அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
உங்கள் வெற்றி , நீங்கள் குறிக்கோளில் ஐக்கியமாவதில் இருக்கின்றது -
GET YOUR SUCCESS WITH FOCUS IN YOUR AIM
மதுரை கங்காதரன்
உங்கள் வெற்றி , நீங்கள் குறிக்கோளில் ஐக்கியமாவதில் இருக்கின்றது -
GET YOUR SUCCESS WITH FOCUS IN YOUR AIM
எத்தனையோ தலைவர்கள், மகான்கள், சமயத் தலைவர்கள், அறிவுச் சான்றோர்கள் போன்றவர்களின் அழகான , பொன்னான, அருமையான பேச்சுகள் கேட்டிருப்பீர்கள் ! எவ்வளவோ புகழ்பெற்ற, தரமிக்க , அறிவைக்கொடுக்கும் புத்தகங்களை படித்திருப்பீர்கள் ! எவ்வளவோ இனிமையான பாடல்களை கேட்டு ரசித்திருப்பீர்கள் ! எவ்வளவோ நல்ல படங்களைப் பார்த்திருப்பீர்கள் ! எத்தனையோ மனிதர்களிடம் பேசியிருக்கின்றோம் ! பழகியிருக்கின்றோம் ! எத்தனையோ வெற்றிச் சரித்திரங்களை , சாதனையாளர்களை, சிந்தனையாளர்களை, சமூக சேவகர்களை, தொண்டு உள்ளங்களை, அறிஞர்களை இந்த மனித சமுதாயம் கொடுத்திருந்தாலும் மனிதனின் முன்னேற்றம் என்பது கேள்விக் குறியாகத் தான் இருக்கின்றது. ஒரு சிலர் மட்டும் வெற்றியடைகிறார்களே அவகளுக்கு மட்டும் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகிறது.
எத்தனயோ பாடல்களை திரும்ப திரும்ப கேட்டிருந்தாலும் அவற்றில் எத்தனை பாடல்கள் நமக்கு முழுமையாக தெரியும். (நான்கு வரிகள் தெரிந்தாலே அதிகம் தான் என்கிறீர்களா ! ). அதேபோல் ஒரு விருப்பமுள்ள புத்தகத்தை படித்து முடித்தபிறகு அதிலிருக்கும் ஒரு நாலு வரிகளாவது நமக்கு தெரியுமா! அல்லது நினைவில் நிற்கின்றதா! இது இவ்வாறு இருக்க...
அரிச்சந்திர நாடகத்தை எத்தனையோ பேர் பார்த்திருப்பார்கள் ! ஆனால் காந்தியைப் போல் சத்தியம் தவறாமல் எத்தனைபேர் நடக்கிறார்கள்? அந்த நாடகம், காந்தியை மாற்றியது போல் ஏன் அனைவரையும் மாற்றவில்லை!
எத்தைனையோ பேர் போதி மரத்தடியில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால் புத்தரை போல ஏன் அனைவராலும் மாறமுடியவில்லை.
எத்தனையோ பேர்கள் ஏழையைக் கண்டு வருத்தப்பட்டாலும் , இரக்கப்பட்டாலும் 'அன்னை தெரசா ' போல் எத்தனைபேர் ஏழைகளுக்கு பொறுமையாக சேவை செகின்றனர்.
எத்தனை பேர்கள் தலையில் ஆப்பிள் விழுந்திருந்தாலும் எத்தனை பேர் சர் ஐசக் நியுடடனை போல் ஏன் புகழை பெறவில்லை.
எத்தனையோ தாயார்கள் தங்கள் மகனுக்கு கல்வி கற்றுக்கொடுத்திருந்தாலும் ஏன் தாமஸ் ஆல்வா எடிசனைப் போல் அறிவியல் அறிஞராக ஆக்கமுடியவில்லை.
எத்தனயோ கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் சச்சின் டெண்டுல்கரை போல் புகழ் பெற முடியவில்லை.
இப்படி இன்னும் அதிகமான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது! உதாரணமாக ஒரு புத்தகத்தை படித்தாலோ, அல்லது படித்து மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதன்படி யார் ஒருவர் தவறாது தினமும் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களே வெற்றிக்கு தயாராகிறவர்கள்!
அதாவது தாங்கள் தேர்ந்தெடுக்கும் குறிக்கோள் மற்றும் கொள்கையில் ஐக்கியமாகி , அதையே சிந்தித்து , அதன் கர்மமே கண்ணாக, கடமையாகக் கொண்டு, எந்த ஒரு இடையூறு வந்தாலும் அதைத் தாண்டி, ஒவ்வொரு நொடியும் விழிப்புடன், விடாமுயற்சியுடன், கடின உழைப்போடு தங்கள் செயலிருந்து விலகாது இருந்ததால் தான் இவ்வளவு பெரிய செயலை, புகழை அடைய முடிந்தது.
குறிக்கோளில் ஐக்கியமாதல் ஆர்வம் இருந்தால் மட்டுமே முடியும். ஆர்வம் வெறியாக மாறுகின்றது. அந்த வெறி மனவலிமையும் , துணிச்சலையும் தருகின்றது. பிறகு குறிக்கோள் அடைவதற்கான அறிவையும்,ஆற்றலையும் தேடச் சொல்கிறது . அறிவும், ஆற்றலும் கிடைக்கும்போது முயற்சியும், பயிற்சியும் கிடைக்கின்றது. பிறகு கடின உழைப்பு சேரும்போது கனவான குறிக்கோள் நிஜமாகிறது.
ஆகவே உங்கள் குறிக்கோளுடன் ஐக்கியமாகுங்கள்!
அதுவே அடுத்தடுத்து உந்து சக்தி கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்!
இன்னும் வரும்...
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Good.
ReplyDelete