மதுரை
வடக்குமாசி வீதி, மணியம்மை பள்ளி உள்
அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்



25.9.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி, உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கில்
செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்தார். முனைவர் வரதராசன், கவிஞர்கள் இரா.கல்யாண சுந்தரம், கு.கி.கங்காதரன், ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கவிஞர்கள் புலவர் மகா. முருகபாரதி, குறளடியான், பால்
பேரின்பநாதன், அஞ்சூர்யா க.செயராமன், லிங்கம்மாள்,
முனைவர் வரதராசன், இரா.கல்யாண சுந்தரம்,
மா.வீரபாகு, சங்கர நாராயணன், மு.இராமபாண்டியன், சே.அனுராதா, நா.குருசாமி, பொன்பாண்டி, கு.கி.கங்காதரன்,
எ.அலகையா, சாந்தி திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள். கவிதாயினி செ.அனுராதா எழுதிய மதுரை
மாநகர் சிறப்பு கண்ணோட்டம் நூலும், கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய
யாப்பியக்கதிர்கள் ஹைக்கூ (கவிஞர் இரா .இரவி அணிந்துரை நல்கிய நூல்) நூலும்
வெளியிடப்பட்டன. நூல் ஆசிரியர்கள் வருகை தந்த அனைவருக்கும் நூல்களை அன்பளிப்பாக
வழங்கினார்கள். படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம். புகைப்பபடக் கலைஞர்
ஏற்பாடு மதுரைஉலா ரெ.கார்த்தி கேயன். அரங்கம் தந்து உதவியவர் புரட்சிக் கவிஞர்
மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்.அவர்கள்...
வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
அணுவுக்குள் அளவற்ற
ஆற்றலே அதிசயம்
பூவுக்குள் தேனை
வைத்ததே இரகசியம்
விதைக்குள் மரத்தை
அடக்கியதே மகிமை
குறளுக்குள்
தமிழ்ப்பண்பு தாங்கியதே பெருமை
மலரைக் கசிக்கினால்
மணத்தை நுகரலாம்
முக்கனிச் சாற்றால்
இனிமை சுவைக்கலாம்
தங்கத்தை உரசினால்
தரத்தைக் காணலாம்
திருக்குறளை
அலசினால் தமிழ்ப்பண்பு அறியலாம்
வந்தாரை 'வா'வென்று வரவேற்கும் 'விருந்தோம்பல்'
வறியவருக்குத் 'தா'வென்று உணர்த்தும் 'ஈகை'
உயிர்களை அரவனைக்கச்
சொல்லும் 'அன்புடைமை'
இறைவனை அடைய
வழிகாட்டும் 'மெய்யுணர்தல்'
கற்றபடி
கடைபிடிக்கச் சொல்லும் 'கல்வி'
அறநெறியால்
இன்பத்தைக் காட்டும் 'வெஃகாமை'
உண்மைக்கு
உறுதுணையாய் நிற்கும் 'வாய்மை'
சொல்லின் திறத்தை
வழங்கும் 'சொல்வன்மை'
மனித வாழ்வின்
தரமுயர்த்தும் அறத்துப்பால்
பொறுப்புகளை
எடுத்துக் காட்டும் பொருட்பால்
உயிர்களின்
படைப்பினை விளக்கும் இன்பத்துப்பால்
முப்பாலில் தமிழ்ப்பண்பு
மிகுந்துள்ளதே உண்மை.
********
No comments:
Post a Comment