புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
125 ஆம் ஆண்டுக் கவியரங்கம்
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
நாள்: 27.03.2016 இடம்: மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை-1.
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் மொழி தமிழர்களிடம் தங்கிட
தங்கிய தமிழை இமைபோல் காத்திட
காத்திட்ட தமிழை தரணியில் கலந்திட
கலந்திட்ட தமிழ் வாழ, தாயே வாழ்த்துவாயே!
தலைப்பு : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
பாலைனத்தில் சோலை அழகு
பாரதிதாசன் கவிதைகளோ அமுது
ஆதி பெயரோ சுப்புரத்தினம்
ஆழ் தமிழுக்கு நவரத்தினம்
பாரதியின்
பிரதிபலிப்பாம் பாரதிதாசன்
புரட்சிக்
கவிதைகளுக்கு ஆசான்
மிடுக்கும்
துடிப்பும்
நிறைந்த பாவரிகள்
மிளிரும்
துளிரும் பூக்கின்ற கவிதைகள்
இருதுருவங்களான அரசியலும் இலக்கியமும்
இருகை
கொண்டு இன்பமாய் அணைத்தவர்
தமிழை இருதயத்தில்
வைத்தவர்
தமிழ் உணர்வை உதிரத்தில் கலந்தவர்.
மக்களுக்குள்ளே
சாதி வெறி ஒழித்திட
வேண்டும்
மங்கையர் வாழ்வும் வளமும் பெருகிட வேண்டும்
மறுமண உரிமை கைம்பெண்ணுக்கு அளித்திட
வேண்டும்
மறுமலர்ச்சி சமுதாயத்திற்கு இடியாய்
முழங்கியவர்.
இளைஞர்களே! வாழ்க்கையை
கைபேசியில் தொலைத்திடாதே
இந்நாளில்
கிட்டும் வாய்ப்புகளை இழந்து
வாடாதே
பாவேந்தர் காட்டிய வழியினை தவறாது
பின்பற்று
புதுமைகீதம்
பாடி புரட்சிப்
பாதையில் வெற்றி நடை போடு.
வாழ்க தமிழ் !
வளர்க தமிழ் !
வெல்க தமிழ் !
நன்றி , வணக்கம்.
########################################################
No comments:
Post a Comment