Pages

Wednesday, 12 March 2014

81. KNOW YOUR DAY OF THE DEAD! - 81. நீங்கள் இறக்கும் நாள் எப்போது?

                           HAVE A NICE LIFE STEPS


                                    

                          MADURAI GANGADHARAN

                               

                81. KNOW YOUR DAY OF THE DEAD!

                           
* A man wants to test me and asked a question rudely! “Can you able to say my day of the death?” and I have given an answer “today or tomorrow”!

 

* Again he asked , “When my all problems will be solved?” and I have said “today or tomorrow”!

 

* Further he threatened, “When my dream will become to true?” and I have answered, “Today or tomorrow”!

 
* Without stopping he asked , "For me when good time will come?".  I have said an answer “today or tomorrow”!

 

* He again asked , "When I will become rich?" . I response, “Today or tomorrow”!

 

* He angrily sees to me, "what are you saying ? For all my questions you have given same answer as 'today or tomorrow'! What is the real meaning?”. I have said ," Do the good and quality works today and postpone your all bad works tomorrow and it means who is having care and courage and doing today’s duties without fail he will get the appropriate benefits tomorrow!”.

Then he has gone without ask any question.

Success steps continuous next...

######################################################

 இனிய வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 
                                            
                                                    மதுரை கங்காதரன் 
                                           
                                       81. நீங்கள் இறக்கும் நாள் எப்போது? 



* ஒருவன் என்னை சோதிப்பதற்காக "நான் எப்போது இறப்பேன் என்று கூற முடியுமா?" என்று நக்கலாகக் கேட்டான்.  அதற்கு நான் தந்த பதில் "இன்று அல்லது நாளை" என்றேன்! 



* அத்தோடு நிற்கவில்லை. "என்னுடைய பிரச்சனைகள் எப்போது தீரும்?" என்று அதட்டி கேட்டான் . அதற்கும் நான் தந்த பதில் "இன்று அல்லது நாளை" என்றேன்! 

* மேலும் அவனே "என்னுடைய கனவெல்லாம் எப்போது நனவாகும்?" என்று மிரட்டினான். அதற்கும் நான் தந்த பதில் "இன்று அல்லது நாளை" என்றேன்!  
* விடாமல் "எனக்கு எப்போது நல்லகாலம் பிறக்கும் என்று ஆதங்கமாய் கேட்டான்".  அதற்கு நான் தந்த பதில் "இன்று அல்லது நாளை" என்றேன்! 
* மீண்டும் "எப்போது நான் பணக்காரனாக ஆவேன்?" என்று நப்பாசையுடன் கேட்டான். சலிக்காமல் நான் தந்த பதில் "இன்று அல்லது நாளை" என்றேன்!  


* நான் சொன்ன பதில்களைக் கேட்டு ஆத்திரத்துடன் "நான் கேட்ட கேள்வி எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக 'இன்று அல்லது நாளை' என்கிறீர்களே! இதற்கு உண்மையான அர்த்தம் என்ன?" என்று கேட்டான். அதற்கு நான் சொன்ன பதில் "அக்கறையும், துணிவு உள்ளவன் சிறந்த மற்றும் தரமான வேலைகளை இன்றே செய்து முடிப்பான். கெட்ட செயல்களை செய்வதை நாளைக்கு தள்ளிப் போடுவான். அதாவது  இன்றைய  தனது கடமைகளைத் தவறாது செய்பவன் அதற்குண்டான பலன்களை நாளை பெற்றே தீருவான்" என்றேன்.  


பிறகு கேள்வி எதுவும் கேட்காமல் திருப்பி சென்றுவிட்டான்.  

வெற்றிப்படிகள் இன்னும் உயரும் ..

###################################################################################

No comments:

Post a Comment