ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதல்- காளை அடக்குதல்
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
அலங்கார ஏறுதழுவுதல் காண
அலங்காநல்லூரில் ஆரவாரங்கள்
பாலமேட்டில் புகுந்த காளைகளைப்
பந்தயத்தில் ஜெயிக்கும் காட்சிகள்
வாடிவாசலில் புறப்பட்ட காளைகளை
வளைத்துப் பிடிக்கும் காளையர்கள்
அமர்க்களம் செய்யும் காளைகளை
அற்புதமாய்க் கவர்ந்திடும் காளையர்கள்
வம்பாய் கிளர்ந்தெழுந்த காளைகளை
அம்பாய்த் துளைத்திடும் காளையர்கள்
திமிறி ஓடும் காளைகளை
திமிலைப் பற்றும்
காளையர்கள்
கொம்பினால் முட்டும் காளைகளை
கைகளால் தடுக்கும் காளையர்கள்
துள்ளிப் பாயும் காளைகளை
துரத்திப் பிடிக்கும் காளையர்கள்
வேங்கையாய்ச் சீறும் காளைகளை
வீரத்தோடு அணைக்கும் காளையர்கள்
தமிழ்மண் வாசமுள்ள காளைகளை
தமிழனாய் நுகரும் காளையர்கள்
வேடிக்கை காட்டும் காளைகளை
விளையாட்டாய் சீண்டும் காளையர்கள்
வேகத்தோடு தாக்கும் காளைகளை
விவேகத்தோடு சமாளிக்கும் காளையர்கள்
சவாலோடு மோதும் காளைகளை
சமாளித்து நெருங்கும் காளையர்கள்
மஞ்சுவிரட்டுக்கு வந்த
காளைகளை
நெஞ்சுரத்தோடு
அடக்கும் காளையர்கள்
சல்லிக்கட்டு முரட்டுக் காளைகளை
மல்லுக்கட்டித் தாவும்
காளையர்கள்
காளையடக்குவது தமிழர் பண்பாடு
காளைகளுக்கும் தமிழனுக்கும் உடன்பாடு
**********
No comments:
Post a Comment