Pages

Wednesday, 9 December 2015

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை ?


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை ?

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ் பேச தடுமாறும் தமிழர்களின் நாவில்
தமிழை பிறமொழி சொல் கலவாமல்
சிங்கமாக நின்று தமிழ் பரப்பி
மங்காத பெருமையினை தமிழ்த்தாயே தருவாயாக!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை ?

புதுக்கவிதை கடலில் மூழ்கி
பாரதி படைத்தார் முத்தான கவிதைகள்
பதிலுக்கு சத்தான தமிழ்சொற்களால் பிறசொற்களை
பொசுக்கிடுவோம் தீப்பொறிக் கவிதைகள் படைத்து

பாதி கிணறு தாண்டினாலும் பாதாளம்
பாதி தமிழ் பேசினாலும் சேதாரம்
தனித்தமிழே தமிழனுக்கு ஆதாரம்
தவறினால் ஏறிடுமே வேதாளம்

பசுஞ்சோலை தமிழ்மொழி இருக்க
பாலைவனத்திற்கு ஆசைபடுவதா?
மழைநீராய் தமிழ் சொற்கள் இருக்க
கடல்நீருக்கு ஆசைப்படுவதா?

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால்
பிறப்பது தமிழ் மொழியாகுமோ!
அமிழ்தமுடன் நஞ்சு கலந்தால்
அமிழ்தமென பருகுவோரோ?

மணமுள்ள பூக்களில் காகிதப்பூ மணக்குமா?
மங்கலராகத்தில் அமங்கலத்தை பாடலாகுமா?
அறுசுவை தமிழிருக்க பிறசுவை சுவைக்குமா?
அருந்தவத் தமிழில் பிறமொழிச் சொற்கள் இனிக்குமா?

தமிழ் சொற்களோ முத்துக்கள்
தமிழர்களுக்கு அதுவே சொத்து
வேண்டாமே பிறமொழிக் கலப்பு
வேண்டுமே தனித்தமிழ் ஒலிப்பு!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



2 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. கருத்து மிகச் சரியானது. அதைக் கவிதையாய்த் தந்திருப்பதும் இனிமை. ஆனால் சந்திப் பிழைகள் மலிந்திருப்பதைத் தவிர்த்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

    ReplyDelete