Pages

Monday, 28 April 2014

89 . THE WAY WHAT DO YOU THINK WILL HAPPEN? - 89. நீங்கள் நினைப்பது நடக்க...

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN

89 . THE WAY WHAT DO YOU THINK WILL HAPPEN?

 

* If you want to think will happen, during your sleeping time you keep a small lovely favorite thing below to your pillow. You will sleep well and you will get the power also. One thing you must always keep in your mind that what do you think should not give any problem to others.  

 

* A thief also behaves good when he is watched by others.'


* During animals were doing lifting work, people were lived in comfort . After the lifting work changed to Machine, people are getting tired.


* People are using 'True events' to write the history. The same if you make a film which will be used for getting awards and for entertainment.  Only few people are getting experience from it.


* The harm , loss , joy , happy are all able to give by close relations only .

Success life steps continues next....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 


89. நீங்கள் நினைப்பது நடக்க... 
 

* நீங்கள் நினைத்தது நடக்கவேண்டுமென்றால் தினமும் தூங்கும்போது உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு சிறிய பொருளை உங்களை தலையணை அடியில் வைத்து தூங்குங்கள். உங்களுக்கு தூக்கம் நன்றாக வரும். நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டும்  சக்தியும் பெறுவீர்கள் . ஒன்று மட்டும் உறுதியாய் இருக்கவேண்டும். அதாவது நீங்கள் நினைப்பது கட்டாயம்  மற்றவர்களுக்கு கஷ்டம், பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும்.

 

* 'நம்மை பிறர் பார்கின்றார்கள்' என்று எண்ணுகிறபோதெல்லாம்  திருடனும்  கூட யோக்கியமாக நடந்துகொள்வான்.  


 
* விலங்குகள் சுமைகள் தூக்கும் காலத்தில் மனிதன் வசதியாய் வாழ்ந்தான். விலங்கின் சுமைகள் இயந்திரத்திற்கு மாறியவுடன் மனிதன்  அசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.


* மனிதர்கள் உண்மை நிகழ்வுகளை சரித்திரம் எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறான். அதுவே திரைப்படமாக கொடுக்கும் போது விருது வாங்குவதற்கும் , ரசிப்பதற்கும் தான் பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு சிலர் மட்டுமே அதை அனுபவப் பாடங்களாக எடுத்துக்கொள்கின்றனர்.


* மனிதனுக்கு ஏற்படும் கஷ்டமும், நஷ்டமும், மகிழ்ச்சியும் , சந்தோசமும் நெருங்கிய உறவுகளால் மட்டுமே கொடுக்க முடியும். 



வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 

பாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்

தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 7


பாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம்

பற்றிய  விளக்கம் 

 






பற்றிய  விளக்கம்  

'புதிய தென்றல்' ஏப்ரல்  2014  மாத இதழில் 

வெளியான பகுதி.

மதுரை கங்காதரன் 

மேலும் ரசிக்க, படிக்க இப்போதே கடையில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.... 








நன்றி .... வணக்கம்.....

########################################

மே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள் - SUCCESS WAYS OF YOUR ORGANIZATION

              மே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்
                                    
             SUCCESS WAYS OF YOUR ORGANIZATION  
                                     புதுக்கவிதை 
                            மதுரை கங்காதரன் 
                         
                                     
இன்று எத்துறையிலும் வெற்றி பெறுவது  கடினமே 
எத்திசையிலும் எண்ணிலடங்காத போட்டிகள்
எளிதில் கணிக்க முடியாத விலையேற்றங்கள் 
கடந்து வந்த பாதையில் தான் எத்தனை முட்கள் 
பூகம்பம் போல் ஆடிய சூறாவளி வீசிய நாட்கள் தான் எத்தனை 
உறுதி கொண்டு அனைத்து இடர்களையும் தாண்டினோம்  

                                                


எங்கள் நிறுவனம் சாதாரண செடியாக இருந்தது அன்று 
கற்பக விருட்சகமாக மாறிவிட்டது இன்று 
வேர்களோ நமது அசராத  அசையாத உழைப்பு 
விழுதுகளோ தாங்கி பிடிக்கும் தொழிலாளர்கள் 
இலைகளோ மகிழ்ச்சி வாழ்வு தரும் விசிறிகள் 
கனிகளோ நமக்கு அனுபவிக்கும் பலன்கள் 
முழு மூச்சாய் உழைக்கும் வரம் 
முதன்மையான உற்பத்தி 
முத்தான தரமே எங்கள் தாரக மந்திரம்.

