Pages

Monday, 17 September 2018

ஒரு பெண்ணும் ஆறு ஆண்களும் (பெண்களுக்காக)ஒரு பெண்ணும் ஆறு ஆண்களும் (பெண்களுக்காக)
சிறுகதை
மதுரை கங்காதரன்
     
"எங்கு மக்கள் சிறு தவறு  செய்வதற்குக்கூட  தயங்கும்படியானச் சட்டமும்  அதிகாரமும் இல்லாமல் இருக்கின்றதோமுக்கியத் தீர்ப்புகளைப் காலாகாலத்தில் தராமல்  இழுத்தடிக்கும் நீதிமன்றங்கள்  இருக்கின்றதோ அங்கு  நீதிநேர்மைதர்மம்நியாயம்ஒழுக்கம்நிம்மதி  ஆகியவை எப்போதும் கேள்விக்குறியாகவே  இருக்கும்

'சாதனாஎன்றப் பெண்தன்னைப் பலாத்காரம் செய்ய முயன்ற ஆறுபேரைக் கைத்துப்பாக்கியால்  குருவி சுடுவதைப்போல் சுட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கும் நாள் அன்றுதான்.

அச்சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகள் உருவாக்கியதோடு பல கட்சித்  தலைவர்களையும்தலைவிகளையும்சமூகஆர்வலர்களையும்பொதுமக்களையும் ஒருவித  மாறுபட்ட தீர்ப்போடு எதிர்பார்த்துக் காத்திருக்கவும் செய்திருந்தது. நிற்க...

சில தினங்களுக்கு முன்னால் 'பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை எவ்வாறு தடுக்கலாம்?' என்பது பற்றி விழிப்புணர்வு கொடுத்த பெண் சமூகஆர்வலர் ஒருவரின் விவாதத்துக்குரிய கண்டனத்துக்குரிய காரசாரமான பேட்டி கொடுத்ததன் செயல் வடிவம்தான் இந்த வழக்கோ என்று நினைக்கும்படி தோன்றச் செய்திருந்ததுஅவருடைய கருத்துச்செறிவு அனைவரும் பலவாறு விமர்சிக்கும் அளவிற்கு இருந்தது. அந்தப் பேட்டிக்கும்  இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கின்றதா? இல்லையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

"உங்கள் பார்வையில் எதனால் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றதுஎன்ற கேள்வியோடு தொடங்கியது அந்தப் பேட்டி.  

"நானும் ஒரு பெண்இன்றைக்குப் பலபெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எனக்கு நன்றாகத் தெரியும்.  இப்போது இருக்கும் சட்டத்தைப்பற்றிக் குறைச்சொல்ல விரும்பவில்லை. அதனை நடைமுறைப்ப்படுத்துவதில் சிக்கலும், நடவடிக்கை எடுப்பதில் தொய்வு இருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டேத் தீரூவார்கள். சரிஅது ஒருபுறம் இருக்கட்டும்ஆண்டாண்டு காலமாக அகிம்சையை மக்களின் இரத்தத்தில் ஊறச் செய்துவிட்டார்கள்அதுமட்டுமா? 'ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுஎன்பதையும் மக்கள் மனதில் ஆழப்பதித்து- விட்டார்கள்அந்தவகையில் பொறுமையைக் காத்ததால்தான் இன்று சர்வசாதாரணமாகத் திருடர்கள் பயமில்லாமல் கொள்ளையடிப்பதோடு கொலைகளும் செய்யுமளவிற்குத் துணிந்துவிட்டார்கள்போதாக்குறைக்கு தூங்கிவழியும் நீதிமன்றங்கள் வேறு! திருடர்கள் இதுநாள்வரையில் நகைக்காகபணத்திற்காககாதலுக்காகவரதட்சனைக்காககாமப்பசிக்காக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பெண்களைக் கொடுமைகள் செய்துப் பலவழிகளில் கொலைகள் நடந்தேறியச் சம்பவத்திற்குச் சட்டப்படி நீதிமன்றங்கள்எத்தனை பேர்களுக்கு என்னென்ன தண்டனை கொடுத்திருக்கின்றதுதீர்ப்புகள் காலதாமதம் ஆகாக குற்றங்கள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கும்!"

