15.4.2018 கவி உலா கவிதை நிகழ்வு - திருமங்கலம் - மதுரை - மின்படங்கள்
அன்று நான் வாசித்த கவிதை ... இதோ ...
சித்திரையே, செந்தமிழே வாழி!
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழே உயிராகி இருக்கும்
தமிழே மூச்சாகி ஓடும்
தமிழே உருவாகி நிற்கும்
தமிழ்த்தாயை வணங்குகிறேன்.
சித்திரையே, செந்தமிழே வாழி!
சித்திரை மாதப் பிறப்பு
முத்திரைத் தமிழர் சிறப்பு
கவிஞர் பலரின் பதிப்பு
காணுமே தமிழின் மரபு
பாடல்கள் யாவும்
பட்டொளி தெறித்து
வைரமாய் மின்னுதே
வைகைத் தமிழில்.
எத்திசையும் புகழ் பரப்பி
எங்கெங்கும் மணம் வீசி
தரணியில் தன்மானம் காத்து
தமிழரை உயர்த்துமே தமிழ்.
இளமைத் தென்றல் கைவீசி
இதயத்தில் இனிமைப் பூசிக்
கொட்டுகின்ற நீர் அருவியாகிக்
கடலாய் விரியுமே தமிழ்.
தள்ளாடும் தனித்தமிழ்
தாங்குமே இக்கவியரங்கம்
வண்டாடும் சோலைகள்
வண்ணமாய் விளங்குமே.
செம்மொழியின் சிறப்பு
செழுமையின் விரிப்பு
கற்றோரின் களிப்பு
காலமெல்லாம் இனிப்பு.
நாவில் நற்றமிழ்
நடையில் பைந்தமிழ்
உன்னத வளர்தமிழ்
உயருமே செந்தமிழ்.
*********
***********************
No comments:
Post a Comment