04.10.13
என் 'ப்ளாக்' வாசகருக்கு,
என்னுடைய இந்த பகுதி போல' தினமலர் ' நாளிதழில் 'லஞ்சம் தவிர், நெஞ்சை நிமிர்' என்கிற புது பகுதி சென்ற 2.10.13 முதல் உருவானது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல் இன்னும் என்னுடைய பல பகுதிகள் வேறு வேறு நாளிதழ் , மற்றும் மாத இதழ்களில் வரும் என்று நம்புகிறேன். ஏனெனில் மக்கள் சேவை , என் சேவை. ஆகும்..
இப்போது என்பகுதியை படியுங்கள்..
நன்றி..
மதுரை கங்காதரன்.
மக்களுக்காக உதவிடும் பாலம்
மக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி
FOR SOCIAL SERVICE & AWARENESS
நாட்டில் எங்கு பார்த்தாலும் லஞ்சம். ஊழல் மலிந்துவிட்டன. எங்கும் எதிலும் 'சம்திங் சம்திங்' தான். நடுத்தரவர்க்க மக்கள் ஓரளவிற்கு சம்பந்தப்பட்ட இடத்திற்க்குச் சென்று கஷ்டப்பட்டாவது தங்களுடைய காரியத்தை பலரிடத்தில் சிபாரிசோ அல்லது தெரிந்தவர்களின் செல்வாக்கினால் சாதித்துகொள்கின்றனர். ஆனால் மேல்தட்டு மக்கள் அவர்களுடைய காரியங்களை அவர்கள் இருக்கின்ற இடத்திலேயே பலவிதங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து முடித்துக் கொள்கின்றனர்.
ஆனால் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களால் தங்களுடைய அவசியமான வாழ்வாதார காரியங்கள் கூட அவர்களால் பெறமுடியாமல் திண்டாடி வருகிறார்கள். இந்த அவலங்களைத் தீர்க்க முடியுமா? தீர்க்க முடியாது என்கிற எண்ணங்கள் தான் நிறைய பேர்களுக்கு இருக்கின்றது.
முதலில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற இந்த மாதிரியான மனப்பாங்கை மாற்றும் முயற்சி தான் இந்த பகுதி.
இதில் நீங்கள் தான் கதாநாயகர்கள். நீங்கள் தான் தலைவர்கள். நீங்கள் தான் அரசு அதிகாரிகள். ஒருவேளை நீங்கள் அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களாக இருக்கலாம் அல்லது முயற்சித்து வேலை கிடைக்காதவர்காக இருக்கலாம் அல்லது வருங்காலத்தில் ஏதாவது அரசு வேலை கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம்!
அதாவது நீங்கள் அரசுவேலையில் இருந்தால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்வீர்கள்? எந்த துறை உங்களுக்கு பணியாற்ற பிடிக்கும். எந்தெந்த வகைகளில் யார் யார்க்கு என்ன நன்மை செய்வீர்கள்.? என்பதை இதன் மூலம் சுருக்கமாக ஆங்கிலத்திலோ (நாங்கள் தமிழாக்கம் செய்து தருகிறோம்) அல்லது தமிழில் மக்களுக்காக இதன் மூலம் தெரிவியுங்கள். உங்களது நல்ல எண்ணங்களை , நல்ல உள்ளத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த மக்களுக்காக உதவிடும் பாலத்தில் எழுதி அனுப்புங்கள்.
அரசு வேலைகளில் இப்போது இருந்துகொண்டு மக்களுக்காக உதவி செய்து கொண்டிருப்பவர்களும் இதில் எழுதி தெரிவிக்கலாம்.
அல்லது நீங்கள் எதிர்கொண்ட நல்ல மனமுள்ள , நேர்மையான , உதவி கரம் நீட்டி மக்களுக்கு பல உதவிகளை செய்துவரும் அரசு அதிகாரிகளையும் இதன் மூலம் மக்களிடம் தெரிவிக்கலாம்.
இவைகள் நன்மை தரும் நல்ல விதைகள் என்று நினைப்போம். இது இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கும்,வரும் சந்ததியினருக்கும் இது வளர்ந்து மரமாகி காய் கனிகளை தருவதோடு இளைப்பாறுவதற்கு நிழலாகவும், பூத்து குலுங்கும் நந்தவனமாகவும் இருக்கும் என்று நம்புவோம்.
உங்களுடைய ஒத்துழைப்பிற்கு எங்கள் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்ல எண்ண விதைகளை மக்கள் மனதில் விதையுங்கள்!
மக்களை நிம்மதியுடன் வாழ வகைசெய்யுங்கள் !
மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள்.
அவர்களுக்கு பாலமாய் இருந்து உதவுங்கள்!
நன்றி.
வணக்கம்
No comments:
Post a Comment