19.5.14 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம், மதுரை
அவர்களால் ஏற்பாடு செய்திருந்த
ஆய்வரங்கம் - கவியரங்கம்
(ஒவ்வொரு மாதம் மூன்றாம் ஞாயிறு நடைபெறும் )
நிகழ்ச்சியில் நான் பாடிய புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
தமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது ?
ஒன்று அழிவததை கண்ணால் தெரிந்தால் அதைக் காப்பாற்றிவிடலாம் !
அழிவது கண்ணுக்குகே தெரியாது போனால் அதனை காக்க முடியுமா?
மனிதன் அழிவை காக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள்
அவர்களால் மனிதனின் ஆயுள் உயர்ந்தது ஓரளவுக்கு !
தமிழ் மொழியின் அழிவைக் காக்க அறிஞர்கள் பலர் உள்ளார்
இருந்தும் ஏனோ தமிழ் மொழி அழிவை நோக்கி போகிறது !
கற்காலம் மாறி இன்று எல்லாமே கணினி மயமாகிவிட்டது
காகிதங்களில் படிப்பது குறைந்து கணினியில் படிக்கும் காலம்
தமிழ் மொழியில் அந்நிய மொழி கலப்பிற்கே 'ஐயகோ' என்கிறது மனம் !
இன்றைய இளைஞர்கள் தமிழையே ஆங்கிலத்தில் எழுதுவதை மனம் ஏற்குமா?
கணினியில் கைபேசியில் தமிழ் வளர்க்க இலட்சியம் கொண்டேன்
முதலாவதாக இணையதளத்தில் நுழைந்தேன் .
வலைதளத்தில் தமிழில் என் எண்ணங்களை நவரசத்தில் பிரதிபலித்தேன்
எளிதில் உலக நாட்டு மக்களிடம் சென்றடைவதை கண்டு மகிழ்ந்தேன்
இரண்டாவதாக கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது கடினமாக உணர்ந்தேன்
எளியமுறையில் கணினியில் தமிழ் தட்டச்சு உருவாக்கினேன்
தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல உலகளவில் பலரின் உதவி நாடினேன்
ஆஸ்திரேலியாவின் கம்பன் மென்னியம் உதவிக்கரம் நீட்டியுள்ளது
விரைவில் என் எளிய கணினி தமிழ் தட்டச்சு மலரும்
என் கனவு வெற்றி பெற்றால் கணினியில் கைபேசியில் தமிழ் வளரும் !
அதனால் தமிழ்மொழி காக்கப்படும் ! இது உறுதி!!
நீங்களும் என் எளிய கணினி தமிழ் தட்டச்சு பரப்பிட உதவவேண்டும்
நன்றி, வணக்கம் !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ @@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment