மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்
மாமதுரைக் கவிஞர் பேரவையின்
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவனார்
தலைமையில் நடந்த கவியரங்கம் -
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்...
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்...
முன்னிலை செயலர் கவிஞர் இரா.இரவி.
நாள் 29.12.2019.படங்கள்
புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் மற்றும்
கு.கி.கங்காதரன் அவர்களின் கை வண்ணம்
அன்று நான் வாசித்தக் கவிதை
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம்
வேண்டும்
கு.கி.கங்காதரன் 9865642333
இருகை தட்டினால் ஓசை எழுந்துவரும்
இருமொழியில் பயிற்றுமொழி அறிவை வழங்கிவரும்
வலதுகையை தமிழாக வைத்துக்கொள்வோம்
இடதுகையை ஆங்கிலமாய் ஏற்றுக்கொள்வோம்
இரண்டும் நமதானால் இயக்கம் நமைக்காக்கும்
இல்லை என்றால் இழப்பு நமைக்கெடுக்கும்
கம்பகாதை திருக்குறளே தமிழின் கதியாகும்
கவித்தமிழை ஆங்கிலத்தை பயிற்றுமொழியாய்க்
கற்றால்தான் தமிழினத்தின் விதிமாறும்
சும்மா இருந்தால் தமிழின் சுதந்திரமே பறிபோகும்
தமிழ்மொழியைக் கற்காத கூட்டம் பெருகிவிடும்
அமிழ்தத்தின் அடையாளம் அழிந்துவிடும்.
கதிரவனுக்கு பகையாக நிலவு நின்றிடுமா?
கடலுக்குப் பகையாய்க் கரைகள் மாறிடுமா?
தங்கத்திற்குப் பகையாய்ச் செம்பு சிரித்திடுமா?
தமிழுக்குப் பகையாய் ஆங்கிலம் எழுந்திடுமா?
தமிழ்வழியில் பயிற்றுமொழிச் சட்டம் வந்தால்
தமிழ்வளர்ச்சி ஆங்கிலத்தைத் தாண்டிச் செல்லும்.
காட்சி காண இரண்டு கண்கள் தேவை
கடந்து செல்ல இரண்டு கால்கள் தேவை
கற்றுக்கொள்ள இரண்டு மொழிகள் தேவை
கம்பர் இரண்டு மொழிகள் கற்கவில்லையா?
காலத்தை வென்றிங்கே நிற்கவில்லையா?
கற்றுக்கொள் தமிழா பயிற்றுமொழியாய்த் தமிழையுமே.
மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய மின்படத்தொகுப்பிற்கு
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
நன்றி
No comments:
Post a Comment