Pages

Thursday 15 August 2013

இரத்த தானம் செய்யுங்கள்! வாழ்க்கையை பரிசாகத் தாருங்கள்! - BLOOD DONOR IS A LIFE SAVER

                              

15.8.13 அன்று நேதாஜி தேசிய இயக்கம் மற்றும் தங்கமயில் ஜிவல்லரி இணைத்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம் நடைப்பெற்றது. அப்போது பாடிய என் கவிதை இதோ..
இடம் : மதுரை குஜராத்தி சமாஜம்.

           

இரத்த தானம் செய்யுங்கள்! 
வாழ்க்கை பரிசாகத் தாருங்கள்!
BLOOD DONOR IS A LIFE SAVER
  

ஆறிலும் வாழ்வு ! நூறிலும் வாழ்வு ! எது வாழ்க்கை?

உங்களுக்காக வாழ்வது அது வாழ்க்கை கடன் 
பிறர்க்கு வாழ்வு கொடுப்பது வாழ்க்கைப் பரிசு.                                                  1

அன்னதானம் பிறரின் பசி தீர உணவளிப்பது 

உடல் தானம் பிறர் வாழ உறுப்புகளைத் தருவது 
இரத்தத் தானம் பிறர்க்கு புது வாழ்க்கைத் தருவது.                                         2   

          
விண்ணிலிருந்து வரும் குருதி மழையாக மண்ணைக் காக்கும்  
பசுவிலிருந்து கிடைக்கும் வெண்குருதி பாலாக ஆரோக்கியம் காக்கும்  
நம்மிலிருந்து கிடைக்கும் செங்குருதி  பிறரின் வாழ்க்கைக் காக்கும்.      3

              

சில நிலத்தில் தான் எடுக்க எடுக்க தண்ணீர் ஊற்றாய் சுரக்கும் 
வேறு வேறு சாதி மத இன மக்களுக்குள் ஒரே சிவப்புநிற ஊற்று 
நாம் கொடுக்க கொடுக்க தானாக வளரும் இரத்த ஊற்று.                              4

தந்தையின் இழப்பை தாய் சரி செய்துவிடலாம் 
பணத்தின் இழப்பை மற்ற செல்வங்கள் ஈடு செய்யலாம் 
இரத்தத்தின் இழப்பையை இரத்தம் மட்டுமே ஈடு செய்ய முடியும்!           5

தரையிலும் தண்ணீரில் செல்லும் ஊர்திகளை தந்தான் 
வானத்திலும் விண்ணிலும் பறக்கும் ராக்கெட்டுகளை விட்டான் 
மனித உயிரை காக்கும் இரத்தம் தயாரிக்க இன்னும் முடியவில்லை?!   6

      

ஒருவரின் இரத்தம் பிறர்க்கு கொடுப்பது இரத்ததானமாம். 
ஒருவரின் உடலில் சுமார் அரை லிட்டர் இரத்தம் இருக்குமாம் 
ஒருவர் ஒருமுறை கால் லிட்டர் தானமாகக் கொடுக்கலாமாம்.                  7

இருவாரத்தில் மீண்டும் புதிதாக சுரந்து விடுமாம் 
சாதாரணமாக உண்ணும் உணவே போதுமானதாம் 
மூன்றுமாதமொருமுறை இரத்த தானம் தரலாமாம்!                                       8

நம் இரத்த செல்களின் ஆயுள் மூன்றே  மாதமே அதன் பின் 
தானாக அழிந்து கழிவாக உடலிருந்து வெளியேறுமே 
தானாக அழிவதை தானமாக கொடுத்தால் உயிர்கள் காக்கப்படுமே.         9

     

இரத்ததானம் இருதயத்திற்கு பலம் தந்திடுமே  
இதனால் உடல் பாதிப்பு பலவீனம் பக்கவிளைவு ஏற்படாதே 
வீண் வதந்தி, மூட நம்பிக்கை இன்றோடு தொலைத்திடுவோமே               10

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் பசுமை காக்க 
ஆண்டிற்கு ஒரு முறையாவது இரத்த தானம் தருவோம் உயிர் காக்க 
என்றும் இதுபோல் இரத்ததானம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம். 11

  

நன்றி ! வணக்கம் ! ஆக்கியோன் 
கு.கி.கங்காதரன் 

கைபேசி : 9865642333
இ .மெயில் : gangadharan.kk2012@gmail.com.

       

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment