Pages

Friday, 7 June 2013

இறைவனின் மனோபலம் பெறும் வழி - A WAY TO GET GOD'S STRENGTH - PUTHUK KAVITHAI

இறைவனின் மனோபலம் பெறும் வழி


A WAY TO GET GOD'S STRENGTH

PUTHUK KAVITHAI
புதுக்கவிதை 



தன்னம்பிக்கை இருந்தால்
இறைவனின் பாதி பலம் நீ
பெறுவாய்.

விடாமுயற்சியும் இருந்தால்
இறைவனின் முழு பலத்தையும் நீ 
பெறுவாய்.

கிடைக்கும் என்று நம்பு 
முடியும் என்று நம்பு 
வரும் என்று நம்பு.

கிடைப்பதற்கு விடா முயற்சி செய்.
முடிப்பதற்கு விடா முயற்சி செய் 
வருவதற்கு விடா முயற்சி செய்.



துணிவு கொள் 
பயத்தை தவிர் 
விழிப்புடன் செயல்பாடு.

உனக்கு இனிமேல் 
வெற்றி மேல் 
வெற்றி தான்.



நன்றி , வணக்கம்..

Sunday, 2 June 2013

பேராசை மனிதர்களின் எண்ணங்கள் LUST MENTALITY PEOPLE'S THOUGHTS

பேராசை மனிதர்களின் எண்ணங்கள் 
                   
LUST MENTALITY PEOPLE'S THOUGHTS
              PUTHUK KAVITHAI
                  புதுக்கவிதை 

      

பேராசை மனிதர்கள்
அழிவுப் பாதையில் செல்பவர்கள்.
பிறரின் உணர்வை மதியாதவர்கள்
முற்றிலும் சுயநலவாதிகள்.

இவர்கள் ஆசைபடுவது
மலையை கரைக்க வேண்டும்.
கடல் அலைகளை நிறுத்தவேண்டும்
மனிதர்களை இஷ்டப்படி ஆட்டுவிக்கவேண்டும்..

தேர்வு எழுதாமல்
தேர்ச்சி பெற எண்ணுவார்கள்.
பாடங்களை படிக்காமல்
பட்டம் பெற துடிப்பவர்கள்.

வியர்வை சிந்தி உழைக்காமல்
பணம் சம்பாதிக்க விரும்புவர்கள்.
தங்களுக்காக ஆகாயத்தில்
மாளிகைகளை கட்ட நினைப்பவர்கள்.

விதைகளை விதைக்காமல்
அறுவடை செய்ய ஆசைபடுபவர்கள்.
தனக்கெதிராக போட்டியில்லாமல்
பதவியை பிடிக்க எண்ணுபவர்கள்.

தீய செயல்களை மறைத்து
தூய்மையாக காட்ட விரும்புபவர்கள்.
எதுவும் சாப்பிடாமல்
பசியை போக்க நினைப்பவர்கள்.



பணம் செலவழிக்காமல்
காரியம் சாதிக்க நினைப்பவர்கள்.
வாங்கிய கடனை செலுத்தாமல்
ஏமாற்ற நினைப்பவர்கள்.

சேவைகளை செய்யாமல்
பேரை சம்பாதிக்க எண்ணுபவர்கள்.
நினைத்தது அனைத்தும்
உடன் நடக்க வேண்டுபவர்கள்.

மக்கள் வரிப்பணத்தில்
ஆடம்பரமாக வாழ துடிப்பவர்கள்.
வரிகளை செலுத்தாமல் ஏமாற்றி
கறுப்புப்பணம் பதுக்க விரும்புபவர்கள்.

ஆசை இல்லாதவன் மனிதப் பிறவி அல்லன் 
பேராசை கொண்டவனோ மனிதனே அல்லன்.
ஆசை ஆக்கத்திற்கு பயன்படுத்துபவன் மாமனிதன்
ஆசை அழிவிற்கு கொண்டு செல்பவன் நீச மனிதன்.



நன்றி, வணக்கம்.