நன்றியைக் காட்டிய நாய்
மதுரை கங்காதரன்
சிறுவர்களுக்கான சிறுகதை
ஒரு ஊரில் ஒரு மனிதன் வாழ்ந்து
வந்தான். அவன் பெயர் ராமு. அவன் மிகவும் ஏழை.
நேர்மையானவன். அதோடு இரக்க குணம் கொண்டவன். நல்ல உழைப்பாளியும் கூட. அவனைப் பார்த்த ஒரு பணக்காரர், ராமுவை தன் தோட்டத்தில் வேலை செய்ய தோட்டக்காரனாக நியமித்தார். ராமு,
எப்பொழுதும் தோட்டத்திலே வேலை செய்து வந்தான். அவன் ஒரு நாள் தோட்டத்தில்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பசியுடன் ஒரு நாய் அவனைப்
பார்த்துக்கொண்டிருந்தது. ராமு இரக்கப்பட்டு அதற்கு சோறு
கொடுத்தான். தினமும் சோறு கொடுக்க... இருவரும்
நண்பர்களானார்கள்.
ஒரு நாள் பணக்காரரின் மகள்
தோட்டத்திற்கு வந்து, அந்த நாயுடன் விளையாடிவிட்டுச்
சென்றாள். ராமுவும் அந்த நாயும் தூங்கிக்
கொண்டிருக்கும், வேளையில் அந்த பணக்காரர் டார்ச்
லைட்டை ராமுவின் முகத்தில் அடித்து எழுப்பினார்.
“ராமு,
எனது மகள் காலையில் இந்த தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது விலை உயர்ந்த
நெக்லேஸ் இங்கு தொலைந்து விட்டது” என்றார். அதற்கு ராமு, “கவலை வேண்டாம் முதலாளி. இந்த நாய் அதனைக் கண்டுபிடித்து
தரும்” என்றான். ராமு சொல்லியது போல அந்த நாய்
நெக்லேஸை கண்டுபிடித்துக் கொடுத்தது. பணக்காரர் மகிழ்ச்சி அடைந்தார். ராமு வையும் நாயையும் தன் பங்களாவிலே
தங்க வைத்தார். அவர் மகள் தினமும் அந்த நாயுடன்
விளையாடி மகிழ்ந்தாள்.
**********************
DOG’S GRATITUDE
In a village, a man lived in a town.
His name was Ramu. He was very poor and honest. But, kindhearted. He was also a
good worker. A rich man saw him and hired Ramu to work in his garden. Ramu always
worked in the garden.
One day, while he was eating in the
garden, a hungry dog was watching him. Ramu took pity on him and gave him rice.
The two became friends and Ramu gave rice daily.
One day the rich man's daughter came
to the garden and left for her house after playing with that dog. While Ramu and
the dog were asleep, that rich man smashed the torchlight into Ramu's face. He
said, "Ramu when my daughter was playing in the garden in the morning, a
high-value necklace got lost here."
Ramu replied, "Don't worry
boss. This dog will find it. ” As Ramu said the dog found the necklace and gave
it to him. The rich man rejoiced. Ramu and the dog stayed in his bungalow. His
daughter enjoyed playing with that dog every day.
**********************
No comments:
Post a Comment