                              
தொழிற்சாலை தான் எங்கள் குடும்பம் 
நாங்கள் அதில் ஓர் அங்கம் 
எங்களுக்குள் இன வேறுபாடுகள் உண்டு 
ஆயினும் எங்களுக்குள் ஒருமித்த கருத்தே உண்டு 
எங்கள் முன்னேற்றமே இதற்குச் சான்று 
அனைவரும் நண்பர்களாய் பழகிடுவோம் 
நட்புக்கு இலக்கணமாய் நடந்திடுவோம் 
உற்பத்திக்கு உறுதுணையாய் இருந்திடுவோம் 
உற்பத்தித்திறனை பெருக்க பாடுபடுவோம்.

                                  

பாதுகாப்பின் மேல் அக்கறை உள்ளோம் 
அது தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக 
தொழிலாளர்களின் மேல் அக்கறை உள்ளோம் 
அவர்களின் குடும்ப மகிழ்ச்சிக்காக 
சுற்றுப்புற சூழலின் மேல் அக்கறை உள்ளோம் 
அது பூமி மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக 
தொழிலின் மேல் அக்கறை உள்ளோம் 
அது நாட்டின் முன்னேற்றத்திற்கா 

                                 

நேர்மையாய் நடப்போம் 
சத்தியமாய் இருப்போம் 
உண்மையாய் உழைப்போம் 
நிச்சயமாய் பலன் அடைவோம்  
இதுவரை செய்திட்ட சாதனைகள் சாதாரணம் 
இன்னும் உள்ளதோ ஏராளம் 
முடியுமா? என்று கேள்விக்குறியாய் 
வளைந்து விடமாட்டோம் !
முடியும்! என்று நிமிந்து நிற்ப்போம் 
அதை ஆச்சரியக்குறியாய் மாற்றிடுவோம்

             

ஓங்கிய கைகள் ஓயாது 
எழுச்சி நடை பிசகாது 
இலட்சியப் பயணம் மாறாது 
நன்கு உழைப்போம் ! மென்மேலும் உயர்வோம் !

                             
உழைத்து உயர்ந்தவன் 
எந்நாளும் வீழ்ந்ததில்லை !
###########################################################        

உன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு-LIFE INSURANCE CHANGE YOUR FATE

உன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு
               
LIFE INSURANCE CHANGE YOUR FATE
 
புதுக்கவிதை
 
மதுரை கங்காதரன்

   

ஆயுள் காப்பீடு செய்த மனிதனின்
 
ஆயுள் முடிந்தாலும் ஆயிரம் பொன்னுக்குச் சமம்
ஆயுள் இருந்தாலும் ஆயிரம் பொன்னுச் சமம்
 
மனிதனின் ஜனனம் பத்து மாதத்தில் !
காற்றையும் மிஞ்சுவது காலத்தின் வேகம் 
 
பருவங்கள் மாறும் வேகத்தில் உருவமும் மாறுகிறது 
கண் இமைக்கும் நேரத்தில் எட்டிப் பிடிக்கும் வயோதிகம் 
 
அந்நாட்களை சமாளிக்கும் வழி தெரியாத தவிப்பு 
எப்போது நிற்கும் என்று சொல்ல இயலாத உயிர் துடிப்பு 
 
நெருங்கிய உறவும் உதவிக்கு வராத கொடுமை  
தினமும் வாட்டியெடுக்கும் தனிமை ஒரு பக்கம்
 
உணவுக்கே கேள்விக்குறியாய் இருக்கும் நேரம் 
நோயின் மருத்துவச் செலவுக்கு எங்கே போவது ?

        
'தீ' என்றால் 'நா' வந்துவிடாது 
'மரணம்' என்றால் வந்துவிடாது 
 
எமனுக்கு இருக்கும் வினோதமான பசி 
தினமும் உயிர்களை எடுக்கும் அகோரப் பசி 
 
அதிலும் மனிதனின் உயிரை தினமும் ருசிக்க 
எவ்வளவு உயிர்களைக் குடித்தாலும் அடங்காத பசி
 
பூமியில் பிறந்த மனிதன் என்றாவது ஒருநாள் 
எமனிடம் சென்றே தீரவேண்டும் 
 
பிறந்த நாள் தெரிந்த மனிதனுக்கு 
தான் இறக்கும் நாள் தெரிவதில்லை 
 
மனிதனின் பிறப்பே ஒரு வழிப் பாதை 
புனிதமான புதிரான புதுமையான பாதை

            
பிறக்கும்போது ஒட்டிக்கொண்ட  உயிர்
இறந்த பிறகு மீண்டும் ஒட்டுவதில்லை
 
உயிரை பிரிக்கத்  தான் எத்தனை எத்தனை வழிகள்
எமனும் விதியும் மனிதனை ஆட்டிப் படைக்கும் சக்திகள் 
 
உடலில் பலவித நோய்கள் கொடுப்பது
காரணம் தெரியாமல் நோயின் பிடியில் சிக்குவது  
 
சற்றும் எதிர்பாராத விதி நடத்தும் விபத்து
அஜாக்கிரதையால் நடைபெறும் கொலையும் கூட   
 
முதுமையில் தானாக முடியும் வாழ்க்கை  
தானே முடித்துக் கொள்ளும் தற்கொலை
   
மரணத்தில் ஆணென்ன பெண்ணென்ன
குழந்தையென்ன குட்டியென்ன
 
ஏழையென்ன பணக்காரனென்ன
எல்லோருமே ஒன்று தான் 
 
இப்படி எமன் உயிரை எடுக்கும் கொடூரமான உலகில்
எப்படி அமைதியும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது

              

விதியை மாற்றும் சக்தி உன்னிடம் உண்டு 
மரணம் தரும் எமனை வெல்லும் ஆற்றல் உனக்குண்டு  
 
நீ உயிரோடு இருக்கும்போது
நீ உனது குடும்பத்தை காத்திடுவாய்
 
நீ எதிர்பாராது இறந்துவிட்டால்
உன் குடும்பத்திற்கு துணையிருப்பது யாரோ?
 
உன் அன்பு செல்வங்கள் எங்கு செல்வார்கள்?
பொருள் இல்லாமல் அவர்கள் உயிர்வாழ முடியுமா?
 
கை நிறைய சம்பாதித்த நாட்களை நினைக்கும்
காப்பீடு ஏன்? செய்துகொள்ளவில்லை என்று எண்ணும் !
 
சராசரியான மனிதனின் இயற்கையான விதி 
வரும் முன்  கவலைகொள்வதில்லை 
          
வந்த பின் அனுபவிக்கத் தவறுவதும் இல்லை 
இனி உன் மதியால் எமனையும் விதியையும் துரத்து 
 
ஆயுள் காப்பீடு இன்றைக்கே துவங்கி விடு 
நீயும் செழிப்பாய் உன் குடும்பமும் செழிக்கும் 
     
ஆயுள் காப்பீடும் ஒருவகை சேமிப்பே !
உன் மகிழ்ச்சி இனி எப்போதும் தடையிருக்காது 
 
இது பொழுது போக்கு கவிதை அல்ல 
உன் மகிழ்ச்சி வாழ்க்கைக்கு வழிகாட்டும் திசைகாட்டி !
 
இனிமேல் உனக்கு எமனைப் பற்றிக் கவலையில்லை
விதியை நினைத்து பயமில்லை

         
குடும்பம் மீது அக்கறை உள்ளவர்கள் எவரும்
ஆயுள் காப்பீடு செய்து கொள்ளத் தவறுவதில்லை!
 
உன் முன்னோர்கள் சொல்லாததை தெரிந்துகொள்
வருமுன் குடும்பத்தைக் காத்துக் கொள் !

             
 
 குறிப்பு: நான் ஆயுள் காப்பீடு முகவர் இல்லை
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&