17.7.16
காமராசர்
பிறந்தநாள் விழாக் கவிதைப் போட்டி
தலைப்பு :தமிழ் எழுத்தால் முடியாதா?
தனித்தொலித்தால் விடியாதா?
புதுக்கவிதை
மதுரை
கங்காதரன்
புதுமை எங்கும் எதிலும்
வேண்டுமாம்!
பழமை அழிந்தாலும் மறந்தாலும்
பரவாயில்லையாம்!
தமிழ்மொழி
வாழ்ந்தால் உன் அடையாளம் தங்கும்
தமிழ்மொழி அழிந்தால்
உன் சரித்திரம் முடியும்.
முட்டாளின் சபையில் அறிவாளிகள் முட்டாளாகலாமா?
முனையிலா அந்நியமொழியை தமிழில் திணிக்கலாமா?
முத்தமிழின் படைப்புகளைப் படித்துப் பார்ப்பாய்
முப்பாலின் சிறப்பை இனிமையை அறிவாய்
மூளை எடை கூட மண்டையில் மசாலா சேர்ப்பார்களா?
முதன்மைத் தமிழில் வடமொழி எழுத்துகளை சேர்க்கலாமா?
மாங்கனி இனிப்பில் கசப்புச்சுவை இருக்கின்றதா?
முத்தான தனித்தமிழ் தேனொலியில் பிறமொழி ஒலிக்கலாமா?
புதுசொற்கள் உருவாக்க தமிழில் இல்லாத எழுத்துகளா?
புதிதாய் ஒட்டிடும் வடமொழி எழுத்துகள் தேவைதானா?
ஆண்மையான தமிழை அடிமாடாய் ஆக்கிவிடாதே
அன்னைக்கு இணையான தமிழை ஆயாவாக்காதே.
தெரியாதவர்கள் புரியாதவர்கள் அரைகுறை தமிழை பேசட்டும்
அறிந்தவர்கள் அறிஞர்கள் பிறமொழி கலந்து பேசலாமா?
நாகரீக மோகத்தில் அந்நியமொழியை கலந்து பேசினால்
நரகத்திற்குத் தள்ளபடும் தமிழ் பேசும் தமிழர்களின் இனம்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !! வெல்க தமிழ் !!!
*******************************
No comments:
Post a Comment