"அடுத்த கேள்விபெண்கள் திருடர்கள்வெறிபிடித்தவர்களிடமிருந்து எந்தவகையில் எளிதாகத் தங்களைக் காத்துக்கொள்ளலாம்?" 

"இன்றைய காலகட்டத்தில் திருடர்கள் எதற்குக் கத்திஅரிவாள்ஆசிட்துப்பாக்கிபலவகைகுண்டுகள் வைத்திருக்கிறார்கள்கொடிய வேலைகளுக்குத்தானேஎந்த ஒரு சாதாரணப் பெண்ணிடமாவது இந்தமாதிரி ஏதாவது இருக்கின்றதாஆனால் பெண்கள் ஆண்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சி மட்டும் பெறவேண்டுமாம்இந்தக்காலத்துக்கு இப்படிப்பட்டப் பயிற்சியெல்லாம் ஒத்துவருமா?  மீறியும் பயிற்சி எடுத்துக்கொள்வதாக இருந்தால் ஆண்களிடத்தில்தான்  செல்லவேண்டும். அத்தகையப் பயிற்சியின்போதே சில ஆண்கள் அவர்களிடம் தகாதமுறையில் நடப்பதோடு அவர்களைக் கொடுமை செய்யும் சம்பவங்கள் நாடெங்கும் சிலஇடங்களில் மெளணமாய் நடந்துகொண்டிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஏன் கல்விவிளையாட்டுக் கூடங்களில் உட்படஅத்தகைய நிகழ்வுகளைச் சிலர் கைபேசியில் படமெடுத்து அவர்களை மிரட்டுதோடு பலத்தொல்லைகளும் தருவதை பல ஊடகங்கள் வெளிச்சம்போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கின்றதுஆகவே பெண்களுக்குத் தற்காப்புப்பயிற்சியைவிட அவர்களின் பெண்மையைக் பாதுகாத்துக் கொள்ளச்  சிறியரகக் கைத்துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம் என்கிற சட்டம் வந்தால்தான் நாட்டில் பாலியல் வன்முறைகற்பழிப்புபாலியல் கொடுமைசெயின் பறிப்பதுதனிமையில் இருக்கும் பெண்களைத் தாக்கிக் கொலைசெய்யும் நிகழ்வுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்!"

"கடைசியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கலாம்?"

"பல சிங்கங்கள் ஒருமானை வேட்டையாடி ருசித்துக் கொல்லுமாம்ஆனால் சட்டமோ அவர்களை விடுதலை செய்யுமாம் அல்லது சொற்ப தண்டனை கொடுக்குமாம் ஏனென்றால் சாட்சி இல்லையாம்அத்தகையச் சாட்சிகளை மிரட்டி அழிப்பதும் அவர்கள்தானேமேலும் அவர்கள் பணக்கார இனமாக இருந்தால் சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவடுவதும் அல்லது தீர்ப்பு தராமல் இழுத்தடிக்கும் வேலைதானே நடக்கிறது. சமீபகாலமாக அவ்வாறு அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றதுஇனிமேலும் இத்தகைய அநியாயங்கள் நிகழாமல் இருக்கவேண்டுமானால்சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவேண்டுமானால் கட்டாயம் பெண்களுக்கு கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையைச் சட்டமாக்க வேண்டும்பாரதி இன்றிருந்தால்..
தற்காப்பு பயிற்சிமட்டும் போதாது பாப்பா
துப்பாக்கி பயிற்சியும் வேண்டும் பாப்பா"
இவ்வாறு தனது கருத்துகளைப் இப்பேட்டியின் மூலம் பதிவு செய்திருந்தார் அந்தப் பெண் சமூகஆர்வலர்.

நீதிமன்றம் முன்னெப்போதும் கண்டிராதவழக்கமான வழக்கிற்குச் சற்று மாறாக இந்த வழக்கை விசாரணை செய்துகொண்டிருந்தைக் கண்ட அனைவருக்கும் சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.

"உங்கள் பெயர் … ?" என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தனது விசாரணையைத் தொடங்கினார்.
குற்றவாளிக் கூண்டில் இருந்தவள் "சாதனாஎன்று பதிலளித்தாள்அவள் கண்களில் பிரகாசமும்உடம்பெல்லாம் பூரிப்பும் இருப்பதைப் பார்க்கின்றபோது இக்கொலைச் சம்பவம் அவளுக்குப் பயத்தைத் தருவதற்குப் பதிலாக ஆத்மதிருப்தி அடைந்தவளாக இருந்தாள்

"அவர்களைச் சுட்டது நீதானா?" என்று குறுக்குவிசாரணையை ஆரம்பித்தார் வழக்கறிஞர்.

"ஆம்நான்தான் சுட்டேன்!" என்றுத் துணிவோடு ஆணித்தரமாகச் சொன்ன பதில் நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

"ஏன் அவர்களைச் சுட்டுக் கொலைசெய்தாய்?"

"என்னை அவர்கள் கொடுமைப்படுத்திப் பலாத்காரம் செய்யப்பார்த்தார்கள். அதற்குள் சுதாரித்து என்னிடத்தில் இருந்த துப்பாக்கியால் அவர்களைச் சுட்டு தகுந்தநேரத்தில் அவர்களிடமிருந்து என் பெண்மையைக் காத்துக்கொண்டேன்"

"என்ன இருந்தாலும் சட்டத்தை உன் கையில் எடுத்துக்கொண்டுஅவர்களுக்கு ஒரேநேரத்தில் நீ ஏதேச்சையாக இத்தகையக் கொடூரமான மரணதண்டனை கொடுத்தது தவறுஎன்று சட்டத்தைப்பற்றி வழக்கறிஞர் எடுத்துச் சொன்னார்

"அப்படியாஒருவேளை நான் அவ்வாறு செய்திருக்காவிடில் அவர்கள் என்னை அணுவணுவாக பாலியல் துன்புறுத்தல் செய்து என்னை உயிரோடு கொளுத்தியிருந்தால் அது உங்கள் சட்டத்திற்கு திருப்தியாய் இருந்திருக்கும் அப்படித்தானேஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய துன்பங்கள் சந்தித்தாலும் பரவாயில்லைஏன்கொலையே செய்யப்பட்டாலும் சட்டத்திற்கு அதுபற்றிக் கவலையில்லைகுற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் சாகவிடக்கூடாதுமுக்கியமாக செல்வாக்குள்ள குற்றவாளிகள் சாகும் நிலையில் இருந்தால்கூட எப்படியாவது அரும்பாடுபட்டு பிழைக்கச்செய்வதோடு அவர்களை ஏதோ ஒருவகையில் விடுவித்து மென்மேலும் குற்றத்தைக் கூட்டுவதுதான் சட்டத்தின் நோக்கமாஎங்கே ஒரேஒரு வழக்குமட்டும் உள்ளக் குற்றவாளி நாட்டில் ஒருவராவது இருக்கின்றனராகாரணம் ஒரு தீர்ப்புச் சொல்லுவதற்குள் அக்குற்றவாளி பல குற்றங்கள் செய்துமுடித்திருப்பார்அதில் நகைப்புக்குரிய ஏமாற்று விசயங்கள் எவைகளென்றால்ஒரு குற்றவாளிக்கு 'சாகும்வரையில் தூக்குத்தண்டனைஇரட்டை ஆயுள்தண்டனைதருவதுஎல்லாவற்றிற்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள்தான் காரணம்!" என்று வழக்கறிஞரின் கேள்விக்குச் சூடுவைத்தது பதிலளித்தாள் சாதனா

"எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனை நீதிமன்றம்தான் கொடுக்கவேண்டும்பாதிக்கப்பட்டவர் கொடுக்கவேக் கூடாதுஏனென்றால் அவர்கள் கொடுக்கும் தண்டனை சுயநலத்திற்காகவும்தனிப்பட்டக் காரணத்திற்காகவும் இருக்கலாமல்லவா?"  என்று வழக்கறிஞர் தனது வாதத்தை வெளிப்படுத்தினார்.

"அதுவும் உண்மைதான்ஆனால் ஒன்று நிச்சயம்பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்டத்தை அறிந்தவர்களாகவோஅறிவாளியாகவோகல்வியறிவுஞாபகச்சக்தி உள்ளவர்களாகநடந்த சம்பவத்தைக் கோர்வையாக எடுத்துச்சொல்ல முடியாதவர்களாக இருக்கலாம்அப்படியிருக்கும்போது எவ்வாறு சட்டம் அவர்களுக்கு நீதிநியாயம் கொடுக்க இயலும்தன்னைக் காத்துக்கொள்ளுவதையே இந்த நீதிமன்றம் குற்றம் என்றுசொல்வது வேடிக்கையாக இருக்கிறது"

"அதற்குத்தான் குற்றவாளிக்கு உதவிசெய்ய வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்குற்றவழக்கை நன்கு விசாரித்து தண்டனை கொடுக்க சட்டம் இருக்கிறதுஅதை நிறைவேற்ற நீதிபதிகள் இருக்கிறார்கள்!"     

"ஆகா... நல்ல விசாரணைநல்ல தண்டனைவாய்தா கொடுத்தே பழகிப்போன நீதிபதிகள்ஒரே குற்றவாளிக்கு ஒரு நீதிமன்றத்தில் விடுதலைமற்றொரு நீதிமன்றத்தில் தண்டனைஇதுவா சட்டம்இதுவா நீதியின் இலட்சணம்தங்களின் வாழ்நாள் முழுவதும் நீதிநேர்மைக்காக அலைந்து ஓய்ந்து தங்களிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் துறந்து  நீதிமன்றத்தை வெறுக்குமளவிற்கு அல்லது மறக்கும் நிலைமையில் அல்லவா வசதியில்லாதப் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்கண்களைக்கட்டியுள்ள நீதிதேவதையின் கையில் தராசு இருப்பதன் அர்த்தம்பாதிக்கப்பட்டவர் பக்கத்தட்டில் உயிர் பலி அல்லது பொருளிழப்பு!   மறுபக்கத்தட்டில் சொற்ப தண்டனை அதுவும் காலம் கடந்தபிறகுஅல்லது சாட்சியம் இல்லாததால் விடுதலைஅதாவது இழப்பும் இறப்பும் ஒருபக்கம்.  மறுபக்கத்தில் விடுதலையும் தண்டனையும்இதுதானா உங்களது 'சட்டம் என்பது அனைவருக்கும் சமம்என்பதன் அர்த்தம்ஒரு பெண்பலியானால் அந்த குடும்பமே பலியாவதற்குச் சமம்அவ்வாறு பலியான குடும்பத்தின் வாரிசு இந்த சட்டத்தால் திருப்பித்தர முடியுமாஅல்லது அந்தக் குடும்பத்தைச் சட்டம்தான் காப்பாற்றுமா?"

"சட்டத்தில் மக்களே குற்றவாளியைத் தண்டிப்பதற்கு இடமில்லை!"

"அப்படியென்றால் குற்றம் செய்வதற்கு மட்டும் சட்டத்தில் இடமிருக்கு அப்படித்தானேஆமையைப்போல் செயல்படும் சட்டமும்குற்றங்களைச் செய்யத் தூண்டும் சட்டமும் சமுதாயத்தில் இருந்தால் மக்களால் நிம்மதியாய் வாழமுடியுமா?" என்று ஆணியடித்தாற்போல் நச்சென்று பதில் சொன்னாள் சாதனா

"ஒருவன் குற்றம் செய்வதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம்அதை நீதிமன்றம்தான் வாதிபிரதிவாதி என்று இருதரப்பினர்களின் வாதத்தை ஏற்று அதில் எத்தரப்பில் உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து  அறிந்து சட்டப்படிதான் தீர்ப்பு சொல்லமுடியும்என்று நீதிபதியும் சட்டநடைமுறையினை மீண்டும் எடுத்துரைத்தார்

"நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகள் காலதாமதம் ஆவதால்தான் பல குற்றவாளிகள் சுதந்திரமாக வெளிவந்துப் பல தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்எங்கேஇதுநாள் வரை நீங்கள் கொடுத்தத் தீர்ப்புகளால் குற்றங்கள் குறைந்திருக்கின்றனவாமாறாக உங்களது இழுத்தடித்துக் கொடுக்கும் தீர்ப்புகளால் குற்றங்கள் அதிகமாகின்றதே தவிர குறைவதாகத் தெரியவில்லைஎன்று சவால்விட்டாள் சாதனா.

"இப்படிப்பேசுவதால் நீங்கள் செய்த கொலைகள் நியாயப்படுத்த முடியாதுஎன்று பதிலளித்தார் வழக்கறிஞர்.

"ஆதாரம் வைத்துக்கொண்டு எந்தக் குற்றமும் நடைபெறுவது கிடையாது அல்லது குற்றம் நடக்குப்போது உடனே யாருக்கும் எந்தத் தகவலும் சரியாக அளிக்கவும் முடியாதுஎன் வழக்கை எடுத்துக்கொண்டால் குற்றம் நடக்கும் இடத்தில் இருந்தது நான் மட்டும்! என்னைத் தாக்க வந்தவர்கள் ஆறுபேர்அந்தவேளையில் நான்தான் என்னைக் காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைதைரியத்தை வரவழைத்து என்னைக் காத்துக்கொள்ளத் துணிவோடுச் சட்டத்தை என்கையில் எடுத்துக்கொண்டேன்அதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆறுபேரையும் என்னிடத்தில் இருந்தக் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றேன்என்னைப் பலாத்காரம் செய்யத் துணிந்த அந்த ஆறுபேரும் இறந்ததிற்காக நீதிமன்றம்  என்னமோ அவர்களைத் தியாகிகள்போல்  பரிதாப்படுகின்றதுஅவர்கள் பொறுக்கிகள்பெண்களைத் துன்புறுத்துவதேத் தொழிலாகக்கொண்ட அயோக்கியர்கள்!  ஒருவேளை நான் அந்த ஆறுபேர்களால் பலாத்காரம் செய்து துன்புறுத்தி கொல்லப்பட்டிருந்தால் இந்த நீதிமன்றமோ காவல்துறையோ என்மீது அனுதாபப்பட்டிருக்குமாஇருக்கின்ற ஒரேசாட்சியும் இறந்துவிட்டால் நீதிமன்றத்துக்கும்காவல்துறைக்கும் ஏது வேலைஅப்படிப்பட்டச் சூழ்நிலையில் அத்தகையக் குற்றவாளிகளுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்இன்னும் சொல்லப்போனால் அத்தகையச் சம்பவம் நடந்ததையே மறைத்திருப்பார்கள்என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் சாதனா

"அவர்கள் பொறுக்கிகள்அயோகியர்கள் என்று எப்படிச் சொல்கிறாய்இதற்குமுன் இவர்களைத் தெரியுமா?"

"நன்றாகத் தெரியும்இரண்டு மாதத்திற்கு முன்பு என் அக்காள் இதே ஆறு பேர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாள்நல்லவேளையாக இதோ இந்த இன்ஸ்பெக்டரின் கடமை உணர்வால் அன்று நடக்கவிருந்த விபரீதம் தடுக்கப்பட்டதுஎன்று ஒரு திருப்புமுனையாக அவள் பேசியபோது நீதிமன்றமே சற்று அதிர்ந்தது

சாதனா கைகாட்டிய அந்த இன்ஸ்பெக்டரை உடனே விசாரிக்க உத்தரவிட்டார் நீதிபதி.

"இந்தப் பெண் சொல்வது சரிதானா?" என்று வழக்கறிஞர் இன்ஸ்பெக்டரிடம் வழக்கமானக் கேள்வியிலிருந்து ஆரம்பித்தார்.

"ஆம். இவள் சொல்வது உண்மைதான்இரண்டு மாதத்திற்கு முன் நான் ரோந்து பணியில் ஈடுபட்டியிருந்தபோது ஒரு வீட்டிற்கு முன்னே எப்போதுமில்லாமல் விலையுயர்ந்த ஆறு மோட்டார் பைக்குகள் நின்றிருப்பதைப் பார்த்தேன்எனக்கு சந்தேகம் வந்ததுஅப்போதுதான் இவளால் சுடப்பட்ட ஆறுபேர் ஒரு பெண்ணை அதாவது இவளின் அக்காளை துன்புறுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்விரைவாக உள்ளே புகுந்து அப்பெண்ணைக் காப்பாற்றிப் பார்ப்பதற்குள் அந்த ஆறுபேர் தப்பித்துவிட்டார்கள்நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்களைக் காட்டிக்கொடுக்க இவளுடைய அக்கா  முன்வரவில்லை.  காரணம் இந்த சமுதாயத்தைக்  கண்டு பயம்தனக்கு நேர்ந்த அவமானம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று எண்ணியக் காரணத்தினால் காவல்துறையை நாடவில்லை.  ஓர் உண்மை பிறகுதான் தெரிந்ததுசுடப்பட்டவர்கள் இவள் அக்காளை மிரட்டியிருக்கிறார்கள் என்றுமிரட்டலோடு விடவில்லைமீறி காவல்துறைக்குச் சென்றால் இவளையும்இவளின் அக்காவையும் கொன்றுவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்என்று நடந்ததை இன்ஸ்பெக்டர் விவரமாகச் சொன்னார்.

