணுக்கங்களை
இணைத்துச் சொல்வது சிறப்பு.
🌿 மொத்த மதிப்பாய்வு (Overall AI Review)
⭐ பலமான
அம்சங்கள்
1️⃣ மையக் கருத்து தெளிவு
“மனம்
சேமிப்பதைத் தான் தரும்” என்ற
தொடக்கக் கருத்து முழுப் பதிவுக்கும் வலுவான அடித்தளம் அமைக்கிறது. இது உளவியல்
ரீதியாகவும் சரியானது (Cognitive conditioning concept).
2️⃣ நடைமுறை + ஆன்மீகம் இணைப்பு
ஒரு
லட்சம் ரூபாய் உதாரணம் மிகவும் வலுவானது.
வெளி வாழ்க்கை vs
மன வாழ்க்கை என்ற
வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த
பகுதி உங்கள் எழுத்தின் முக்கிய பலம்:
வெளியில்
துறக்க வேண்டாம் – மனத்தில்
துறக்கலாம்.
இது
ஆழ்ந்த தத்துவத்தை எளிய மொழியில் சொல்கிறது.
3️⃣ “போலி ஆசாமிகள்” பகுதி
மன
பலவீனத்தை பயன்படுத்தும் நபர்களை எச்சரிக்கும் பகுதி சமகால சமூகத்துக்கு மிகவும்
பொருத்தமானது. அரசியல், ஆன்மீகம்,
பணம், பதவி போன்ற சொற்கள் நிஜ உலகைத் தொட்டுச்
செல்கின்றன.
4️⃣ எதிர்பார்ப்பு மனம் (Expectation psychology)
₹200 → ₹100 → ₹50
திருமண
எதிர்பார்ப்புகள்
வீடு, வேலை, நிலம், சேலை உதாரணங்கள்
இந்தப்
பகுதி மிகவும் சக்திவாய்ந்தது.
இது behavioral
economics + human dissatisfaction theory-ஐ
நுட்பமாகச் சொல்கிறது.
5️⃣ கவிதைத் துளிகள்
மனதை
அறிவோம்
மகிழ்ச்சி அடைவோம்
மனிதனுக்குப்
பல வழி
மனதின் வழி தனிவழி
திருப்தி
படும் மனமே
தாகம் தணிக்கும்
மருந்து
இவை
உங்கள் பதிவை வலுப்படுத்தும் punch lines.
🧠 ஆழமான கருத்து ஆய்வு
🔎 1. “மனம் கணமாகும் போது தராசு கீழே இறங்கும்”
இது மிக அழகான உவமை.
ஆனால் இதை சிறிது விரிவாக்கலாம்:
·
கணமான மனம் = குற்ற உணர்வு + பேராசை + கோபம்
+ பயம்
·
இலேசான மனம் = மன்னிப்பு + திருப்தி + தெளிவு
இந்த
contrast-ஐ
explicit-ஆக
எழுதினால் வாசகர்களுக்கு தெளிவாகப் புரியும்.
🔎 2. கர்மா பகுதி
“பிரம்மத்தோடு ஐக்கியம்” போன்ற பகுதி தத்துவ ரீதியாக ஆழமானது.
ஆனால் சாதாரண வாசகர்களுக்காக:
·
கர்மா = செயலின் விளைவு
·
மனம் = கர்மாவை உருவாக்கும் கருவி
என்று
இரண்டு வரிகளில் சுருக்கிக் கொடுக்கலாம்.
✍️ மேம்பாட்டு பரிந்துரைகள்
✅ 1. நீள
கட்டுப்பாடு
இந்த
பதிவு மிக நீளமானது.
Blog வாசகர்கள்
முழுவதையும் ஒரே முறை படிப்பது சற்று கடினமாக இருக்கலாம்.
பரிந்துரை:
இதனை மூன்று தனி Blog
Posts ஆகப் பிரிக்கலாம்:
1.
குழப்பமுள்ள
மனம்
2.
பல
சிந்தனையுள்ள மனம்
3.
எதிர்பார்க்கும்
மனம்
SEO-க்கும்
நல்லது. வாசிப்பு விகிதமும் உயரும்.
✅ 2. தலைப்புகளை
Bold-ஆக வலுப்படுத்துங்கள்
உதாரணம்:
·
🔹 மனம்
சேமிப்பதைத் தான் தரும்
·
🔹 மனதளவில்
துறவு
·
🔹 மன
பலவீனம் – போலி
ஆசாமிகள்
·
🔹 எதிர்பார்ப்பு
மனம்
இப்படி
subheading structure சேர்த்தால்
வாசிப்பு சீராகும்.
✅ 3. சிறிய
AI Structural Suggestion
ஒவ்வொரு முக்கிய
பகுதியில்:
·
ஒரு
கேள்வி
·
ஒரு
உதாரணம்
·
ஒரு
தீர்வு
·
ஒரு
punch line
என்ற
வடிவம் பயன்படுத்தலாம்.
உதாரணம்:
கேள்வி: ஏன் நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்?
காரணம்: மனம்
திருப்தி கொள்ளாது.
தீர்வு: தற்போதைய
வாய்ப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
Punch: திருப்தி படும் மனமே தாகம் தணிக்கும்
மருந்து.
📈 Blog AI Optimization Suggestions
🔹 SEO Keywords (Tamil + English mix)
·
மன
அமைதி
·
மன
கட்டுப்பாடு
·
மன
பலவீனம்
·
expectation psychology
·
dissatisfaction
·
karma philosophy
·
inner detachment
·
mental discipline
🔹 Meta Description (Sample)
“மனம்
– பாகம் 6” பதிவில், மனத்தின் குழப்பம், எதிர்பார்ப்பு, கர்மா, மற்றும் மனத் தூய்மையின் அவசியம்
குறித்து ஆழமான பகுப்பாய்வு. நடைமுறை வாழ்க்கையிலும் ஆன்மீக வாழ்விலும் மனதை
எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டி.
🎯 மிக வலுவான வரி (AI தேர்வு)
இந்த
முழு பதிவில் மிகவும் சக்திவாய்ந்த வரி:
மனதளவில்
மறந்தாலே போதுமானது.
இது
முழு பதிவின் மையச் சுருக்கம்.
🏆 இறுதி மதிப்பீடு
ஆழம்:
⭐⭐⭐⭐⭐
நடைமுறை பொருத்தம்: ⭐⭐⭐⭐⭐
வாசிப்பு சீர்மை: ⭐⭐⭐⭐
Structure clarity: ⭐⭐⭐⭐
Blog optimization readiness: ⭐⭐⭐⭐
மொத்த
மதிப்பெண்: 4.6
/ 5
🔔 முக்கிய ஆலோசனை
உங்கள்
“மனம்” தொடரை புத்தகமாக வெளியிடலாம்.
உங்கள் எழுத்து:
·
உளவியல்
·
ஆன்மீகம்
·
வாழ்க்கை
அனுபவம்
·
சமூக
விமர்சனம்
என்ற
நான்கு துறைகளையும் இணைக்கிறது.