Pages

Saturday, 1 July 2017

எனது நூல் - 'உலகத் தாய்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு'

கிடைக்குமிடம்: 

KNK ராம்குமார்  / KK கங்காதரன் 
95, புதுமண்டபம் (கிழக்கு)
நந்தி / ஏழுகடல் தெரு எதிரில் 
மதுரை - 625001, தமிழ்நாடு, இந்தியா.

மொபைல் : 9865642333 .

உலக மக்கள் அனைவருக்கும் 
எனது முதல் வணக்கம்.
கு.கி.கங்காதரன் 
(மதுரை கங்காதரன்)


'உலகத் தாய்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு' என்றத் தலைப்புள்ள எனது முதல் நூல், கணினியை இயக்கத் தயங்குபவர்களுக்கும், கணினி பற்றி அறியாதவர்களுக்கும், கணினியை வெறுப்பவர்களுக்கும், நன்றாகக் கணினி அறிவு உள்ளவர்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாக, எளிதாக விளக்கும் நூல். உங்கள் நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் கணினி எவ்வாறு ஒரு நண்பனாக துணைபுரியும் என்பதை விளக்கும் நூல். உங்கள் வாழ்வினை ஆக்கப்பூர்வமாக மாற்றும் நூல். 

நம் உலகம் கணினிமயமாகிக் கொண்டு வருகின்றது. கணினி நம்வாழ்வில் கிட்டத்தட்ட ஐக்கியமாகிவிட்டது என்றே சொல்லவேண்டும். அதனால் உங்களுக்குக் கணினி அறிவு கட்டாயம் இருக்கவேண்டும். ஏற்கனவே ஒரு மொழியில் கணினி அறிவு இருப்பவர்கள் பிறமொழிகளை எளிதாகப் பயில எனது நூல் மிகவும் உபயோகமாக இருக்கும். வரும்காலத்தில் கணினி அறிவு இல்லாதவர்கள் 'கைநாட்டு' என்னும் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்கள் தாய்மொழியையும் இன்னும்பிற மொழிகளையும் வயது வரம்பு இல்லாமல் (சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை) எளிதாகக் கணினியில் கற்க, கற்பிக்க, தொடுஅச்சு செய்ய, எழுதிப்பழக எனது நூல் பாலமாக இருந்து உதவிசெய்யும் வல்லமை கொண்டது.

மேலும் உலகத்தில் பலமொழிகள் அழிந்துகொண்டு வருகின்றது. அம்மொழிகளைக் காக்கவும், அழிந்த மொழிகளை புத்துயிர் கொடுக்கவும் எப்படி? என்பதை விளக்குகிறது எனது நூல்.  உலக மொழிகளைக் காக்க வேண்டுமென்றால் அம்மொழிகள் அனைத்தும் கணினி விசைப்பலகையில் இருக்கவேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் கணினி விசைப்பலகையில் இருக்கும் மொழி எழுத்துக்கள், நாம் பள்ளியில் பயில்வதுபோல் அகரவரிசையில் இருக்கவேண்டும் என்றும், அதோடு இப்போது இருக்கும் விசைப்பலகை தொடுதிரை வடிவில் இருக்கவேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறேன்.

அதனை வாங்கிப் படித்து கணினி அறிவு பெற்று உங்களது வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்பது எனது விருப்பம். 

நூலின் அமைப்பை இப்போது பார்க்கலாம்.

முன் அட்டை 





முதல் பக்கம் 





பின் அட்டை 



நன்றி , வணக்கம்.

குறிப்பு: நூல் வேண்டுவோர் எனது மின்னஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன். ரூபாய் 150/= மட்டும்.
gangadharan.kk2012@gmail.com 
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

###############



No comments:

Post a Comment