HOUSTON UNIVERSITY - TAMIL CHAIR -
NEED 42 CRORES -
ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 42 கோடி
நிகழ்ச்சியின் தொகுப்பு - மின்படங்கள் - மின்சுருள்
#ஹூஸ்டன்தமிழ்இருக்கை#
அமைப்போம்
கலந்தாய்வு
கூட்டம் 29.12.2018
************************************************
இன்று
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புலம் வ.சுப.மாணிக்கனார் அரங்கில் #பேரா.#கு.#ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை கலந்தாய்வு கூட்டம்
நடைபெற்றது-, இதில் #நானும் கலந்து கொள்ளும்
ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது...
இதில்
அமெரிக்க நாசா விஞ்ஞானி முனைவர் #ந.#கணேசன் அவர்கள் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து
விளக்கினார்...
நிகழ்ச்சியில்
தமிழிசை ஆய்வாளர் திரு.#மம்மது அவர்கள் தொடக்கவுரை
நிகழ்த்தினார்....
நிகழ்ச்சியில்
ஊஸ்டன் தமிழ் இருக்கைக்கு அதிமாக பொருளுதவி நல்கிய திரு. #காலடுவேல் , ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய அடித்தளம்
இட்ட அய்யா ஞானசம்பந்தன், மாமதுரை கவிஞர் பேரவை தலைவர் அய்யா
#வீரபாண்டியத்தென்னவன், மற்றும் கவிஞர்கள்,
தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில்
சிவகங்கை மவுண்ட் லிடெரா பள்ளி தாளாளர் திரு.பாலசுப்பிரமணியன்
அவர்கள ₹50000/- வழங்கினார்...
இன்னும்
பலரும் தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
நிகழ்ச்சியில் மதுரை காமராசர் பல்கலைத் தமிழியற்புலத்தின் தலைவர் திரு.போ .#சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரை நல்கினார்
இச்சிறப்பு
வாய்ந்த தொடக்கம் வெற்றி பெற தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கைகொடுத்தல்
நலம்...
#கனவு #மெய்ப்படவேண்டும்...
தேமதுரத்
தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்குவோம் .
"இல்லையெனும் சொல் நீக்கி
இயன்றவரை
பொருள்வழங்கி...
துள்ளித்
தமிழ்வளர...
துணை
நிற்போம் வா தமிழா ....
நன்றி
அன்புத்தமிழன்
கவிஞர் சித்தார்த்பாண்டியன்
மாமதுரைக் கவிஞர்
பேரவை
நன்றி
No comments:
Post a Comment