Pages

Sunday, 8 February 2015

தொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை


தொழில் - வாரிசு - தொல்லை
ஒரு புதுமைக்காக ஆங்கில மற்றும் வடமொழி எழுத்துக்கள் அடிகோடிட்டு காட்டியிருக்கிறேன்.
 
சிறுகதை  

மதுரை கங்காதரன் 

அன்று பலர் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவோடு மதிப்பெண்கள் பட்டியலை  பக்கத்தில் இருக்கும் கணினி மையத்திலிருந்து பெற்றுச் சென்று கொண்டிருந்தனர்பலரது முகத்தில் பிரகாசமும் சிலரது முகத்தில் சோகமும் படர்ந்திருந்தனஅதே இடத்தில்  அடுத்து என்ன செய்வதுஎன்று ஒரு சாரார் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

"இங்கே பாருடாநாம எவ்வளவு கவலைப்பட்டுட்டு இருக்கோம்ஆனா இந்த  சுப்பிரமணி தான் முதல் வகுப்புக்கு கீழே இவ்வளவு குறைந்த மதிப்பெண்கள்  எடுத்திருக்கோமேன்னு கொஞ்சமாவது கவலைபடுறானா பாருஎன்று நண்பர்கள்  பட்டாளம் அவனை குறைக்கூறிக் கொண்டிருந்தது.

"அவனுக்கென்னடா குறைச்சல்அவங்க அப்பா பெரிய டாக்டர் ! தன்னோட மகன் பாசானதே  பெரிசுன்னு நினைப்பார்அதுவுமில்லாமே அவரு பெரிய பணக்காரர்.தன்னோட மகனை எப்படியும் டாக்டருக்கு படிக்க வைச்சிடனும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கார். அதுக்காக எவ்வளவு லட்சம் கொடுப்பதற்கும் தயாராகவும் இருக்கிறார். அப்படியிருக்கும் போது அவன் எதுக்குடா கவலைப்படனும்இவனைப் பாரு , நம்ம  சக்தி வேலைகட் - ஆப்  இருநூறுக்கு நூற்றி தொண்ணுத்தெட்டு வாங்கியிருக்கான்என்ன பிரயோசனம் ! அவனாலே மெடிக்கல்  காலேஜை எட்டி கூட பார்க்க முடியாதுஅப்படியும்  மீறி படிக்கணும்னு ஆசைபட்டா கட்டாயம் சில லட்சம் கொடுத்து தான் தீரனும்நல்ல  அறிவும் திறமையும் இருந்தா மட்டும் போதாதுஅட எது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 'பணமிருந்தா போதும்னுசொல்ற உலகத்திலே நமக்கெல்லாம் எப்போத் தான்  விமோணம் கிடைக்கப் போகுதோன்னு தெரியல்லேஅதுபத்தி இப்போ பேசி பிரயோசனமில்லைஆக வேண்டியதைப் பார்ப்போம்என்று அனைவரும் கலைந்து  சென்றனர்.

சுப்பிரமணி எதற்கும் கவலைபடாமல் 'எல்லாமே தன்னோட அப்பா பார்த்துக் கொள்வார்' என்று ரொம்பவே அலட்சியமாய் வீட்டிற்கு நுழைந்தார்.
 
"சுப்பிரமணிஎன்ன மார்க் வாங்கியிருக்கேஒரு முதல் வகுப்பிலே பாசாயிருந்தாலும்  நான் சந்தோசப்பட்டிருப்பேன்என்ன செய்றதுநான் ஒரு டாக்டராகி தொலைச்சுட்டேன். எல்லாரும் உன்னையும் என்னைப் போல டாக்டருக்கு படிக்க வைக்கனும்னு நினைப்பாங்க.அதோடில்லாமே எனக்கடுத்து இந்த கிளினிக்கை உன்னைத் தவிர வேறு யார் தான்  கவனிப்பாஉன்னை டாக்டருக்கு படிக்க வைக்க எவ்வளவு லட்சம் கேட்கிறாங்களோம்.. எவ்வளவு கேட்டாலும் அதை கொடுத்தே தீரனும்வேற வழியே இல்லைஎன்று அவனிடம் புலம்பும் போதும் இந்த அறிவுரைகள் அவன் அப்பா யாருக்கோ சொல்கிறார் என்கிற  தோரணையில் நின்று கொண்டிருந்தான்.

