Pages

Tuesday, 11 March 2014

80. WEAR BULLET PROOF 'STEEL JACKET' - 80. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது ?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN


80. WEAR BULLET PROOF 'STEEL JACKET'

* If you wear ‘steel jacket of confident’ then any critical arrows will not be penetrated in to you and also you will be protect from failure bullets.

           

* GOD has provided a FATE BOOK to everyone. All winners are writing their fate themselves by performing self confidence, hard work and perseverance.  But many people are not able to write their fate themselves due to their lazy and hopeless attitude.
 * If you want to attract many people of mind then you must know to apply the Yoga and Siththi. But if you want to become your slave then you must knowledge and wisdom


* You must think two things in this world those are death and wealth. People are crying and become sorrow when they are seeing their related one’s death. (Everyone is well aware of death and none of we can’t escape from it).  Second one is, owned wealth / assets. People are known that Today one's own will not be owned tomorrow.

* Where illiterate and poor remains high there you are having a lot of opportunity to become rich.

Success steps continuous next...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இனிய வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 


80. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்' எது ?

* நீங்கள்  நம்பிக்கை என்னும் ' இரும்புக் கவசம்' அணிந்தீர்களேயானால்  உங்களை எந்தவித விமர்சன அம்புகளாலும், தோல்வி குண்டுகளாலும் துளைக்காமல் காக்கப்படுவீர்கள்.  


*  ஒவ்வொருவருக்கும் 'விதி' என்னும் புத்தகம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அறிவுள்ளவன் அதில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி கொண்டு  பல வெற்றி வரிகளை அவனே எழுதிக்கொள்கிறான். கடின உழைப்பும், நம்பிக்கையும்  இல்லாதவர்கள் அவ்வாறு எழுத முடியாமல் 'விதி விட்ட வழி' என்று புலம்புகிறார்கள். 


 * பலரின் மனத்தை வசியப்படுத்தவேண்டுமென்றால் சித்தியும், யோகமும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பலரின் உடலை அடிமை படுத்த வேண்டுமென்றால் அறிவும், புத்திசாலித்தனம் தேவை.


* இந்த உலகில் சிந்தனை செய்யவேண்டிய விஷயங்கள் இரண்டு. அவைகள் என்னவென்றால் ஒன்று , உறவின் மரணத்தைப் பார்த்து அழுவதும் கவலைபடுவதும் (அதாவது அது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது என்று). இரண்டாவது ஒருவருக்குச் சொந்தமான  செல்வங்கள். (இன்று ஒருவருக்குச் சொந்தமானது நாளைக்குச் சொந்தமாக தான் இருக்கும் என்று சொல்லமுடியாது).


* எங்கே ஏமாறுபவர்கள் மற்றும் ஏழைகள் அதிகமாக இருக்கின்றார்களோ அங்கு தான் நீ பணக்காரனாக ஆகும் வாய்ப்பு நிறைய உள்ளது. 

வெற்றிப்படிகள் இன்னும் உயரும் ..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

No comments:

Post a Comment