"உனக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்ததுஅந்த விவரம் சொல்வில்லையேஎன்று சாதனாவிடம் கேட்டார் நீதிபதி.

"இந்தத் துப்பாக்கி அந்த ஆறு பேரில் ஒருவனுடையதுதான் இருக்கவேண்டும்அவர்கள் என் அக்காளைப் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது எதிர்பாராதவிதமாக  அங்கு நுழைந்த இந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்த மாத்திரத்தில் அவசரம் அவசரமாக அந்த ஆறுபேர் தப்பிக்கும்போது யாரோ ஒருவன் இந்தத் துப்பாக்கியை அங்கு விட்டுச்சென்றதாக என் அக்காள் என்னிடம் கொடுத்தாள்அவர்களால் எங்களுக்கு எப்போதுவேண்டுமானாலும் ஆபத்து வரலாம்அச்சமயத்தில் இந்தத் துப்பாக்கிப் பயன்படும் என்ற எண்ணத்தில்தான் என் அக்கா கொடுத்த அத்துப்பாக்கியை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லைமேலும் ஒரு பெண்னோட  தற்காப்புக்கு இதைவிடச் சிறந்த ஆயுதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லைநாட்டில் மனிதஉருவத்தில் நடமாடும் கொடியவிலங்குகளை பயமுறுத்தவும் தேவைபட்டால் வேட்டையாடி கொல்லவும் இது பயன்படலாம் என்று நானே வைத்துக்கொண்டேன்என்று நீதிபதியின் சந்தேகத்தை தீர்த்தாள் சாதனாஅதை ஆமோதிக்கும்வண்ணம்   

"இவள் சொல்வது உண்மைதான்அந்தச் சம்பவம் நடந்த மறுநாள் ஒருவன் எனது துப்பாக்கி காணவில்லை என்று புகார் கொடுத்தான்அநேகமாக அவன் அந்த ஆறுபேரில் ஒருவனாக இருந்திருப்பான் என்று நினைக்கிறேன்என்று தனதுதரப்பில் இருக்கும் ஆதாரத்தை விளக்கினார் இன்ஸ்பெக்டர்.

எல்லாவற்றையும் விசாரித்த நீதிபதி தீர்ப்பு சொல்லத் தயாரானார்மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்புசலசலப்பு நிலவியதுசாதனாவின் அக்காள்தான் மிகுந்த துயரத்தோடு இருந்தாள்தன்னால் தன்கூடப் பிறத்தத் தங்கைக்கு இக்கதி ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்து மனம் நொந்தாள்.

ஆர்டர்... ஆர்டர் என்ற குறலுக்கு நீதிமன்றம் அமைதி காத்தது.

"சாதனாஉங்களுடைய தைரியம் மற்றப் பெண்களுக்குப் பாடமாகவும்நீங்கள் ஆறுபேரைச் சுட்டது தவறு செய்பவர்களுக்கு பயத்தையும்தயக்கத்தையும் உண்டாக்கும் என்று நான் நம்புகிறேன். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்றும், 'தன் ஆயுதத்தாலே தனக்குச் சாவுஎன்பதையும் படித்திருக்கிறேன்ஆனால் அதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்உன் அக்காவின் சம்பவத்திலிருந்துத் தப்பித்த இந்த ஆறுபேர் தங்கள் தவறுக்காக வருந்தித் திருந்தியிருந்தாலோ,  சட்டத்தைப்பற்றிய பயம் இருந்திருந்தாலோ அவர்களுக்கு இக்கதி நேர்ந்திருக்காதுஆனால் நீங்கள் சொல்வதுபோல்  சட்டம் பலவீனமாக இருக்கின்ற காரணத்தால்ஒருதடவை தவறானச் செயலில் ஈடுபட்ட அந்த ஆறுபேரைக் காவல்துறை கடுமையாக எச்சரிக்காமல் விட்டதாலும்சாதனாவின் அக்காள் தனக்கு நேர்ந்தகதியை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவராததாலும் இவர்கள் இரண்டாவது முறையாகக் குற்றம் புரிந்து இப்போது அவர்களின் துப்பாக்கியாலே தண்டனையும் பெற்றிருக்கிறார்கள்சட்டம் இவர்களைப் பார்த்து அனுதாபப்படுவதற்குப் பதிலாக உன்னுடைய வீரமானச் செயலைப் பார்த்து பாராட்டுகிறதுபெண்களுக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஏன் தரக்கூடாதுஎன்கிற கேள்வியும் அரசுக்கு முன்வைக்கிறதுஎன்னுடைய இறுதித் தீர்ப்பாக இப்பெண்னின் செயல் நியாயம்தான் என்பதில் சந்தேகமே இல்லை

மேலும் மக்கள் பெருக்கம் அதிகமாகிக்கொண்டே வருகின்றக் காரணத்தினாலும்தொழில்நுட்பம் வளர்கின்ற காரணத்தினாலும் அரசோ,  காவல்துறையோநீதிமன்றமோ நாட்டிலுள்ள எல்லோருக்கும் எம்போதும் முழுமையாகப் பாதுகாப்பு அளிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றுபொதுமக்களே விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும்எல்லோரையும் குருட்டாம்போக்கில் நம்பிவிடக்கூடாது என்றும், வெளுத்ததெல்லாம் பால் என்று இருந்துவிடக்கூடாது என்றும் முடிந்தவரை அவரவர் உயிர்களையும்உடமைகளையும்உறவுகளையும் அவர்களே சிரத்தையுடன் காத்துக்கொள்ளவேண்டும் என்று மக்களுக்குக் கூறிக்கொள்கிறேன்கொள்ளை நடப்பதை எச்சரிக்கும்உயிர்காக்கும் பல தொழில்நுட்பக் கருவிகள் தனியாகவும்கைபேசியிலே குறைந்தவிலையிலும்சிலவகைகள் இலவசமாகவும் கிடைக்கின்றதுமக்கள் அவைகளைப் பயன்படுத்தி தேவையற்ற பிரச்சனைகளையும் குற்றங்களையும் குறைக்க உதவலாம்

அதேநேரத்தில் இதுபோன்ற வழக்குகளைக் காலம்தாழ்த்தாமல் உடனே விசாரித்துத் தீர்ப்பு சொல்லவேண்டும் என்கிற நல்லெண்ணத்தினாலும்முன்மாதிரியாகவும் இருக்கவேண்டும் என்கிற காரணத்திலும்குற்றத்தின் தன்மை நீர்த்துப் போகக்கூடாது என்கிறக் காரணத்தினாலும் இனிமேலும் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளிப்போடாமல் ‘குற்றவாளி’ என்று குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சாதானாவை உடனே விடுதலை செய்யவேண்டும் என்றுத் தீர்ப்பளிக்கிறேன்இந்தத் தீர்ப்பினால் பலகுற்றங்கள் குறையும் என்கிற நம்பிக்கையும்பெண்களை இந்தக் காவல்துறையும்நீதிமன்றமும் மக்களுக்குப் பலவகைகளில் சலிக்காமல் உதவிசெய்யும் நண்பனாக இருந்துக்காக்கும் என்கிற உத்திரவாதமும் மக்களுக்கு நீதிமன்றம் சார்பில் நான் உறுதியும் அளிக்கிறேன்"  

அத்தீர்ப்பு அனைத்துத் தரப்பினர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதை எல்லா ஊடகங்களும் உறுதிசெய்திருந்ததுபெண்கள் புதுமைப்பெண்களாக இருந்தால்மட்டும் போதாதுபுரட்சிப்பெண்னாகவும் மாறவேண்டும்!   

*****************


No comments:

Post a Comment