"சரிசரி மசமசன்னு நிக்காம எல்லாத்திலேயும் பத்து பத்து காப்பி எடுத்து அதை என்னோட நண்பர்கிட்டே அட்டஸ்டேசன் வாங்கிக்கோ.  நான்   வந்த   பிறகு   உன்னோட  அப்பிளிகேசனை   பூர்த்தி செய்வோம்.  முக்கியமா   உங்கம்மாவை  ஜாக்கிரதையா  பார்த்துக்கோ ! அவங்க ஹார்ட் பேசன்ட்னு உனக்குத் நல்லாவேத் தெரியும்என்ன தான்  நான் டாக்டராக இருந்தாலும் ஓரளவுக்குத் தான் என்னாலே குணப்படுத்த முடியும்என்ன ஒரு வசதி ! நான் டாக்டரா  இருக்கிறதனாலே நேரம் , செலவு பார்க்காமே உங்கம்மாவை  கவனிக்க முடியுதுஇல்லாட்டா அவ ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாஎன்று தன் சொந்த  கதை ! சோகக் கதை! இதன் மூலமாவது தன் மகனுக்கு புத்தி வரவைப்பதற்கு முயற்சி  செய்தார்.
 
ஆனால் அப்போதும் அவன் பார்வையும் கவனமும் எங்கோ இருந்தது.

"சுப்பிரமணி ! நான் எப்படியும் வீட்டுக்கு வர்றதுக்கு சாயந்தரமாவது ஆகிவிடும்அதுவரை அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்காம உன்னாலே முடிஞ்சளவு உதவி செய்புரியுதாஎன்று அழுத்தம்திருத்தமாக விளக்கினார்.

"போதுங்க ! நானும் நீங்க பேசினது எல்லாமே கேட்டுட்டு தான் இருந்தேன்நம்மாலே  என்னங்க பண்ணமுடியும்அவங்கவங்க மனசு வச்சாத் தான் எல்லாமே செய்ய முடியும். அவ்வளவு ஏங்கஎன்ன தான் விதம் விதமா சமையல் ஆக்கி வைச்சாலும் சாப்பிட மனசு  அதாவது அது பிடிச்சா தானுங்க சாப்பிடுறாங்கஅப்படியிருக்கும் போது அவனோட  படிப்பு பொருத்த வரைக்கும்  நீங்க   நினைக்கிற மாதிரி   அவன்   நடந்துக்குவான்னு எப்படிங்க எதிர்பார்க்கிறீங்கஎல்லாம் எது எது எப்ப எப்ப நடக்குமோ அதுபடி தான்  நடக்கும்அதை யாராலேயும் தடுக்கவே முடியாது ? என்னை நான் பார்த்துக்கிறேன். என்னைப் பத்திக் கவலைபடாமே நீங்க உங்க வேலையை முழு மனசோடு கவனிங்க" என்று  அவருக்கு விடை கொடுத்தாள்.

சில மணிநேரம் எல்லாமே நன்றாகத் தான் போனதுஅம்மாவும் மகனும் படிப்பு விஷயத்தைபேசிக் கொண்டிருந்தனர்சில நிமிடங்கள்  தான் கடந்திருக்கும்.

"சுப்பிரமணி ! சுப்பிரமணி !" என்று இதயத்தை பிடித்தவாறு அலறினார் அவன் அம்மா.

அந்த கோலத்தை பார்த்தவன் "அம்மா என்ன ஆகுது?" என்று மேற்கொண்டு எதுவும்  யோசிக்க  முடியாமல் திணறினான்.

"இரும்மாஅப்பாவை கூப்பிட்டு பார்கிறேன்என்று கூப்பிட்டுப் பார்த்தான்ஆனால்  அவனுக்கு 'நீங்கள் அழைக்கும் நபர் தொடர்புக்கு அப்பால் இருக்கிறார்சிறிது நேரம்   கழித்து தொடர்பு கொள்ளவும்என்கிற பதிலே நீண்ட நேரமாக  வந்தது.

"சுப்பிரமணிசீக்கிரம் ஒரு ஆட்டோ அழைச்சிட்டு வாப்பாஅப்பாவோட நண்பர் ஆஸ்பத்திரிக்கு போவோம்என்று வேகப்படுத்தினார்.

ஆட்டோ வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த ஆஸ்பத்திரியை அடைந்தனர்.

கைத்தாங்கலாக அவனுடைய அம்மாவை பிடித்து உள்ளே நுழைந்து கொண்டே "டாக்டர் இருக்காங்களா?" என்று கேட்டுக்கொண்டே அங்குள்ள இருக்கையில் அம்மாவை அமர்த்தினார்.  

"இருக்காருங்கஅம்மாவுக்கு என்னங்க ஆச்சுஎன்று அங்குள்ள செவிலியர்   அக்கறையோடும் வேகமாகவும் விசாரித்தார்.

"அம்மா ஒரு ஹார்ட் பேசன்ட்என்னோட அப்பாவும் ஒரு டாக்டர்அவர் இப்போது ஊரிலே இல்லைஅதனாலே தான் இங்கு வந்திருக்கோம்கொஞ்சம் வேகமா ட்ரீட்மென்ட்  ஆரம்பிங்கஎன்று துடித்தான்.

"இப்படி அவசரப்பட்டா எப்படி ? கொஞ்சம் பொறுங்கடாக்டர்கிட்டே    விஷயத்தை சொல்லிட்டு வந்துடுறேன்என்று கூறி டாக்டரின் அனுமதி வாங்கி வந்தாள்.

"உள்ளே போங்கம்மாஎன்று சொன்னாள்.

ஏதோ வழக்கமான சிறிய கேஸ் என்று நினைத்தவர் இதயத்தை பிடித்தவாறே கூனிக்குறுகி நடக்கமுடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'இது மிகவும் சீரியசான கேஸ்என்று உடனே செவிலியப் பெணகளை கூப்பிட்டு உடனே .சி ஜி அறைக்கு அழைத்துச்  சென்று செயற்கை சுவாசக் கருவி மற்றும் பல கருவிகளை இணைக்குமாறு உத்தரவிட்டார்
எல்லா ஏற்பாடுகளும் நடந்தாலும் 'ட்ரீட்மென்ட்சரியானபடி கொடுக்காததை கவனித்தான் சுப்பிரமணிஅதை அங்கிருக்கும் செவிலிய பெண்ணிடமே கேட்டுவிட்டான்.
 
"என்ன நர்ஸ் ! அம்மா எப்படியிருக்காங்கஅதைப்பத்தி  பல தடவை கேட்டாலும்  உங்ககிட்டேயிருந்து சரியான படி எந்த ஒரு பதிலும் வரமாட்டேங்குதுஎன்ன தாங்க  நடக்குதுஎன்று ஆதங்கப்பட்டான்.

"உங்கப்பா ஒரு டாக்டரா இருக்கிறதாலே சொல்றேன்இப்போ இருக்கிறாரே அவரு பணம் கொடுத்து படிச்ச டாக்டர்சும்மா மேலோட்டமாத் தான் எல்லாம் பார்ப்பார்அவருக்கு  ஒண்ணும் தெரியாதுஅவங்க அப்பா தான் அணுபவமிக்க டாக்டர்அவரு வந்துட்டே  இருக்கார்அவராலேத் தான் இந்த கேஸை நல்லாப் பார்க்க முடியும்என்று மிகப் பெரிய குண்டைத் தூக்கிபோட்டாள்.
 
"என்னம்மாஇவ்வளவு அலட்சியமா பதில் சொல்றீங்கஇப்போ என்னோட அம்மாவின்   நிலைமை எப்படி இருக்குஅதையாவது சொல்லுங்கஎன்று கெஞ்சினான்.

"அவங்க நிலைமை கொஞ்சம் மோசமாத் தான் இருக்குநாடித்துடிப்பு கொஞ்சம்  கொஞ்சமா குறைஞ்சுட்டே வருதுஅதனாலே பெரிய டாக்டர் வந்தாத் தான் நிலைமை தெரியும்என்று மீண்டும் அவனை துடிக்க வைத்தாள்

மீண்டும் அவன் அப்பாவிடம் தொடர்பு கொண்டான்இந்த முறை அவர் பேசினார்உடனே   நடந்ததை  மடமடவென்று ஒப்பித்தான்.

"அப்படியாஅடக் கடவுளேநீங்க போன கிளினிக் சரியானது தான்அது என்னோட   நண்பனோட கிளினிக்அவருக்கு உங்கம்மாவைப் பத்தி நல்லாத் தெரியும்நான் எப்படியும் பறந்து வரப்பார்க்கிறேன்இப்போ யாரு அங்கே இருக்காங்க"

"அப்பா , அவரோட பையனாம் !"
 
"அடக் கடவுளேஅவன் பேருக்குத் தான் டாக்டர்அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாதே. அதுவும் இந்த மாதிரி அவசர கேஸை எப்படிப் பார்ப்பான்அம்மாவுக்கு நாடித் துடிப்பு  குறைஞ்சிட்டே வருதுன்னு வேற சொல்றேஉடனே சீக்கிரம் பெரிய டாக்டரை வர  வைக்கிறேன்என்று மறு முனையில் ஏது செய்வதறியாமல் சற்று திக்குமுக்காடிப்  போனார்.

சற்று நேரத்தில் பெரிய டாக்டர் வந்து விட்டார்

நீ தான் சுப்பிரமணியாஉங்கப்பா எல்லாமே  சொல்லிட்டார்என்னான்னு பார்த்துட்டு  என்னாலே  முடிஞ்சளவு பெஸ்ட் ட்ரீட்மென்ட்   கொடுக்கிறேன் " என்று அவசரம் அவசரமாகச் சொல்லிவிட்டு அவன் அம்மா இருக்கும் அறைக்குச் சென்றார்

செவிலியர் சிலர் வருவதும் போவதுமாக  இருந்தனர்உள்ளே அவன் அம்மா எப்படி  இருக்கிறார்என்று துளி கூட சொல்லாமல் கல்லாக நடந்து கொண்டனர்நேரம் ஆக ஆக  சுப்பிரமணிக்கு நாடித்துடிப்பு அதிகமாகியது.

நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்த பெரிய டாக்டர்," கொஞ்சம் என்னோட வாப்பாஎன்று மெல்லிய குரலில் அழைத்தார்.

"உட்காருங்கஉங்கம்மா அபாய கட்டத்தைத் தாண்டிட்டாங்கஇப்ப அவங்க ஆல் ரைட்! இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்கம்மாவை நீங்க பார்க்கலாம் !" என்று ஆறுதல்  சொன்னார்

"சார்என்ன சொல்றீங்கஅபாய கட்டமா?" கொஞ்சம் புரியம்படியா சொல்லுங்க டாக்டர்   என்று நச்சரித்தான்.

"உன்கிட்டே சொல்றது என்னநான் வர்றதுக்கு முன்னாலே என்னோட பையன்  அவசரத்திலே உங்கமாவுக்கு சரியான இன்ஜெக்சனை சற்று கூடுதல் டோசேஜ்  கொடுத்திட்டான்அதனாலே இதயத்தின் துடிப்பு குறையா ஆரம்பிடுச்சிநல்லவேளை  சரியான நேரத்திலே வந்து உங்கம்மாவைக் காப்பாத்திட்டேன்!என்று அமைதியாக  சொல்லிமுடித்தார்.
 
"ஆமாம் சுப்பிரமணி ! நீ எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேஉங்கப்பா உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கனும்னு ஆசை படுகிறார்உன்னோட அபிப்பிராயம் எப்படி?" என்று ஆவலோடு கேட்டார்.

"அங்கிள்எனக்கு ஒண்ணு மட்டும் புரியலேஒரு டாக்டர் மகன் கட்டாயம் டாக்டர்  ஆகணுமாஒரு அரசியல்வாதி மகன் கட்டாயமா அரசியலுக்கு வரணுமாஇல்லே ஒரு  நடிகரின் மகன் சிறந்த நடிகனாக வரமுடியுமா?" என்று அடுக்கிக் கொண்டே போனான்.

"அப்படி ஒண்ணும் கட்டாயம் கிடையாதுஅப்படி சொல்றவங்க முழு சுயநலவாதிங்க! தன்னோட தொழில் விட்டு விட்டுப் போயிடக் கூடாதுன்னு  நினைக்கிறவங்கமேலும் அவங்க தொழிலையே கவனிக்கிறதாலே மேற்கொண்டு புதுசா எந்த வசதியும் செய்யத் தேவையில்லைஎடுத்தவுடனே சம்பாதிக்கலாம்ஏற்கனவே  இருக்கிற தொழிலாக இருக்கிறதனாலே வாடிக்கையாளர்களை தேடி அலைய வேண்டிய அவசியமில்லைஅப்பாவோட பேரை வைச்சே காலத்தை ஒப்பேத்தி விடலாம்நல்ல  இடத்திலே நிறைய வரதட்சணையோடு கல்யாணமும் நடக்கும்அது இருக்கட்டும். உன்னோட எண்ணம் எதுன்னு சொல்லலையே?" என்று மீண்டும் நினைவுபடுத்தினார்.

"எனக்கும் உண்மையிலே டாக்டர் பண்ணனும்னு   தான்   ஆசை.  ஆனா   இந்த மெடிக்கல் டாக்டர் கிடையாதுஅறிவியல் துறையிலே படிச்சு ஆராய்ச்சு செஞ்சு இதய  நோய்க்குப் புதுசா மலிவு விலையிலே பல மருந்துகளை கண்டுபிடிச்சு  சமுதாயத்துக்கு கொடுக்கணும்அது நான் என்னோட இலட்சியம் !" என்று அப்போது தான் தன் மனதில் இருக்கும் ஆசையினை முதல் முறையாக வெளிப்படுத்தினான்.

"குட் திங்கிங் சுப்பிரமணிஎனக்கு உன்னோட குறிக்கோள் ரொம்ப பிடிச்சிருக்குஅதைவிட உன்னோட  தன்னம்பிக்கையை நினைச்சு ரொம்ப பெருமைபடுறேன்அதோட  விடாமுயற்சியும் , கடின உழைப்பும் செய்கட்டாயம் நீ நினைத்ததை சாதிப்பாய்எங்கே, என்னோட பையனை போல தனக்குப் பிடிக்காத டாக்டர் தொழிலை நான் வம்படியா  எடுத்துக்கச் சொன்னது போல நீயும் உனக்குப் பிடிக்காத உங்கப்பாவோட டாக்டர்  தொழிலுக்கு வர்றதுக்கு ஆசைபடுகிறாயோன்னு நினைச்சுட்டேன்என்னோட  அபிப்பிராயம் அப்படி ஒண்ணும் செஞ்சுடாதேஏன்னா என்னோட பையனும் உன்னைப்  போல அறிவியல் படிச்சு நல்ல ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கனும்னு ஆசைபட்டான். அதுக்கு இடம் கொடுக்காம அதிக பணம் கொடுத்து அவனுக்கு பிடிக்காத எனது தொழில் வாரிசா இந்த டாக்டருக்கு படிக்க வைச்சேன்அது எனக்கு தினமும் ஒரு தொல்லையா  இருக்குதினமும் எனக்கும் அவனுக்கும் சண்டை தான்எப்பவும் தீராது போல இருக்கு. அதனாலே உனக்கு பிடிச்சதை நீ செஞ்சா உனக்கு எப்போதும் மகிழ்ச்சி தான்.  ஆல்  பெஸ்ட்என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னால் வரை அவனுக்கு டாக்டர் கனவு இருந்ததுஆனால்   மற்ற தொழில் போல இந்த டாக்டர் தொழில் அவ்வளவு எளிதில்லை என்று இப்போது தான் நன்றாக உணர்ந்தான்இது மனிதர்களின் உயிரோடு சம்பந்தப்பட்டவைகொஞ்சம் கவனம் தவறினால் உயிருக்கு ஆபத்தாய் முடிந்துவிடும்ஒரு வேலை நானும் என் அப்பாவின்   ஆசைப்படி டாக்டர் ஆகி இதுபோல் ஒருவனது அம்மா துடிதுடிக்க வந்தால் நானும் இதைப்போல பார்த்துக் கொண்டிருக்க நேரும்அல்லது தவறான ட்ரீட்மென்ட் தர நேரும்அப்போதுஅவர்களுடைய   உயிர்   உத்தரவாதம் ?  போன   உயிர்   திருப்பி   வாங்க   முடியுமா?  என்ன  தான் பணம் கொடுத்து படித்தாலும் ஆசைஆர்வம்திறமைஅறிவு இருந்தால் தான்சிறந்த அனுபவம் பெற முடியும்டாக்டர் தொழிலைப் பொருத்தமட்டில் அதை  பணத்திற்காக விற்க விற்க பின்னால் மனித சமுதாயம் பல தொல்லைகளைச் சந்திக்க  நேரும்இதை கண்டிப்பாக அப்பாவிடம் சொல்லி அவரை எப்படியும் சம்மதிக்க வைக்க   வேண்டும் என்கிற முடிவோடு இருந்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


No comments:

Post a Comment