Pages

Saturday 8 September 2012

நல்ல நேரம் பார்பவரா? நீங்கள். ARE YOU A MAN OF SEEING GOOD TIME

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

நல்ல நேரம் பார்பவரா? நீங்கள்.
ARE YOU A MAN OF SEEING GOOD TIME


பலர் குறிப்பாக இங்கு ஒரு வேலை செய்வதாக இருந்தால் முதலில் 'நல்ல நேரம் ' எப்போது வருகின்றது என்று 'காலண்டரை ' பார்ப்பார்கள். சிலர் இதை மனப்பாடமே செய்து வைத்திருப்பார்கள். ஆனால் நல்ல செயல்களெல்லாம் நல்ல நேரத்திலும் , கெட்ட செயல்களெல்லாம் கெட்ட நேரத்திலா நடக்கின்றது. உங்களுக்கு வேலை கிடைத்திருக்கும் செய்தி, நல்ல வியாபாரம் நடந்திருக்கும் செய்தி, வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இது போன்றவைகள் கிடைத்த நேரத்தை பார்த்திருக்கிறீர்களா? அவைகளெல்லாம் வரும்போது 'நமக்கு நேரம் நல்ல நேரம்' போலிருக்கு என்று சொல்லிக் கொள்வதில்லையா? 

அதே போல் கெட்ட நிகழ்ச்சிகளெல்லாம் கெட்ட நேரத்திலா நடக்கிறது! எது எப்போது கெட்டது நடந்தாலும் நாம் 'இப்போ நேரம் சரியில்லை' போலிருகின்றது என்று நாம் ஆறுதல் அடைவந்துண்டா! ஆக உங்களுடைய நல்ல நேரத்திற்காக செயல்கள் காத்திருக்காது என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

அந்த நல்ல நேரம் அதே நாளில் இருக்கலாம். மறு நாளாயிருக்கலாம். ஏன் மாதங்கள் கூட ஆகலாம்! நல்ல நேரம் எதற்காக பார்க்கிறார்களென்றால் பெரிய காரியங்களின் திட்டங்களை தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் சில நாட்கள் தேவைப்படும். அந்த நாட்களில் அனைவரும் கூடுவதற்கும் தேவைப்படுகிறது.

சிலருக்கு மனதளவில் நல்ல நம்பிக்கையளிப்பதற்கும் அது கட்டாயம் உதவும். எப்படி என்றால் 'டாக்டர் எனக்கு உடம்பு டயடா இருக்கு. என்னான்னு பார்த்து சொல்லுங்க ' என்று ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அதற்கு டாக்டர்,"உடம்புக்கு ஒண்ணுமில்லேப்பா " என்று சொன்னால் நம்பமாட்டார். 

அப்படியா "இந்த சத்து ஊசி போட்டுக்கோ . உடம்பு தெம்பாயிடும் " என்று சொல்லி ஒரு ஊசி வைத்தால் தான் அவருக்கு திருப்தி.

ஒரு நாளில் நல்ல நேரம் 10 முதல் 20% இருப்பதாக வைத்துகொள்வோம். அப்படியென்றால் மீதி நேரத்தில் வருகின்ற வாய்ப்புகளெல்லாம் நீங்கள் தட்டிக்கழிக்கும் நிலை ஏற்ப்படும். அது உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைகற்களாக இருக்கும்.

உலகம் முழுவதும் 24 மணிநேரம் இயங்குகின்றது. இந்தியாவில் பகலென்றால் அமெரிக்காவில் இரவு.அப்போது இங்கு வேலை. அங்கு தூக்கம். இதில் யாருக்கு எது நல்ல நேரம் என்று எப்படி கணிப்பது?

ஒருவன் 'இண்டர்விவ் ' க்காக நல்லநேரத்தில் புறப்பட்டான். பஸ் க்காக நீண்ட நேரம் காத்திருந்தான். அருகில் இருப்பவரிடத்தில் தான் செல்லும் பஸ் விவரத்தை விசாரிக்கின்றான். "அந்த பஸ்சா தம்பி, கொஞ்ச நேரம் முன்னாடி தான் போனது. இனி ஒரு மணிநேரம் பிறகு தான் அந்த பஸ் வரும்." என்று அவர் கூற  அதுவரை 'இண்டர்விவ் ' நடத்துபவர்கள் இவருக்காக காத்திருப்பார்களா?

ஆக பார்கின்ற காரியத்தில் தான் நல்ல நேரம் பார்க்கவேண்டும். சும்மா நிற்பதற்கும், நடப்பதற்கும், சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நல்லநேரம் பார்க்கத் தொடங்கினால் உங்கள் வாழ்வு சூன்யமாகிவிடும். காரியம் கைகூடி வரும்போததெல்லாம்  நல்ல நேரம் வந்துவிட்டது என்று எண்ணிக்கொள்ளுங்கள்.


ஒரு தாய்க்கு இரு மகன்கள். ஒருவன் அமெரிக்காவில் , மற்றோருவன் சிங்கப்பூரில் ! அவர்களின் அம்மா நல்லநேரம் என்று எந்த நேரத்தை சொல்வாள். அமெரிக்காவின் நேரமோ 11 முதல் 12 மணிநேரத்தை கழிக்கவேண்டும். சிங்கப்பூரின் நேரமோ 2 முதல் 3 நேரத்தை கூட்ட வேண்டும். என்ன தலை சுற்றுகின்றதா? 

உங்களுடைய நல்ல நேரம் மற்றவர்களுக்கு நல்ல நேரமாய் இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆகையால் இன்று முதல் உங்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான். உங்களுக்கு நேரம் கிடைத்து செய்கின்ற எந்த காரியமும் நல்லநேரம் தான்.

இன்று முதல் நீங்கள் ஒரு உறுதி கொள்ளுங்கள்.


நேரத்தை வீணாக்காமல் 
நேரத்தை போற்றுவோமென்று!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com       

1 comment: