Pages

Friday, 25 October 2013

64. WHAT WILL HAPPEN IF YOU HAVE MONEY AND MAY NOT HAVE MONEY? - 64. பணம் இருந்தால் , இல்லாவிட்டால் என்ன நடக்கும்?


HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

64. WHAT WILL HAPPEN IF YOU HAVE MONEY AND 
MAY NOT HAVE MONEY?
* Even you say powerful chants or give  valuable wealth or money, you can't stop once's death or postpone the death. 
* To Enrich the mind and strengthen the body related numerous books, stories, literature, poetry, essays, articles are available in the Tamil language when compare to other languages.  But at the same time there are not enough books of technology , medicine , agriculture , science and engineering. This has to be taken to an account for Tamil language development. 
* lying and crime can't be stopped by a great books and laws. 
* Your body can accept porridge ! Your body also accept higher price foods! Even your body can accept harmful drinks ! Those are all depend upon your perception and habit. If you have money in your hand, then your body will offer many things! If you do not have the money in your hand, it makes your stomach hurt .
* Criminals , thieves are expected to show fair and kindness from  other people. But he never be realized that he is dishonest.  If he is having this type of thought how he will be reformed?

Success steps continuous next..

========================================================================================
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 

64. பணம் இருந்தால் என்ன நடக்கும்? இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

* எவ்வளவு சக்திமிக்க மந்திரங்கள் சொன்னாலும், செல்வங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் ஒருவரின் மரணம் நிறுத்தவோ, தள்ளிப் போடவோ முடியாது. 
* மனத்தை வளப்படுத்தவும், உடலை பலப்படுத்தவும் தமிழ் மொழியில் வேறு மொழியில் இல்லாத அளவிற்கு ஏராளமான புத்தகங்கள், கதைகள், இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால் இக்கால தொழில் நுணுக்கங்களைப் பற்றிய புத்தகங்கள், மருத்துவம், விவசாயம், அறிவியல், பொறியியல் பற்றிய புத்தகங்கள் போதிய அளவு இல்லை.
* எந்த ஒரு புத்தகத்தாலும், சட்டத்தாலும்  ஒருவனை பொய் சொல்லாமல் இருக்க வைப்பதோ, குற்றம் செய்யாமல் இருக்க வைப்பதோ முடியாது.
* உன் உடம்பு கஞ்சி குடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்! விலை உயர்ந்த உணவையும் ஏற்றுக்கொள்ளும். ஏன் சரக்கு அடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்.எல்லாமே உன் எண்ணத்திலும், பழக்கவழக்கத்திலும் இருக்கின்றன. உடம்பு இருக்கின்றதே கை நிறை காசு இருந்தால் கண்டதை கேட்கும் ! கையில் பணம் இல்லாவிட்டால் வயிறு காய வைக்கும்.
* குற்றவாளிகள், திருடர்கள் கூட தங்களிடம்  பிறர் நியாயமாக மற்றும் இரக்கம் காட்ட வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர தான் தவறு செய்கிறோம் என்று ஒருபோதும் எண்ணுவதில்லை. இந்த மாதிரி எண்ணம் இருக்கின்றபோது எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

====================================================== ===================================

     

No comments:

Post a Comment