Pages

Wednesday, 4 January 2023

25.12.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - 6 பைந்தமிழ் பாவலர் பாரதி


25.12.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம். 

பைந்தமிழ் பாவலர் பாரதி

இடம்: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளி

தலைமை : பேராசிரியர் சக்திவேல் தலைவர்

முன்னிலை கவிஞர் இரா.இரவி செயலர்

சிறப்புரை பி.வரதராசன் தலைவர் புரட்சிக் கவிஞர் மன்றம். 

 

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "யாக்கைச் சுடர் "கவிதை நூல் வெளியிடப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் இந்நூலை நன்கொடையாக வழங்கினார் நூல் ஆசிரியர். 

மேலும், கவிஞர்கள் இரா.கல்யாணசுந்தரம்,   கு.கி.கங்காதரன்குறளடியான்   மற்றும் பலர் 'பைந்தமிழ் பாவலர் பாரதி' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.சக்திவேல் தலைமையில்கவிஞர்கள் இரா.இரவிஇரா.கல்யாணசுந்தரம்கு.கி.கங்காதரன்குறளடியான், இராமபாண்டியன்அஞ்சூரியா செயராமன்ஜெ.அனுராதாபா.பொன்பாண்டி புலவர் மகா .முருகபாரதி, ,சாந்தி திருநாவுக்கரசுலிங்கம்மாள்மு.ரித்திகா ஸ்ரீசு.பால கிருட்டிணன் ஆகியோர் கவிதை படித்தனர் .கந்தசாமிநா.குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர் . 

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.25.12.2022

 








                       












பைந்தமிழ் பாவலர் பாரதி

-    கவிஞர் இரா. இரவி

பன்மொழி அறிஞன் மகாகவி பாரதி
பண்டைத்தமிழை சிறப்பெனச் செப்பியவன் பாரதி

அறிந்திட்ட மொழிகளில் உச்சம் தமிழ்மொழி
அன்றே பாடியவன் ஆடியவன் பாரதி

சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி
செந்தமிழை மாணவனுக்கு கற்பித்த ஆசான் பாரதி

செந்தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவன்
செந்தமிழ்க் கவிதைகளை தினமும் யாத்தவன் பாரதி

ஹைக்கூ கவிதைகளை அறிமுகம் செய்தவன்
ஹைக்கூ விதையை அன்றே விதைத்தவன் பாரதி

பாமரருக்கும் புரியும் வண்ணம் பா வடித்தவன்
பண்டிதர் தமிழை எளிமைப்படுத்தியவன் பாரதி

தமிழன்னைக்கு கவிதைகளால் அணிகலன் அணிவித்தவன்
தமிழுக்குப் பெருமைகளை பாடலால் ஈட்டியவன்

உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை அன்றே
உணர்ந்த காரணத்தால் போற்றிப் புகழ்ந்தவன் பாரதி

தமிழ்மொழி பேசினால் ஆயுள் நீடிக்கும்
தமிழை ஆராய்ந்து கூறும் ஆராய்ச்சி முடிவு

தமிழை உச்சரித்தால் சுவாச எண்ணிக்கை குறையும்
தரணியில் வாழும் நாள் அதிகரிக்கும் என்கின்றனர்

தமிழின் அருமை பெருமை அறிந்தவன் பாரதி
தமிழுக்கு மணிமகுடம் சூட்டி மகிழ்ந்தவன் பாரதி

பைந்தமிழ் பாவலன் பாரதி என்றும் வாழ்வான்
பைந்தமிழ் போலவே நீடித்து என்றும் வாழ்வான்…
######################################

பைந்தமிழ் பாவலர் பாரதி

முனைவர் இராவரதராசன்

பைந்தமிழ் காத்திடப் பாடுபட்ட புலவர்களில்

 -பகட்டேதும் இல்லாத பாரதியார் அந்நாளில்

கைமேல் பலன்கிட்ட பட்டிதொட்டி மக்களிடைப்

 -பக்குவமாய் எடுத்துரைத்தார் பாட்டுக்கோர் புலவனாய்


மெய்வருத்தம் பாராது மீட்டெடுத்தார் தமிழுணர்வை

 -மேல்நாட்டுப் பாவலரும் மிகையின்றி போற்றினரே

வெய்யில்மழை பாராது வீதியெல்லாம் தன்பாட்டை

 -வேண்டியே கேட்டுமாந்தர் வியந்தனர் அவர்புலமை.


வைகறைப் பொழுதினில் வாசலைப் பெருக்கி

  -வண்ணவண்ணக் கோலமிட்டு வாடாத மலர்தூவி

தொய்வின்றி தெய்வங்களைத் தொழுகின்ற நாட்டிலே

  -தூயதமிழ் நடையிலே துணிவாகப் பரங்கியனை


நையவே புடைத்தன்று நாட்டைவிட் டேவிரட்ட

  -நம்நாட்டு மக்களிடை நாட்டுப்பற் றைவளர்த்து

மெய்யுணர்வைத் தூண்டுகிற மின்னலெனக் கவிபாடி

  -மெட்டுகள் அதிலேற்ற மிளிர்ந்தது தமிழுணர்வு

 

பாரதியார் பாட்டினிலே பைந்தமிழ் நடனமாடும்

  -பாரதத்தின் விடுதலைக்கு பக்கபலம் தமிழ்வாசம்

சாரதியாய் தமிழ்த்தேரை சாதித்தே ஓட்டியவர்

 -சக்தியைப் பாடியவர் சாதிகளைச் சாடியவர்


ஊரறிய உலகறிய உண்மையினை எடுத்துரைக்க

-ஒருநாளும் தயங்காத உரம்கொண்ட நெஞ்சினான் 

பாருக்குள் ஓர்நாடு பாரதப் பொன்னாடென

 -பாலகரை உணர்வோடு பாடவைத்த பைந்தமிழன்.


செந்தமிழ் நாடென்றே செம்மையாய்ப் பாடினார்

  -செவிக்குள் இசைக்கின்ற சிந்துகவி பாடினார்

கந்தனைப் பாடினார் கண்ணனையும் பாடினார்

  -கைலாய மலைசூழும் கார்முகிலைப் பாடினார்


சுந்தரத் தமிழ்காக்க சூளுரைத்துப் பாடினார்

   -சுற்றிவரும் பகையினை சொல்லியே சாடினார்

வந்தவரை வாழவைக்கும் வண்டமிழைக் கண்டவரை

   -வாழியவென் றேவாழ்த்தும் வையகம் உள்ளவரை

 ##############      


 பைந்தமிழ் பாவலர் பாரதி

                  

 
                          புதுக்கவிதை 

                      கு.கி.கங்காதரன் 

பாரதி பிறந்தது எட்டயபுரம் - இவரின் 
புகழோ எட்டாத உயரம் 
பன்மொழிப் பயின்ற அறிஞர் - இவரின் 
பெருமையைப் போற்றி வணங்குவோம்.

புதுக்கவிதைக்கு பாரதி அடித்தளம் 
புத்தம்புதுச்சிந்தனைக்கு ஓடுதளம் 
மரபுக் கவிஞர்களுக்கு போர்க்களம் 
மழலைக் கவிஞர்களுக்கு ஆடுகளம்.

பாரதி கவிகள் அக்னிப்பிழம்பாய் உமிழும்
பாக்களில் மல்லிகையின் மணமும் கமழும்
எதிரிகளுக்கு சிம்மச் சொப்பனமாய்த் திகழும்
அவரது  சொற்களை உச்சரித்தால் அதிரும்.

சுடர்மிகுக் கவிகளைப் படைத்த கவிஞர் 
இடரோடு இதழ்களை நடத்திய இதழாசிரியர்  
பகுத்தறிவை பரப்பிட்ட சமூக சீர்திருத்தர் 
புதுமைப் பெண்ணைச் செதுக்கிய நவீனச்சித்தர்.

பல்சுவை இலக்கியங்களைப் படைத்திட்டப் பாவலர் 
பற்பல தொண்டுகள் ஆற்றிய சேவகர்
விடுதலை வேட்கையை வித்திட்ட தேசியக்கவி 
வீரத்திற்கு மீசை முறுக்கிய முண்டாசுக்கவி 

எட்டு திசைக்கும் தமிழைப் பரப்பியவர் 
ஏழ்மையிலும் கவி படைக்கச்  சளைக்காதவர் 
தாய்மொழித் தமிழ் என்று முழங்கியவர்
தமிழர் பலருக்கு முன்மாதிரியாய் திகழ்பவர் 

************************************



































################
                               





No comments:

Post a Comment