Pages

Sunday, 8 February 2015

CAN WE SUPPORT TO DIE TAMIL LANGUAGE?தமிழ் மொழியை அழிக்க விடலாமா?

தமிழ் மொழியை அழிக்க விடலாமா?
CAN WE SUPPORT TO DIE TAMIL LANGUAGE?
 
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை கங்காதரன்

உலக நாடுகளுடன் போட்டியிட்டு வெல்ல தமிழறிந்தோர், தமிழ் கற்றோர் அனைவரும் தமிழ் கணினி அறிந்தோர் ஆக வேண்டும். அதுவே தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் நல்லது. மாறிவரும் காலத்திற்கேற்ப எளிதாக கையாளப்படும் கணினி மற்றும் கைபேசியில் வலைதளம் மூலமாக தமிழ்மொழியின் பயன்பாடு மிகமிக சொற்பமேயாகும்.ஆங்கிலமொழி தமிழ் மொழியை சின்னாபின்னாபின்னமாக்கியதோடு நிற்காமல் தமிழ் எழுத்துக்களையும் தமிழர்களிடையே மறக்கச் செய்யும் வலிமை பெற்றுள்ளது. அது எதனானென்றால் ஆங்கில மொழிக்கு 26 எழுத்துக்கள் இருப்பதால் கணிப்பொறி விசைப்பலகையில் எளிதாக அமைக்க முடிந்தது. மேலும் ஆங்கிலமொழி அதன்  தட்டச்சு  இயந்திரம் தமிழ் மொழியை அழிக்க விடலாமா?

வழியாக பிரபலமாகி அதேமாதிரியாக கணினிப்பொறி விசைப்பலகையிலும் இருந்ததால் மக்களுக்கு எளிதாகிவிட்டது.  

தமிழ் அழியாமல் நிரந்தரமாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டுமென்றால் கணினித்தமிழ் ஆங்கிலம் விட இலகுவாக இருக்கவேண்டும். அதன் மூலம் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழர்கள் அனைவரும் ஏற்கனவே படைத்த, இப்போது படைக்கும், இனி படைக்கப்போகும் அனைத்தும் எனது எளிய கணினி தமிழ் கணினி விசைப்பலகை மூலம் வலைதளத்தில் புகுந்து உலகைக் கலக்க வேண்டும்.

அப்படி எண்ணுகின்றபோது, அழிந்துவரும் மொழிகளில் தமிழ் மொழி நான்காவது இடத்தில் இருக்கின்றது என்று தெரிய வரும் போது மனம் மிக வேதனையடைகின்றது.
 
மொழிகளில் முதன்மை மொழியான தமிழ் மொழியில் இல்லாத இலக்கியங்களா? காவியங்களா? அள்ள அள்ளக் குறையாத எண்ணற்ற படைப்புகளைக் கொண்டமொழி. உலகுக்கு வழிகாட்டும் ஈரடி திருக்குறள், ஓரடி ஆத்திச்சூடி எக்காலத்திலும் எந்நாட்டவர்களுக்கும் பொருந்தும். அத்தகைய தமிழ் மொழிக்கு இக்கதி கணினித் தமிழ் வளராததால் ஏற்பட்டது.

எளிய முறை கணினித் தமிழ் வலைதளத்தில் சாதனை படைக்கவேண்டுமென்கிற ஆசையால் சில வருட உழைப்பிற்குப் பிறகு ஆங்கிலம் மற்றும் எல்லா மொழிகளையும் எளிதாக கணினியில் தட்டச்சு செய்யும் வழியை ‘UMASK’ என்ற சாதனம் கணினித்திரையிலும், தொடு திரை விசைப்பலகையிலும் கண்டுபிடித்துள்ளேன்.
 
சிறியோர் முதியோர் வரை தமிழ் எழுத்துக்கள் யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்களெல்லாம் மிகமிக எளிதாய் இந்த புதிய கணினித்தமிழை ஐந்து நிமிடத்தைவிட குறைந்த நேரத்தில் பயிற்சி மற்றும் மனனம் இல்லாமல் கற்கலாம். மேலும் ஒர் ஆச்சரியம் என்னவென்றால் தழிழைப்போல அழியும் தருவாயில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்த எளிய கணினி தட்டச்சு ‘UMASK’ ஒர் வரப்பிரசாதம் ஆகும்.

எவ்வாறு அனைத்து மொழிகளுக்கும் தொல்காப்பியர் படைத்த தமிழ் இலக்கணம் மூலமாக இருப்பது போல் இந்த ‘UMASK’ இன் அமைப்பு எம்மொழிக்கும் ஏற்றதாகும்.

‘MASK’ என்றால் 'முகமூடி'. அதாவது தமிழர்கள் 'ஆங்கிலம்' என்கிற முகமூடி அணிந்து தமிழ் மொழியை மறந்தும் அழித்தும் வருகின்றனர். அந்த போலி முகத்தை கிழித்து அழகு தமிழ் முகத்தை காட்டவே இந்த உழைப்பு. இதற்காக காப்புரிமை (Patent) பெற முழுமுயற்சி எடுத்து வருகிறேன். என் முயற்சிக்கு உங்கள் உதவி செய்தால் கணினி உலகில் தமிழை முதன்மை மொழியாக திகழச் செய்ய முடியும்.  

 
அதனால் பல திருவள்ளுவர்களும் , கம்பர் பாரதிகளும் இந்த கணினித் தமிழ் வழியாக வலைதளத்தில் உருவாவர் என்பதில் ஐயமேதுமில்லை. உலக நூல்களில் 'திருக்குறள்' உன்னதமானது போல கணினி விசைப்பலகையில் ‘UMASK’ ஒர்  உன்னத படைப்பு என உலகம் போற்றும். இந்த பெருமை 'தமிழாய்வுக் கழகம் மூலம் கிடைத்தால் அது எனக்கு மகிழ்ச்சியே.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என அக்கால தமிழன் சொன்னான். 'மொழி பிழைக்க எம்மொழி கற்ற எவரும் அம்மொழியை கணினியில் கற்றல் வேண்டும்' என இக்கால தமிழன் சொல்கிறான்.
வாழ்க,வளர்க, வெல்க தமிழ் !
நன்றி ! வணக்கம்!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment