நம்ம நாடு நல்ல நாடு!
மக்கள் விரும்பும் செய்திகள்
( ஒரு கற்பனை மற்றும் அரசியல் விழிப்புணர்வு)
இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ
நேற்று வெற்றி பெற்ற நம்மூர் எம்.எல் ஏ அவர்கள் இன்று காலை 9.00 மணிக்கு தன் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென்று சரியான நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காதவாறு வந்ததால் அந்தப் பகுதி சற்று பரபரப்பிற்குள்ளாகியது. சொற்ப மக்களே அந்த அலுலகத்திற்கு வந்திருந்தார்கள். அவரது அன்றாடப் பணிகள் அவ்வப்போது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதை பார்த்தவுடன் கூட்டம் கொஞ்ச அதிகமாகியது. கணினியில் தமக்கு வந்திருக்கும் இ.மெயில்களைப் பார்த்தார். கைபேசியில் வரும் அழைப்பிற்கு தகுந்த பதில் அளித்தார். சமூக வலைத்தளங்களில் பலர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலை அனுப்பினார். அலுவலத்திற்கு வந்திருந்த சிலரை ஒவ்வொருவராக அழைத்தார். அவர்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கிக்கொண்டார். ஒருவர் மட்டும் உள்ளே வருவதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு இருக்க எம்.எல்.ஏ அவரைக் கூப்பிட்டார்.
"ஐயா .. உங்களுக்கு என்ன வேண்டும்?"
"ஐயா ,, எம் பேரு மாடசாமிங்க. கூலி வேலை பார்கிறேங்க. எம் பொண்ணு பெரிய படிப்பு படிக்கனும்ன்னு ஆசைபடுறா. படிக்க வைக்க வசதியில்லேங்க"
"என்ன மதிப்பெண் எடுத்திருக்கா ?"
"இந்தாங்க மதிப்பெண் பட்டியல்"
"பரவாயில்லையே. நல்லப் படிக்கிறாப்பிலே இருக்குது"
"உங்க பொண்னை அழைச்சுட்டு , எந்த கல்லூரியிலே சேரனுமோ அங்கு இப்போதே போவோம். உடனே சேர்த்திடுவோம். பொண்ணு படிச்சா குடும்பத்திற்கு நல்லது.
உடனே அந்தக் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய சம்பளத்தில் அந்தப் பெண்ணிற்குன்டான கல்வி பணத்தைக் கட்டி சேர்த்துவிடுகிறார். ஊர் மக்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த மாதிரி ஒவ்வொருவரும் இருந்தா ஏன் கொலை, கொள்ளை, திருட்டு நடக்குது.. என்று பேசிக்கொண்டனர்.
77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777
No comments:
Post a Comment