Pages

Saturday, 15 November 2014

WORLD IS A PRISON - உலகம் ஒரு சிறைச்சாலை

உலகம் ஒரு சிறைச்சாலை
WORLD IS A PRISON
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்



உலகம் ஒரு நாடக மேடை
அது பழைய சிந்தனை!
உலகம் ஒரு சிறைச்சாலை
இது புதிய சிந்தனை!

 

பணமே நீதிபதி                                                       
அனைவருக்கும் ஒரே தீர்ப்பு
நல்லவரானாலும் சரி
தீயவனானாலும் சரி

 
வஞ்சகனானாலும் சரி
வல்லவனானாலும் சரி
பரதேசியானானாலும் சரி
பராக்கிரமனானாலும் சரி

அனைவருக்கும் ஒரே தீர்ப்பு
மாற்றமில்லா தீர்ப்பு
இரக்கமில்லா தீர்ப்பு
மரண தண்டனை தீர்ப்பு
 
நிறைவேறும் காலம் வெவ்வேறு
பணக்காரர்களுக்கு பல சலுகைகள்
ஏழைகளுக்கு கெடுபிடி சட்டங்கள்
பதவியில் இருப்பவர்களுக்கு சொர்க்கம்  

பஞ்சத்தில் உழல்பவனுக்கு நரகம்
உழைப்பாளிகளுக்கு வேர்வைக் குளியல்
முதலாளிகளுக்கு பன்னீர் குளியல்
முடியாதவர்களுக்கு சாம்பல் குளியல்
 
மனிதன் படைத்த பணம்
ஆட்டுவிக்கும் அரக்கன்
பணமில்லாதவர் மருமகளாம்!
பணமுள்ளவரோ மாமியாராம்!

வாழ்வது கட்டாயம் எல்லோருக்கும்
வயது ஏற ஏற தேயும் வாழ்வு
இயற்கையான மரணம் இனிமை
நோய், பிணி, கொலை மரணமோ கொடுமை! 
 
உறவும் சுற்றம் நிறைந்தது
நட்பும் எதிரியும் சூழ்ந்தது
பொய் பித்தலாட்டம் கலந்தது
உண்மையும் நேர்மையும் இல்லாதது

அச்சறுத்தும் அலைகள் எழும்
நடுங்க வைக்கும் நிலநடுக்கம் !
மனிதர்களை புதைக்கும் பூகம்பம்!
கக்கும் எரிமலையும் உண்டு.
 
வறட்சியினால் வாடச் செய்யும்
வெள்ளத்தினால் மூழ்கச் செய்யும்
ஆயிரம் லட்சம் இருந்தாலும்
உலக வாழ்வு சிறையானாலும் சுகமே!

 **************************************************************************


No comments:

Post a Comment