அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
உங்களுக்கு வெற்றிக்கும் , ஆசைக்கும்
வித்தியாசம் தெரியுமா-
DO YOU KNOW THE DIFFERENT BETWEEN
SUCCESS & DESIRE
யார் ஒருவர் தன்னுடைய இலக்கை மிகக்குறைந்த காலத்தில் அடைகிறார்களோ அதுவே வெற்றியாகும். உதாரணமாக 20 வயது இளைஞன், 'தான் ஒரு கார் வாங்கவேண்டுமென்று' ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்கிறான். எப்போது அதை நிறைவேற்றுவான்? என்கிற கேள்வி வருகிறது. 25 வயதில்... 30 வயதில்... 40 வயதில்... இப்படி காலவரையறை இல்லாமல் குறிக்கோளை வைத்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமில்லை. அதாவது 5 ஆண்டுகளில் அவர் நிறைவேற்றினால் அது வெற்றி. 25 ஆண்டுகளில் அதை நிறைவேற்றினால் அதற்கு பெயர் ஆசை.
காலம் வரையறை கொண்ட எந்த செயலும் வெற்றிக்கான குறிக்கோளாகும். காலவரையற்ற அல்லது அதிக காலம் கொண்டு செய்யும் செயல் ஆசை எனலாம். வெற்றிக்கு முழு முயற்சி, அறிவும், திறமையும், கடின உழைப்பும், ஆர்வமும் இருக்கும். தோல்வி ஏற்ப்பட்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து வெற்றி அடைந்தே தீருவர். ஆனால் ஆசைபட்டதை அடைவதற்கு மேற்கூறியவைகள் அவ்வளவாக தேவைபடாது. ஆசையை அடைத்தாலும் பெரிதாக மகிழமாட்டார்கள். அடையாவிட்டாலும் அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். கிடைக்கும் வரை லாபம் என்கிற மனப்பான்மையே இருக்கும்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
(GOAL) நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்
நீங்கள் ஆரம்பிக்கும் இடம் (START)
பார்த்தீர்களா! இதில் நீங்கள் வேலை ஆரம்பிக்கும் இடமும் , அடைய வேண்டிய குறிக்கோளும் இருக்கின்றன. ஆனால் எத்தனை பாதைகள் எப்படியெல்லாம் சுற்றி சுற்றி செல்கின்றன. இந்தப் பாதையில் எது குறைவான தூரமோ அதுதான் வெற்றிப்பாதை. மற்ற பாதையில் சென்றால் வீண் கால விரையமும், அதிக ஆற்றலும் தேவைப்படும். ஆகவே உங்களுக்கு வெற்றி வேண்டுமென்றால் குறைந்த தூர பாதையை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கின்றது. அதைதான் நாம் திட்டம் என்று கூறுகிறோம்.
எவன் ஒருவன் தினமும் கடின உழைப்பின் மூலம் ஒரு படி மேலே ஏறுகிறவனால் மட்டுமே தான் இருக்கும் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஏதாவது காரணத்தினால் மேலே முயற்சிப்பது நிறுத்தினாலோ அல்லது முயலாமல் முன் வைத்த காலை பின் வாங்கி விட்டாலோ அவன் வாழ்கையில் முன்னேறுவது கஷ்டம் தான்.
அதேபோல் யார் ஒருவர் புதிய புதிய முயற்சிகளை சோதித்து பார்க்கின்றனரோ, வித்தியாசமாய் செய்யவேண்டுமென்று கடுமையாய் முயல்கின்றனரோ அவர்களுக்குத்தான் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.
அதேபோல் நான் எப்படியும் முயன்று என்னுடைய குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்கிற தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். துணிச்சல் இல்லாமல் சாதனை செய்யமுடியாது. சரித்திரம் படைக்கமுடியாது.
அதாவது உனது திட்டம் என்ற கையிற்றை குறிக்கோளில் கட்டிவிடு. உனது முயற்சி, தன்னம்பிக்கை, விடா முயற்சி கொண்டு , அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி அந்த கையிற்றை தினமும் மெல்ல மெல்ல இழு. தானாகவே நீ உனது குறிக்கோளை அடைந்து விடுவாய்!
வெற்றிக்கு எப்போதும் முடிவே இல்லை!
SUCCESS IS NEVER ENDING !
தோல்விகள் எப்போதும் முடிவும் அல்ல !
FAILURE IS NEVER FINAL !
ஆசை படுவதை விட குறிக்கோள் கொள்!
அது உன் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Good.
ReplyDelete