இடி மின்னல் தாங்கும் இதயம்
TO GET BRAVE HEART
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
உன் கொள்கையில் மாற்றம் கூடாது
கடலில் கூட சீற்றம் உண்டாகலாம்
உன் உணர்வில் சீற்றம் கூடாது
நிலத்தில் அதிர்வுகள் ஏற்படலாம்
உன் இதயத்தில் அதிர்வுகள் கூடாது
காலம் தோல்வியைத் தரலாம்
உன் செயலில் தோல்வி கூடாது
எதிர்பாராதது சில நடக்கலாம்
தன்னம்பிக்கை இழக்கக் கூடாது
உடலில் சோர்வுகள் உண்டாகலாம்
மனதில் சோர்வு கூடாது
உழைப்பு உன்னை ஏமாற்றலாம்
சத்தியம் தவறக் கூடாது
நாளை உலகம் அழியலாம்
கடமை செய்ய தவறக் கூடாது
உனது ஆயுள் முடியலாம்
உனது புகழ் அழியக் கூடாது
நிழல் உன் கூட வராமல் போகலாம்
நேர்வழியை தவறக் கூடாது
இறைவனும் உன்னை கைவிடலாம்
நம்பிக்கையை கை விடக் கூடாது
நினைப்பது நடக்காமல் போகலாம்
நடத்துவது தவறக் கூடாது
வார்த்தைகள் தவறி வரலாம்
வாய்மை தவறக் கூடாது
இடி மின்னல் தாங்கும் இதயம்
இன்று முதல் நீ பெறுவாய்!
9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDelete