Pages

Monday, 20 February 2017

உலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)

உலகத் தாய்மொழிகளைக் காக்க 
வல்லக் கருவி (UMASK)

ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் நாள் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த தினத்தை முன்னிட்டு உலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK) என்கிற எனது நூலை வெளியிட உள்ளேன். அனைவரும் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதன் சில பகுதிகள் உங்களுக்காக இதோ... 





இது கணினி மற்றும் மின்னனு உலகம்.
எல்லாம் கணினி மயமாகிக் கொண்டு வருவதால் கணினிக் கல்வி மிக முக்கியம்.





Ó 2015 UMASK மென்பலகை பயன்படுத்தும் விதம்
கணினியை 'ஆன்' (ON) செய்தவுடன்  இந்த Ó 2015 UMASK மென்பலகை இவ்வாறு தோன்றும்.


பிறகு 'To Start…'  என்கிற 'அம்புக்குறி'யை அதன் திசையில் தொட்டு இழுக்க வேண்டும்.
தொடுதிரையில் கீழ்கண்டவாறுத் தோன்றும்.


பிறகு தொடுதிரையில் இவ்வாறு தோன்றும்.


அதன் பிறகு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியை 'கிளிக்' செய்தால் அதற்குரிய  Ó 2015 UMASK  மென்பலகை தோன்றும்.

எடுத்துக்காட்டாக 'தமிழ்' என்பதை  'கிளிக்' செய்தாக வைத்துக் கொள்வோம். திரை இவ்வாறாக மாறும். அதாவது ஒவ்வொரு திரையும் ஒரு முகமூடி போல நமக்குத் தோன்றும்


இப்போது UMASK மென்பலகையைப் பாருங்கள். ஆங்கிலக் கணினி விசைப்பலகையை விட மிக மிக எளிதாகத் தெரிகின்றதல்லவா! உலக மக்கள் யார் வேண்டுமானாலும் தமிழ்மொழி கற்கலாம். தொடு அச்சும் செய்யலாம்.  

எழுதிப் பழக உதவிடும் © 2015 UMASK மென்பலகை


1.  சிறுவர்கள் தங்கள் மொழி எழுத்துகளை எழுதிப் பழக மிகவும் உதவியாக இருக்கும். அதாவது '' தொடு அச்சைத் தொட்டவுடன் திரையில் '' என்கிற உச்சரிப்புடன் எழுத்தும் தோன்றும். அதோடு ஒரு 'கை' யானது '' எப்படி எழுதுவது? என்று மெல்லச் சொல்லித் தரும். அடுத்து '' என்கிற எழுத்து லேசாக நிழல் போல் (letter shadow) வரும். அந்த எழுத்தின் மேலேயே பல வண்ணங்களைக் (Paint) கை விரலைத் தொட்டு எழுதிப் பழகலாம் (முன்பு மணலில் எழுதிப் பழகியதுபோல). தாள், பேனா, பென்சில் போன்றவைகள் வேண்டியதில்லை.
2. ஒவ்வொரு எழுத்தும் தொடும்போது அந்த எழுத்தை  மென்பலகையானது உச்சரிக்கும்.
3. ஒவ்வொரு 'கீ' க்கும் ஒரு வண்ணம் கொடுக்கலாம். அதன் மூலம் எழுத்துகளை அடையாளம் காணலாம்.
4. ஒவ்வொரு 'கீ' க்கும் ஒரு உருவம் அல்லது படம் கொடுக்கலாம்.  
5. அகரவரிசையில் எழுத்துகள் இருப்பதால் குழப்பமில்லாமல் மொழியைக் கற்கலாம்.
6. இவ்வசதிகள் இருப்பதால் எந்த மொழியையும் எளிதாகக் கற்கலாம்.
7. எந்த மொழி எழுத்தும் நேரடியாகத் தெரிவதால் தொடு அச்சு செய்வதற்கும், மொழியைப் பழகுவற்கும் எளிதாக இருக்கும் அல்லவா


அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan - SSA)


செல்வங்களில் அழியாத செல்வம் 'கல்விச் செல்வம்'. அத்தகைய கல்வி அறிவை அனைவருக்கும் அளிப்பதே இந்த SSA இன் குறிக்கோள். இது நாள் வரை இருந்து வரும் ஒருவரது குறைந்தபட்ச கல்வி அறிவின் (literacy) அளவுகோல் என்னவென்றால் அவரது பெயரை ஏதாவது ஒரு மொழியில் எழுதத் தெரிந்தாலே போதும் என்பதே. இது தவிர அதே மொழியில்  அவர்களால் ஒரு வரி கூட எழுதத் தெரியாது. உண்மையில் அத்தகையவர்களை கல்வியறிவு உடையவர்கள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? அதன் அடிப்படையில்தான் ஒரு மாநிலத்தின் கல்வியறிவு சதவீதம் (%) புள்ளிவிவரத்தை அறிவிக்கிறார்கள். அதற்கு முழுமுதற் காரணம், அவர்களுக்கு எழுதுவது என்பது கடினமான செயல்என்று எண்ணுவதே. அதை எளிமையாக்கித் தந்தால் யார்தான் கல்வியறிவு இல்லாமல் இருப்பார்கள்? அதாவது எந்த எழுத்து வேண்டுமோ UMASK இல் உள்ள அந்த எழுத்தைப் பார்த்து கைவிரலால் மெதுவாக அழுத்தினால் திரையில் விழுந்துவிடும். அவ்வளவுதான். சான்றாக '' என்கிற எழுத்து வேண்டுமென்றால் UMASK இல் உள்ள தமிழ்மொழி மென்பலகையில் உள்ள '' என்கிற எழுத்தைப் பார்த்து அழுத்தினால் போதும். இப்படியே ஒவ்வொரு எழுத்தையும் பார்த்துப் பார்த்து அழுத்தினாலே போதும்



அனைத்து குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் தரமான அடிப்படைக் கல்வி வழங்கும் உலகளாவிய ஈடுபாட்டுடன் இந்த SSA இயக்கம் உறுதி மேற்கொள்கிறது. இந்த SSA, தன் இலக்கை அடைவதற்கு அரசுகள், தனியார் துறை, வளர்ச்சி பெற்ற அமைப்புகள் (Development Agencies), பொதுச் சமூகம் (Civil society) ஆகியவைகளும் சேர்ந்து ஈடுபட்டுள்ளன. இந்த இயக்கம் வெற்றிகரமாகச் செயல்பட இந்த UMASK அடித்தளமாகவும், பக்க பலமாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை


  
உலகத் தாய்மொழி தினம் (International Mother Language Day)

1952 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள். அன்று பிரிவு இல்லாத கிழக்குப் பாகிசுத்தானில் உள்ள இரண்டு மொழிகளில் ஒன்றான 'வங்காள (Bangla)' மொழியை  அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று டாக்காவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னரே 'கிழக்குப் பாகிசுத்தான்' (East Pakistan) உதயமானது.

அச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான், உலக மக்களின் அனைத்து மொழிகளையும் அழியாமல் பாதுகாக்கவும், மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த உலகத் தாய்மொழி தினம். அதனால் 1999 ஆம் ஆண்டு இந்த நாளை உலகம் முழுவதும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO – United Nations Education, Scientific and Cultural Organisation) பொது மாநாட்டில் அறிவிப்பு வெளியிட்டது



மொழி என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி என்பதை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் இந்த நாளை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாடி வருகின்றனர்அதாவது உலகத் தாய்மொழிகளை மதிப்பதற்கும், அதன் அருமை பெருமைகளை எல்லோரும் அறிவதற்காகவும் கொண்டாடி வரும் தினமாகும். அத்தகைய பழமையும் மரியாதையும் கொண்ட தாய்மொழியைத் தவறாமல் எல்லோரும் போற்ற வேண்டும். உலகத் தாய்மொழிகளின் மதிப்பை எள்ளளவும் குறையாமல் காக்கவே தகுதியில் சிறந்ததாக வந்துள்ளது இந்த Ó 2015 UMASK மென்பலகை










*********************************




1 comment: