Pages

Thursday, 13 March 2014

தேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல - ONE ELECTION - RACES MANY

தேர்தல் ஒன்று ! போட்டிகள் பலப்பல! 
     ONE ELECTION - RACES  MANY !
           
       விழிப்புணர்வு வரிகள் 
         
        மதுரை கங்காதரன் 

                
கொடுக்கும் பணத்தை ஓட்டாக மாற்றும் போட்டி 
ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பவர்கள் வெற்றி பெறுவர் 

பட்டை நாமம் சாத்தும் போட்டி 
வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களுக்கே வெற்றி 

மக்கள் பணத்தை சுரண்டி பணக்காரனாகும் போட்டி 
லஞ்சம், ஊழல் செய்பவர்களுக்கு வெற்றிகள் தொடரும் 

          

எதிரிகளை பழி வாங்கும் போட்டி 
எதிரிகளை வசைபாடுபவர்களுக்கு காத்திருக்கின்றது வெற்றி 

மக்களிடம் ஓட்டு வாங்கும்  வசியப் போட்டி  
சீரியல் , சினிமா கவர்ச்சிகளுக்கு வெற்றி நிச்சயம் 

மக்களை வதைக்கும் போட்டி 
பலவகையில் மக்களை வதைக்கத் தெரிந்தவர்களுக்கே வெற்றி 

குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு அடைக்கலம் தரும் போட்டி 
மெகா குற்றம் செய்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் 

        

மக்கள் வரிப் பணத்தை அனாவசியமாக செலவழிக்கும் போட்டி  
வரிப்பணத்தை அதிகம் செலவழிப்பவருக்கு வெற்றி    

மக்களுக்கு தொண்டு செய்யும் போட்டி 
சேவை, தொண்டு செய்பவர்கள் வெற்றி பெறுவது சொற்பமே 

வாரிசுகளை தேர்தலில் நிற்க வைக்கும் போட்டி 
பதவி பணபல வாரிசுகள் வெற்றி பெறுவது உறுதி 

மக்களை இளித்தவாயர்களாக ஆக்கும் போட்டி
செய்கிறேன் என்று செய்யாமல் இருப்பவர்களுக்கு வெற்றிக்கனி 

    

தினமும் பரபரப்பு செய்திகளைத் தரும் போட்டி 
வாய் சவுடால்கள் அதிகமுள்ளவர்களுக்கு வெற்றி 

பதவிச் சலுகைகளை அனுபவிக்கும் போட்டி 
மக்களை ஏமாற்ற தெரிந்தவர்களுக்கு வெற்றி நிச்சயம் 

பாராளுமன்ற அலுவல்களை ஒத்திவைக்கும் போட்டி 
பேசத் தெரியாதவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவர் 

லஞ்சம் ஊழல்கள் செய்வதில் போட்டி 
பெரிய பதவி வகிப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் 

  

மக்களை பலிகடாவாக ஆக்கும் போட்டி 
பலவிதங்களில் மக்களை பலிகடாவாக கொடுப்பவரே வெற்றி 

ஏழை மக்களை பரம ஏழைகளாக ஆக்கும் போட்டி 
பலவித வரிகளை போடத் தெரிந்தவருக்கே வெற்றி 

அரசியல் பண்ணுபவர்களுக்கு எப்போதுமே வெற்றி !
அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களுக்கு எப்போதுமே தோல்வி ! 

    
  
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^