உங்களுக்கும் அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும்

YOU WILL GET GOOD CHANCE IN YOUR LIFE
அனுபவப் பொன்வரிகள்

மதுரை கங்காதரன்
வாழ்கையில் நீங்கள் நினைத்தபடி நடக்கும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தே தீரும். உங்களுடைய திறமையும் ஆற்றலும் ஒன்று சேரும் அந்த சமயத்தில் உங்களுக்காக வெற்றிக் கதவுகள் திறக்கப்படும். அதனுள்ளே நுழைவதற்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நீ எப்போது முழுமையாக தயாராகிறாயோ அப்போது தான் வெற்றிக்கான சந்தர்ப்பத்தை சந்திப்பீர்கள்.
அப்போது தான் உங்களைத் தேடி வரும் பெரிய பதவியும், பொறுப்பும் பயமில்லாமல் ஏற்றுக்கொள்ள முடியும். வெற்றி வாய்ப்பு கிடைத்த பிறகு தயாராகிக் கொள்ளலாம் என்றிருந்தால் அந்த வெற்றி வாய்ப்பும் உங்களை விட்டு நழுவிச் சென்றுவிடும். பின்பு அத்தகைய அரிய பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் நீங்கள் தோல்வி அடைவீர்கள்.
ஆசிரியர் தேர்வு, வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு, அரசாங்கத் தேர்வு, நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு போன்றவற்றில் பெரும்பாலானோர் தெள்வியைத் தழுவுவதன் காரணம் அவர்கள் அத்தகைய தேர்வுகளைச் சந்திக்கப் போக்கு முன் அவர்கள் தயார்படுத்திக் கொள்ளாமையே .
ஆகவே

வாய்ப்புகளை எதிர்நோக்குங்கள்!
அதற்கு முன் அவற்றை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளுங்கள் !

No comments:
Post a Comment