Pages

Wednesday 19 February 2020

மக்கள்தொகை கட்டுப்படுத்திடும் வழிகள் - கட்டுரை - மதுரை கங்காதரன்


மக்கள்தொகை கட்டுப்படுத்திடும் வழிகள்
கட்டுரை  
மதுரை கங்காதரன் 
    ஒரு மரத்தில் காய்க்கும் கனியின் அளவு, அளவுக்கு மேல் பெரிதாக இருந்தால் மரத்திற்கும் கனிக்கும் தான் ஆபத்து. அதாவது மா மரத்தில் பலா அளவுக்கு மாங்கனி இருந்தால் மரம் தாங்குமா?  அதுபோல ஒரு நாட்டில் மக்கள் தொகை அந்நாட்டின் பொருளாதாரம், வளங்கள் பொறுத்து இருந்தால் அந்நாடு நலமாக இருக்கும். 

     அதேவேளையில் எவ்வளவு செல்வம் இருந்தாலும், வசதிகள் இருந்தாலும் மக்கள்பேறு இல்லாத குடும்பம் தழைக்காது. அதுபோல ஒரு நாட்டில் எவ்வளவு வளங்கள் இருந்தாலும் மனிதவளம் இல்லாத அந்நாடு நீண்ட காலம் நிலைக்காது. ஆள அனுபவிக்க மனிதவளம் கட்டாயம் வேண்டும். இந்தியா, மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு. அதுவும் உலகிலே அதிக இளைஞர்கள் உள்ள நாடும் நமதே. அதை மனிதில் கொண்டு ஒரு கவிஞர் (. மருதகாசி) எழுதுகிறார்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
 ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
             உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் - படம் விவசாயி 
அதாவது இந்நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப வளங்கள் கொட்டிக் கிடக்கின்றது. அதை முறைப்படி பயன்படுத்தினாலே நம்நாடு வல்லரசு ஆகவும் நல்லரசு ஆகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.  

      அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அது அமுதத்திற்கு மட்டுமல்ல.  அது மக்கள் தொகைக்கும் கூட பொருந்தும்.   கட்டுப்பாடு   இழந்த    வண்டி    அதிக  ஆபத்தைத்    தரும்அளவுக்கு மீறிய மக்கள் தொகை, ஆபத்தையும் கொடுக்கும். அளவான குடும்பம் வளமான வாழ்வு கொடுக்கும். அளவான மக்கள்தொகை நிறைவான ஆயுளையும் மகிச்சியையும் கொடுக்கும்
குடும்பத்தில் கட்டுப்பாடு 
வாழ்க்கைக்கு நல்ல புறப்பாடு 
அதுவே நீக்கும் பலத் தட்டுப்பாடு. 
உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

   சென்ற 16 பிப்ரவரி 2020 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகையானது 7.844 பில்லியன் ஆகும். அதாவது 784 கோடியாகும்.

   இது உலகத்தின் சனத்தொகை பெரிதும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. மேலும் 1700 ஆம் ஆண்டுக்கு பின் தொழிற்புரட்சியில் ஏற்பட்ட வேகம் மக்கள்தொகை வளர்ச்சியின் வேகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக்கியது. குறிப்பாக 1960 முதல் 1995 வரை ஏற்பட்ட பசுமை புரட்சியின் விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம், பால் வளம் பெருக்க வெண்மைப் புரட்சி,  மற்றும் மருத்துவத்துறை வளர்ச்சிகள் போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் மேலும் அதிக வேகமடைந்தது. 2055 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டி விடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள்தொகை பிரிவு 2007 ஆம் ஆண்டு கணக்கிட்டு நம்மை எச்சரிக்கின்றது.

    எதிர்காலத்தில், உலக மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது அதன் உச்சத்தை அடையும் என்றும், பின்னர் பொருளாதார காரணங்கள், உடல்நல குறைபாடுகள், நிலப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்பாகவே உலக மக்கள்தொகையானது அதிகமாவது நின்றுபோவதற்கு ஏறத்தாழ 85% வாய்ப்புள்ளது. அதன் தொடக்கமாகவோ என்னவோ சீனாவில் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் அதாவது கோவிட் 19 என்னும் உயிர் கொல்லி, இன்று உலகத்தை அச்சுறுத்தி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.

         ஒரு பக்கம் மக்கள் தொகை பெருக்கம் இருந்தாலும் நோய் தாக்கம், பூகம்பம், வெள்ளம், சுனாமி, விபத்துகள், தீவிரவாதம், பஞ்சம் போன்றவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு நம்மை அதிகமாகவே சிந்திக்க வைப்பது என்னவோ உண்மை. அது மட்டுமா? மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம். சுருங்கச் சொன்னால் எவ்வளவுக்கெவ்வளவு மக்கள்தொகை பெருக்கத்தால் நன்மை இருக்கின்றதோ அந்த அளவுக்கு தீமையும் உள்ளது. ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாம் விதி உண்மை தானோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதாவது ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சம்மாக எதிர்செயல் இருக்கும் என்பதே.

      அளவான குடும்பம் வளமான வாழ்வு தரும் என்கிற வரிகளின் படி குடுப்பக் கட்டுப்பாடு கடைப்படிப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றுகுடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு கொடுக்க இந்தியாவில் "சிவப்பு முக்கோணம்" முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தை போதும் என்பதே. அப்போதும் மக்கள்தொகை குறையாத காரணதத்தால் "ஆசைக்கு ஒரு குழந்தை, ஆஸ்திக்கு ஒரு குழந்தை" என்று விளம்பரம் செய்யப்பட்டது. அதுவும் பலன் தராத காரணத்தால் பிறகு "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" என்று மாறி, இப்போது "நாமே இருவர் நமக்கேன் ஒருவர்" என்கிற நிலைக்கு வந்துவிட்டது.   

      அதற்கு இளம் வயத்தில் மணமுடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை சட்டத்தினால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்த நினைத்தால் அதிக ஆபத்தில் முடியும். அதற்கு வரலாறே சாட்சி. சீனாவில் ஒரு சட்டம் போடப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு சில வருடங்கள் கடைபிடிக்க வேண்டும என்று. அதற்கான பலன், இன்று அதிக வயதுள்ள மக்கள் உலகளவில் அங்கு தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் குறைவாக இருப்பதால் அதன் பொருளாதார வளர்ச்சி சற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. ஆகவே  எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது.

          ஒருபக்கம் மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருக்கம். ஆனால் இங்கு... உலகின் மிகச்சிறிய நாடாக தவோலாரா என்னும் தீவு உள்ளது. இங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையே வெறும் 11 தான் ஆகும்.
இத்தாலியின் சர்டானியா அருகே மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு வெறும 5 கிலோ மீட்டர் மட்டும்தான்.
இந்த குட்டி கிங்டம்மின் கிங் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம்.
எளிமையான அரசர் எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை எளிதாக பார்த்து விடலாம் என்கின்றனர் மக்கள். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர்.
சாதாரண கால்சட்டை சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் இந்த ராஜா, சுற்றுலாப் பயணிகளின் படகு சவாரிக்காக படகோட்டியாகவும் உள்ளார். தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருந்தாலும் அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியம் குறித்து பெருமைப்படுகிறார்.

           நிறைவாக மக்களுக்குப் பலன் கொடுக்காமல் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. அதாவது குடும்பக்கட்டுப்பாடு உள்ள குடும்பத்திற்கு பல சிறப்புச் சலுகைகள் கொடுத்தால் ஓரளவிற்கு வெற்றி பெறலாம்.
* தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உயர் படிப்பு வரை இலவச கல்வி 
* பேருந்து, இரயில், மற்றும் விமான பயணச் சலுகை 
* அஞ்சல் நிலையம் மற்றும் வங்கிகளில் சேமிப்புக்கு அதிக வட்டி 
* குறிப்பிட்ட சதவீகிதம் அரசு வேலையில் முன்னுரிமை 
* போட்டித் தேர்வில் கட்டணச் சலுகை 
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைத்துவித நோய்களுக்கு சிறப்புச் சலுகை 
* தேர்தலில் போட்டிபோடும் தொகுதியில் ஒதுக்கீடு
* விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் முற்றிலும் இலவசம் 
* வீட்டுவசதி, நகை, வாகனக் கடனில் குறைந்த வட்டி 
* திருமணம் முடிக்காதவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் 

ஆக மக்கள்தொகை அதிகரிப்பது நம்மை நாமே குழிதோண்டி புதைத்துக் கொள்வதற்குச் சமம். அதற்கான நடைமுறைகளைத் திட்டமிட்டு துரிதமாகச் செயல்படுத்தினால் தான் வருங்கால் மக்கள் சமுதாயம் சண்டை சச்சரவுகள் இல்லாத இனிமையான வாழ்க்கை வாழும் சூழல் இருக்கும். அதனை கருத்தில் கொண்டு இன்றே தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.

      கட்டுப்படுத்துவோம் மக்கள் தொகையினை 
கை கொடுப்போம் அதன் செயலினை 
 விட்டுக்கொடுப்போம் நம் வளங்களை 
 வாழவைப்போம் நம் சந்ததியினைரை..

நன்றி         
  
  


No comments:

Post a Comment