MUDRA -
Micro Units Development and Refinance Agency - A VIEW -
முத்ரா திட்டம்
K.K.GANGADHARAN
1. இந்த உலகத்திலே பலருக்கு ஏதாவது ஒரு லட்சியம் இருக்கலாம். அல்லது கனவாகவும் இருக்கலாம். ஏன் ஆசையாகவும்
இருக்கலாம். அனேகமா அந்த லட்சியம் அல்லது கனவு அல்லது ஆசை என்னவா
இருக்கும்னா? ‘தான்’ ஒரு நல்ல தொழில் தொடங்கி அதுக்கு முதலாளியாக வேண்டுமென்ற ஆசை தாங்க. அதன்
மூலமா பலருக்கு வேலை தரணும் என்கிற ஆசையும் இருக்கும்.
சிலருக்கு அபரிவிதமான திறமை இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்ல
படிப்பும் அறிவும் இருக்கலாம். சிலருக்கு கடினமாக உழைக்கின்ற
வலிமை இருக்கலாம். ஆனா இவ்வளவு இருந்தும் பணம் இருக்காது.
‘பணம் பத்தும் செய்யும்னு’ சொல்வாங்க. அந்த பணம் இருந்தா தானுங்க தொழில் தொடங்க முடியும்.
ஒரு முதலாளியாக முடியும். நாலு பேருக்கு வேலையும் தர
முடியும். படிச்சிட்டு வேலை தேடுறதைக் காட்டிலும் தனக்கான
ஒரு வேலையை உருவாக்குவதுதானே பத்திசாலித்தனம். அப்படிப்பட்ட
வாய்ப்பை உருவாக்கித் தருவது தாங்க ‘முத்ரா திட்டம்’. அந்த முத்ரா திட்டத்தைப் பத்திய சில தகவல்களை தெரிஞ்சுக்கலாம்.
‘பணம் பத்தும் செய்யும்னு’ சொல்வாங்க. அந்த பணம் இருந்தா தானுங்க தொழில் தொடங்க முடியும்.
ஒரு முதலாளியாக முடியும். நாலு பேருக்கு வேலையும் தர
முடியும். படிச்சிட்டு வேலை தேடுறதைக் காட்டிலும் தனக்கான
ஒரு வேலையை உருவாக்குவதுதானே பத்திசாலித்தனம். அப்படிப்பட்ட
வாய்ப்பை உருவாக்கித் தருவது தாங்க ‘முத்ரா திட்டம்’. அந்த முத்ரா திட்டத்தைப் பத்தி தாங்க இன்றைய சிறப்பு.
2. பொதுவா சிறு தொழில்களுக்கு
எல்லா வங்கிகளில் அவ்வளவு எளிதா கடன் கிடைப்பதில்லை. சமீபத்திலே நடந்த அரசின்
கணக்கெடுப்பின் படி நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள்
மூலம் முழுப்பயனை பெறுவதில்லை என்பதோடு இதில், 4 சதவீத
தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன
எனவும் தெரியவந்திருக்கு. அரசுவங்கியிலே கடன் கிடைக்காததாலே தொழில் செய்வோடும்
தொழில் தொடங்க நினைப்போரும் தனியார் நிதி நிறுவனங்களிலே கடன் வாங்குகிறாங்க. அங்கு,
அதிக வட்டியில் கடன் பெறுவதாலே அவர்களின் தொழிலே எதிர்பார்த்த
வளர்ச்சியை பெற முடியாத சூழ்நிலை உருவாகுது அந்த இடர்களைப் போக்கத்தான்ங்க மத்திய பட்ஜெட்டில் 'முத்ரா'
வங்கி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஏப்ரல், 8ம் 2015 தேதி ‘முத்ரா யோஜனா’
கடன் திட்டத்தை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார். இதன்மூலம் கார்பரேட் சாராத நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காகவும், சிறு, குறு, நடுத்தர (MSME) தொழில் வளர்ச்சிகளுக்காக
இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY).
இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro
Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது.
முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும்,
இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
3. வேலை தேடுவோரை சுயமாக தொழில் செய்ய ஊக்குவிப்பதே இந்த முத்ரா திட்டத்தின்
நோக்கமாகுங்க. முக்கியமா மக்கள் இந்த கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதோடு, அதனாலே ஏராளமானோர் வேலைவாய்ப்புகளையும், தொழிலையும்
இழந்துள்ளனர் என்பது நிதர்சமான உண்மை தானே. கடல்லே விழுந்து தத்தளிப்போர்க்கு
கரையேற சிறிய படகு கிடைத்தால் எப்படி இருக்கும். அத்தகைய
சூழலில் பலரும் சொந்தமாக தொழில் செய்ய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சரியான
வாய்ப்பை இந்த முத்ரா திட்டம் உதவுகின்றதுன்னு சொல்லுவதே ரொம்பவும் பொருத்தமாக
இருக்கும்.
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக
இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில்
வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது
இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5
கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர் என்பதிலிருந்து
இதன் திட்டத்தின் பலன்களை எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் அறியலாம்.
4. இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில்
குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும்
கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய
முறைகளில் வழங்கபடுகிறது.
• முதல் வகை சிசு (SHISHU)
முத்ரா வங்கி திட்டம், இந்த திட்டம் மூலமாக Rs.50,000 வரை ஒருவர் கடன் பெறலாம்.
• இரண்டாவது வகை கிஷோர் (KISHOR)
முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெற முடியும்.
• மூன்றாவது வகை தருண் (TARUN)
முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக
ஒருவர் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கடன் வசதி பெற முடியும்.
உங்களின் தொழிலில் சரியான கடன் தேவையை நீங்கள்
நிரூபிக்கும் பட்சத்தில், கடன் கொடுப்பது தொடர்பாக
வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுத்த பின்னர், கடன்
வழங்கப்படும். முக்கியமா நீங்க ஒண்ணு தெரிஞ்சுக்கனும் அது என்னான்னா இந்த
திட்டத்தில் சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. கல்வி
கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகன கடன்
இதில் வராது.
5. இத்திட்டத்தின் கீழ் யார் யார் பயன் பெறலாம்? என்பதை
சற்று விரிவாகப் பார்ப்போம்
எல்லா
வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம்
செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல
வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த,
பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார்
சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு
கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல்,
ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைகளுக்கான உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும்
நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
ஆனால்
பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை, கோழி பண்ணை,
விவசாயம், காளான் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது. ஏற்கனவே முதலீடு செய்து
நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை
விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு
மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு
வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும். அதன் அடிபடையில் கடன் கிடைக்கும்.
6. இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை என்னன்னு பார்க்கலாம்
இதில்
கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம்
அல்லது PMMY APPLICATION FORM என இணையத்தின்
மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்றவாறு விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம்
செய்யலாம். விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயது முடிந்திருக்க வேண்டும் இத்திட்டத்தில் ஏற்கனவே
சொல்லியபடி மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர்
உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார். இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும்
கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழிலுக்கான கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை
கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும். நீங்கள் வாங்கும்
கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை வங்கி
கணக்கிட்டு அதனை EMI மூலம் செலுத்த வேண்டும். நீங்கள் கடனை
சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக
நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள்
தொடர்ந்து கடன் வழங்கும். ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு.
ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக
இருக்க கூடாது.
இந்த
கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும்
தனிநபர் ஜாமீன் தேவையில்லை. ஒருவர் பத்து
லட்சம் வரை கடன் பெறலாம்.ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25
நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு
வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு
வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன்
பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிப்பது
நல்லது .இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம்
முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.
7. முத்ரா திட்டத்தில் கடன் பெறுவதற்கு திட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இப்போ திட்ட அறிக்கைன்னா என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டும்.
திட்ட
அறிக்கைன்னா ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை
வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான
எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த
எந்திரங்களின் விலை என்ன? தொழிலை எங்கே ஆரம்பிக்க போறீங்க?
சொந்த இடமா அல்லது வாடகை இடமா? வாடகை இடம்ன்னா
வாடகை ஒப்பந்தம் அவசியம். பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு
மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் இதிலே அடங்கும்.
மேலும்
இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில்
இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீங்க? எத்தனை தவணையில்
கட்டுவீங்க?, எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.
பெரிய
கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability
Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின்
நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட
அறிக்கையிலே இருக்க வேண்டும்.
திட்ட
அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும்
படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பாங்க.
8. முத்ரா திட்டம் விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட
வேண்டும்.
அடையாள
சான்று ( வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்)
இருப்பிட
சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது, மின்சார
கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது)
லேட்டஸ்ட்
புகைப்படம்
இயந்திரம்
மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது
இயந்திரங்களை
வழங்குபவர் விபரங்கள்
தொழிற்சாலை
இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்
சாதி
சான்று
மேற்கண்ட
விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான
சான்றிதல்களை அளிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான கடனைத் திருப்பி
செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்க பட்டுள்ளது.
9. கடன் வழங்கும் வங்கிகள் எவை
எவைன்னு இப்போ தெரிஞ்சுக்கலாம்
27 பொதுத்துறை வங்கிகள்
17 தனியார் துறை வங்கிகள்
31 மண்டல கிராம வங்கிகள் (RRBs)
4 கூட்டுறவு வங்கிகள்
36 நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)
25 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)
அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள்
கிடைக்கும்.
10. முத்ரா அட்டைன்னா என்னான்னு
இப்போ தெரிஞ்சுக்கலாம்.
முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான
முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட்
கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.
கடன் மறுக்கும் பட்சத்தில்
நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம்.
வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க
உள்ள அதிகாரிகளை அணுகலாம். உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.
முக்கிய குறிப்பு
வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்க
வேண்டும் மாலை 4.00 மணிக்கு அனுமதி பெற்று
பார்த்தல் நன்று.மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன்
தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும்.மேலாளரின் முடிவே இறுதியானது.மேலும்
விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில்
பார்க்கலாம்.
***********************************************************