Book Reading Meditation (BRM)ன் சில விவரங்களும் குறிப்புகளும்
மதுரை கங்காதரன்
ஆன்மீக விஷயங்களில் தெளிவு பெறவும், சந்தேகங்களைப் போக்கவும், அதில் ஒருபடி முன்னேறவும்தான் இந்த (BRM) சென்ற வருடம் அக்டோபர் மாதம் 20ம் தேதியில் சிறிய குழுவோடு தொடங்கினோம். அதாவது ஒரு ஆன்மீக புத்தகத்தை ஒரு குழுவோடு படித்து அதில் எழும் சந்தேகங்களை விசாரணையின் மூலம் கடவுளை (உண்மையை) அறிவதே முக்கிய நோக்கம்.
அதற்காக PHD SIVA (USA) அவர்கள் எழுதிய Science of Higher Living (SoHL) என்கிற புத்தகத்தை முதலில் எடுத்துக்கொண்டோம். காரணம் அதன் ஆசிரியர் நமக்கு நன்கு தெரிந்தவர். எப்போது எந்த சந்தேகம் வந்தாலும் SoHL-ADITI என்னும் முகவரி கொண்ட வாட்ஸ் ஆப் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்காக மாதமிரு முறை அதாவது ஒரு ஞாயிறு விட்டு ஒரு ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 9.00 வரை புத்தகத்தை ஒருவர் படிக்க மற்றவர்கள் அதனைக் கேட்பது. இடை இடையே அவரவர் கருத்து பரிமாற்றங்கள், அனுபவங்கள், பிற புத்தகங்களில் உள்ள விவரங்கள், அவரவர்களின் சொந்த கருத்துகளும் இதில் அடங்கும். வரும் 15.3.2020 தேதி யுடன் ஒரு மீள்பார்வையுடன் இப்புத்தக வாசிப்பு நிறைவு பெறுவதாக உள்ளது.
முக்கிய குறிப்புகள்
1. மனிதப்பிறவியின் நோக்கம் பேரானந்தத்தை அடைவதே ஆகும்
2. பிரம்மத்தின் தன்மை, விளையா ட்டு, சூட்சமம் மற்றும் அதன் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு இப்புத்தகம் உணர்த்துகிறது.
3. ஆசை, காமம், குரோதம், அகங்கா ரம் ஆகியவை குறையக்குறைய பிரம்மத்தின் நோக் கம் தெரிய வரும். இவற்றைக் கடந்து செல்லுதலே பிரம்மத்தை அடையும் வழியாகும்.
4. புற உலகை வெற்றி கொண்டு திருப்தி அடைந்தால் தான் அக உலகை (பிரம்மத்தை) எளிதாக வெற்றி பெற முடியும்.
5. ஆன்மீகம் என்பது எளிமையின் தோற்றமே! அதாவது ஆன்மீகத்தின் மறு அவதாரம் எளிமையே.
6. நல்ல காரியம் செய்தால் நன்மையே தரும். ஆனால் அவ்வாறு எங்கும் நடப்பதில்லை. பிறப்பு என்பது நிகழ்காலமே. பிறப்புக்கு முன் என்ன நடந்தது என்பது யாரும் அறியார். அதுபோல் இறந்த பின்பு நடக்கப்போவதையும் எவரும் அறியார்.
7. ஆன்மீகக் காதலை ஒருமனதாக விழிப்புடன் வளத்துக் கொள்ளுதலே கடவுளை (தன்னை) உணரும் வழி. அதற்கு யோகா, தியானம் போன்றவை உதவியாக இருக்கும்.
8. பசித்து உண்ணுதலை சிறந்தது. பசிக்கும்போது எல்லாப் புலன்களும் பிரகாசமாக, வேகமாக வேலை செய்யும்.
9. பிரம்மத்தின் விளையாட்டு, எல் லாப் படைப்புகளிலும், செயல்களிலும், சிந்தனைகளிலும் பாதி நேர்மறையாகவும் பாதி எதிர்மறையாகவும் படைத்துவிட்டு அதன் விளையாட்டை ரசிப்பதே. அதில்தான் பிரம்மத்தி ற்குப் பேரானந்தம் உண்டாகின்றது.
10. கடவுளிடம் எப்போதும் நற்குணம், நற்சிந்தனை, நற்செயல் இருக்கும்.
11. பிரம்மத்தின் நோக்கம் மனிதனை நல்வழிக்கு கொண்டுவருதலே ஆகும்.
12. மனிதன் தன் செயலில் திருப்தி அடைந்தால் நல்ல செயலாகவும், செயலில் திருப்தி அடையாவிட்டால் தீயசெயலாகவும் எடு த்துக் கொள்கிறான். மனிதன் தீயச்செயலை செய்யாமல் இருக்க விழிப்புணர்வு, பக்தி, உந்துசக் தி தேவை. அதுவே பேரானந்தம் அடையும் வழியாகும். பேரானந்தத்திற்கு எல்லைகள் இல்லை. அதாவது முதலும் இல்லை. முடிவும் இல்லை.
13. கடவுளை (தன்னை) உணர்வதற்கு க் கால அளவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு இளமையிலும், சிலருக்கு முதுமையிலும் பலருக்குப் பல ஜென்மமும் ஆகலாம். அவரவர் கர்ம வினை பொறுத்தே மாறும்.
14. பிரம்மத்திற்கு விரிதலே இயற்கையாய் இருக்கின்றது. அது எப்போதும் குறையாத, வற்றாத, கற்பனைக்கு எட்டாத எல்லையில்லா ஆனந்தம் கொண்டிருக்கும்.
15. உள்ளுக்குள் சக்தி இருப்பதை நாம் எப்போதும் வழிப்போடு இருந்தால் உணரலாம். அதன் மூலம் நம்பிக்கை பிறக்கும். அதனால் ஆன்மீக வளர்ச்சி பெருகும். கர்மவிணைகள் குறையும் . சமாதி நிலை அடைந்து முக்தி பெற்று பிரம்மத்தை அடையலாம்.
*************
No comments:
Post a Comment