Pages

Wednesday, 6 February 2013

'BOSS' AND HIS 'SORRY BOSS' GANG FULL COMEDY - ஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு

ஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும்  -
 முழு நீள சிரிப்பு - 
 
'BOSS' AND HIS 'SORRY BOSS' GANG 
FULL JOKES
    

முதல் நாள் 'பாஸ்' ம்  அவரின் முட்டாள்
 'சாரி பாஸ்' களும் 


"ஏன் நீங்க எதிரிங்களை துப்பாக்கியாலே சுடலை"

" சாரி பாஸ்! நாங்க துப்பாக்கியை அடுப்பிலே போட்டோம், 'லைட்டர்' லே சுட்டுப் பார்த்தோம். துப்பாக்கி சுடவே இல்லை"

"முட்டாள்களா! துப்பாக்கி சுடனும்ன்னா 'ட்ரிக்கர்' ரை அழுத்தணும். புரிஞ்சதா?

" புரிஞ்சிடிச்சி பாஸ் "



மறுநாள்:

" இப்போ ஏன் எதிரிங்களை சுடலை?"

" சாரி பாஸ்!  ட்ரிக்கர் அலுத்தினோம் பாஸ். ஆனாலும் துப்பாக்கி சுடலை பாஸ்"

" அடே கோமாளிகளா! துப்பாகியிலே தோட்டாக்கள் போடனும். அப்போதான் துப்பாக்கி சுடும். தெரிந்சுச்சா "

" ஓ .கே. பாஸ்!



மறுநாள்:

" இப்போ ஏன் சுடலை?"

" சாரி பாஸ்! சுட்டோம் பாஸ். ஆனா குறி தவறி காக்காய் மேலே பட்டு அது செத்துடுச்சி பாஸ். இதோ செத்த காக்காய்"

"மடையர்களா! சரி சரி இருக்கட்டும். சரியா குறி சுடப் பழகித் தர்றேன்"

 " ஓ .கே. பாஸ்!



மறுநாள்:

"இப்பவும் எதுக்கு சுடலே?"

" சாரி பாஸ்! துப்பாக்கி சரியாச் சுடுதான்னு கையிலே சுட்டுப் பார்த்தோம் பாஸ். ரத்தம் சிந்தி வலி ரொம்ப இருந்ததாலே சுட முடியல்லே பாஸ்"

" மண்டுகளா! இனிமேலாவது சரியா சுட்டு கொண்டு வாங்க"

" ஓ .கே. பாஸ்!


மறுநாள்:

" இப்போ என்ன காரணம் சொல்லப் போறீங்க?

" சாரி பாஸ்! நாங்க போறதுக்குள்ளே எதிரிங்க தப்பிச்சுட்டாங்க பாஸ்!

"  அட கூமுட்டைகளே!                       அந்த எதிரிங்களை சுட்டுக் கொண்டு வராத வரைக்கும் என் கண்ணு முன்னாலே நிக்காதீங்க. போங்க!"

" ஓ .கே. பாஸ்! வந்தா எதிரிங்களோட வருவோம். இல்லாட்டி வரமாட்டோம் பாஸ் "


நன்றி 
வணக்கம்.
  

1 comment: